Huawei ஆசிய பசிபிக் ISP உச்சிமாநாடு: 2030 இற்கான ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை உருவாக்குதல்

Share with your friend

ஆசியா பசிபிக் ISP உச்சிமாநாட்டின் போது, ​​Huawei தனது சமீபத்திய மூலோபாயமான ‘Diving into the Asia Pacific, Shaping an All-Optical, Intelligent Internet’ (ஆசிய பசிபிக்கில் நுழைந்து, ஒளியியல், அறிவார்ந்த இணையத்தை வடிவமைத்தல்’ மூலம், (Internet service provider – ISP) இணைய சேவை வழங்குனர் தொழில்துறையை, 2030 இற்கான நுண்ணறிவு உலகத்தின் முக்கியமான அடித்தளமாக மேம்படுத்துகிறது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பங்குதாரர்கள் கலந்து கொண்ட இந்த உச்சிமாநாட்டில், ஆசியா-பசிபிக்கின் தற்போதைய ஒளியியல் போக்குகள், ஹோம் புரோட்பேண்ட், integrated bearer, கிளவுட்டினால் நிர்வகிக்கப்படும் பல்கலை வளாகங்கள் ஆகியவற்றின் முன்னேற்றம், தொழில்துறைக்கு புதிய மதிப்புகளை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டன.

பசுமை, ஒளியியல், நுண்ணறிவான இணைப்பு ஆகியன, ISP துறையில் முக்கிய போக்குகளாக உள்ளதென Huawei நம்புகிறது. மூலோபாய ரீதியாக Network 2030 Framework யினை விபரித்த, ​​Huawei Asia Pacific Enterprise Business இன் CTO, Brandon Wu, “இது AI-சார்ந்த, cubic broadband வலையமைப்பு, உறுதியான அனுபவம், பாதுகாப்பு மற்றும் பசுமைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.

ஆசியா பசிபிக் ISP தொழில்துறையில் ஒரு முக்கிய பங்காளியாகவுள்ள Huawei, அதன் தயாரிப்பு வகைகளில் அது கொண்டுள்ள நன்மைகளைப் பயன்படுத்துகிறது. இது உட்கட்டமைப்பு புத்தாக்க கண்டுபிடிப்புகளை வழிநடத்துவதுடன், datacom, optical network, data center, cloud ஆகியவற்றில் முன்னணி ஒரு முனையிலிருந்து மறு முனைக்கான தீர்வுகளை வழங்குகிறது.

இதேவேளை, அனைத்து ஒளியியல் வலையமைப்புகளும், முழு டிஜிட்டல் பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியடைந்து வரும் ISP தொழில்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை Huawei அறிந்துள்ளது. Huawei நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் தீர்வுகள் மின்சக்தி சேமிப்பு மற்றும் சூழல் மாசு வெளியீட்டைக் குறைப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்பதுடன், ஆசிய-பசிபிக் நிறுவனங்களுக்கு புத்தாக்கங்களை மேற்கொள்வதற்கான ஊக்குவிப்பை ஏற்படுத்தும்.

இத்தீர்வுகள் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் ஒளியியல், அறிவார்ந்த இணையத்திற்கான மாற்றத்தை துரிதப்படுத்தும்.

ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தின் நிலைபேறான வளர்ச்சியை அதிகரிக்க, பசுமை, ஒளியியல், அறிவார்ந்த இணைய உட்கட்டமைப்பு ஆகியவற்றில், Huawei தொடர்ந்து புத்தாக்கங்களை உருவாக்கும். Data center networks, data center interconnection, intelligent computing, public cloud ஆகியவற்றில் விரிவான அனுபவத்துடன், இணையத் துறையில் வாடிக்கையாளர்களுடன் இணைந்து புதிய மதிப்புகளை உருவாக்கும் தனித்துவமான மட்டத்தில் Huawei உள்ளது.

ISP துறையில் Huawei இன் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிய மேலதிக தவல்களுக்கு: https://e.huawei.com/en/huawei/industries/isp 


Share with your friend