ILO இன் Better Work வேலைத் திட்டத்தை ஆதரிக்கிறது JAAF

Share with your friend

இலங்கையின் ஆடைத் தொழில்துறையின் முன்னணி அமைப்பான கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), ILOவின் Better Work வேலைத் திட்டத்திற்கு தனது முழு ஆதரவையும் தெரிவித்துள்ளது. ILO சமீப காலத்தில் தொழில்துறை பின்னடைவை வலுப்படுத்தவும், Better Work அனுபவங்கள், கருவிகள் மற்றும் கூட்டாண்மை மூலம் மனித வளங்களை மேம்படுத்தவும் Better Work (BW) அறிமுகப்படுத்தியது. ஆடைத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர் சமூகத்திற்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை அடைவதில் இலங்கை ஏற்கனவே உயர் பங்களிப்பை வழங்கி வருவதுடன், இலங்கைக்கு ஏற்றவாறு இந்த BW வேலைத்திட்டம் ஆடைத் தொழில்துறை ஊழியர்களுக்கான நலன்புரி திட்டத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான வழிகாட்டல்களை வழங்குகிறது.

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான ஆடைத் தொழிலில் Better Work கவனம் செலுத்தியுள்ளது, இது நாடு முழுவதும் உள்ள 350 உற்பத்தி ஆலைகள் மூலம் சுமார் ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. தொழில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம், பெண் தொழிலாளர்களுக்கு தலைமைத்துவ திறன் பயிற்சி திட்டங்கள் மற்றும் தொழில் மேம்பாட்டு திட்டங்களை ஏற்பாடு செய்தல் அத்துடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஊக்குவித்து பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கத்தை மேம்படுத்துதல், அவர்களுக்கு தலைமைத்துவம், நிதி கல்வியறிவு பயிற்சி மற்றும் SME தொழிற்சாலை மேம்பாட்டு கருவிகள் வழங்குதல் Better Work கவனம் செலுத்துகிறது.

ஆடைத் தொழில்துறை சர்வதேச அளவில் பெற்றுள்ள நம்பிக்கையும் நற்பெயரும் மனித வளங்களுக்கான நெறிமுறைக் கொள்கைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவம், பணியாளர் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட ஒரு நல்ல பணிச்சூழலை உறுதி செய்வதற்கான எமது உறுதிப்பாட்டை வலுப்படுத்த, உள்ளூர் மற்றும் சர்வதேச பங்குதாரர்களுடன் கூட்டுசேர்வதற்கான ஒரு வாய்ப்பே Better Work என JAAF உறுதியாக நம்புகிறது.

இந்த முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார, ஆடைத் துறையில் ஏற்கனவே உயர் தரத்தை உருவாக்குவதற்கு சிறந்த OSH நடைமுறைகள் மற்றும் தரநிலைகளை ஊக்குவிப்பதில் இத்திட்டம் மற்றுமொரு முக்கிய படியாக பார்க்கப்படுகிறது. இது தொழில்துறையின் முக்கிய பங்குதாரர்களுக்கு ஆடைத் தொழிலுக்கான எமது அர்ப்பணிப்பை தெளிவாக நிரூபிக்கிறது.” என தெரிவித்தார்.

தொற்றுநோய் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலையின் ஆரம்பத்துடன், ஆடைத் தொழில் துறையானது தமது தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனை உறுதி செய்வதற்காக பரந்த அளவிலான திட்டங்களை செயல்படுத்தியது. ஊழியர்களின் குழந்தைகளுக்கு இலவச பாடசாலைப் புத்தகங்கள், மருத்துவ வசதிகள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறப்பு உணவுப் பொதிகளும் வழங்கப்படுகின்றன. இந்த திட்டம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களால் செயல்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆடைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் தங்கள் ஊழியர்களின் தேவைகளுக்கு மிகவும் பொருத்தமான நலன்புரி நடவடிக்கைகளை செயல்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள். ஜூன் 2022 நிலவரப்படி, சுமார் 80% ஆடை உற்பத்தியாளர்கள் ஆண்டு சம்பள உயர்வுக்கு மேலதிகமாக வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளையும் உயர்த்தியுள்ளனர். இது 25% அதிகரிப்பதுடன் இந்த கொடுப்பனவு உயர்வு 2021 முதல் அமலுக்கு வந்தமையும் சிறப்பம்சமாகும்.


Share with your friend