IIT தொழில்வாய்ப்புத் தினம் 2023 1,000 IIT மாணவர்களுக்குத் தங்கள் தொழில் வாழ்க்கையைத் தொடங்க உதவுகிறது

Share with your friend

இலங்கையில் பிரித்தானிய உயர்கல்வியில் முன்னோடியாகவும், 33 வருடக் கல்விச் சிறப்புடன் நாட்டின் முதன்மையான IT மற்றும் வர்த்தகப் பல்கலைக்கழகமாகவும் திகழும் Informatics Institute of Technology (IIT), BMICH இல் தனது வருடாந்த IIT தொழில்வாய்ப்புத் தினத்தின் 2023 ஆம் வருடத்திற்கான பதிப்பை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது.

கடந்த வருடங்களைப் போலவே, 1,000க்கும் அதிகமான IIT மாணவர்கள் IIT தொழில்வாய்ப்புத் தினத்தில் கலந்துகொண்டனர், அங்கு அவர்கள் தங்கள் புகழ்பெற்ற நிறுவனங்களில் தொழில் வாய்ப்பைப் பெறுவதற்காக இலங்கையின் 80 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் கருத்தாடல்களை மேற்கொண்டனர். இந்த மாணவர்கள் IIT யில் தங்கள் பட்டப்படிப்பின் 3ம் ஆண்டில் தொழில்துறை வேலைவாய்ப்பை நாடுகின்றனர். IIT இந்த 1 வருட கட்டாயத் தொழில்துறை வேலை வாய்ப்பை அதன் 4 ஆண்டு பட்டப்படிப்புப் பாடவிதானத்தின் ஒரு பகுதியாக இணைத்துள்ளது, ஏனெனில் இது யதார்த்த உலகத் திறன்கள், அறிவு மற்றும் பணியிட இணக்கத்தன்மைக்குத் தேவையான பிரயோகம் ஆகியவற்றை இலகுபடுத்த உதவுகின்றது, இதனால் மாணவர்கள் IIT யில் பட்டம் பெற்ற பிறகு இன்றைய வேகமான பெருநிறுவனப் பணிச் சூழலுக்குத் தடையின்றி மாற இது உதவுகிறது.

IIT தொழில்வாய்ப்புத் தினத்தில் இலங்கையின் ICT மற்றும் வர்த்தகத் துறைகளில் மிகச் சிறந்த நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிறுவனங்கள் பங்கேற்றன. செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திரக் கற்றல் (ML), ரோபோடிக் செயன்முறை ஆட்டோமேஷன் (RPA), வேர்ச்சுவல் ரியாலிட்டி (VR), ஆக்மென்டட் ரியாலிட்டி (AR), பிளாக்செயின், இன்டர்நெட் ஆஃப் திங்க்ஸ் (IoT) சைபர் செக்யூரிட்டி மற்றும் 5ஜி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டவர்களை ICT நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தின.

இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த உயர்கல்வியை வழங்குவதில் முன்னோடிகளில் ஒருவராக, IIT தொழில்வாய்ப்புத் தினம் என்பது IIT இளங்கலைப் பட்டதாரிகளை உள்ளூர் புளூ-சிப், பன்னாட்டு நிறுவனங்கள், மற்றும்- வரவிருக்கும் தொடக்க முயற்சிகள் மற்றும் பிற புகழ்பெற்ற வணிக முயற்சிகள் உள்ளடங்கலாக, நாட்டின் முன்னணி ICT மற்றும் ICT அல்லாத நிறுவனங்களுடன் இணைக்கும் தளத்தை வழங்குகிறது. இந்த நிறுவனங்கள் எப்போதுமே வேலை வாய்ப்புச் சந்தையில் மிகச் சிறந்த திறமைசாலிகளை வேலைக்குச் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன, மேலும் IIT தொழில் தினம், இந்த நிறுவனங்களுக்கு IIT இளங்கலைப் பட்டதாரிகளைச் சந்திக்கவும், நேர்காணல் செய்யவும், அவர்களை வேலைக்கு அமர்த்தவும் சிறந்த வாய்ப்பை வழங்குகின்ற அதே வேளை, அவர்கள் ஏன் அந்தந்த நிறுவனத்தில் பணியாளராக ஆக வேண்டும் என்று இளைஞர்களை ஊக்குவிக்கவும் செய்கின்றது. தொழில்துறை, அளவு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் பங்குபெறும் நிறுவனங்களின் பரந்த தெரிவைக் கருத்திற்கொண்டு, IIT மாணவர்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பல நேர்காணல்களுக்குப் பங்குபற்ற முடியும், மற்றும் அவர்களின் ஒரு வருடப் பயிற்சிக் காலத்தைப் பெற்றுக்கொள்வதற்குத் தங்கள் விருப்பமான நிறுவனத்தைக் கவனமாகத் தேர்வு செய்ய முடியும்.

IIT யின் பிசினஸ் ஸ்கூல் மற்றும் ஸ்கூல் ஆஃப் கம்ப்யூட்டிங் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பிரிதானியப் பட்டங்களை வழங்கும் இலங்கையின் முதல் தனியார் உயர்கல்வி நிறுவனமாக IIT 1990 இல் நிறுவப்பட்டது. இது வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் மற்றும் ராபர்ட் கார்டன் பல்கலைக்கழகம், ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிலிருந்து உள்ளக முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டங்களை வழங்கும் விருது பெற்ற பல்கலைக்கழகமாகும். பல வருடங்களாக, ஆயிரக்கணக்கான உலகத் தரம் வாய்ந்த பட்டதாரிகளை உருவாக்குவதன் மூலம் இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளை வலுப்படுத்துவதில் IIT முக்கியப் பங்காற்றியுள்ளது. IIT இன் 33 வருட காலப்பகுதியில், அது 5,000 பட்டதாரிகளை உருவாக்கியுள்ளது, அவர்கள் தற்போது இலங்கையிலும் உலகெங்கிலும் வசிக்கின்றனர். இந்தப் பட்டதாரிகள், உள்ளூர் மற்றும் சர்வதேசப் பெருநிறுவன மற்றும் அரசு நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்ப மற்றும் வணிகத் தொழில் வல்லுநர்களாகவும், பல்வேறு தொடர்புடைய துறைகளில் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும் சிறந்து விளங்குகின்றனர். அவர்கள் 250 க்கும் மேற்பட்ட பன்னாட்டு மற்றும் உள்ளூர் புளூ-சிப் நிறுவனங்களில் பிரதானமான மூலோபாயப் பதவிகளை வகித்து அவற்றை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டிருக்கின்றனர், அதே நேரத்தில் அந்தந்த நிறுவனங்களின் வளர்ச்சிக்குப் பெரும் பங்களிப்பையும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

முற்றும்


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply