INSEE Cement நிறுவனம் உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி நடவடிக்கைகளை மேம்படுத்துகிறது

Share with your friend

முழுமையான உற்பத்தித் திறனுக்கு உதவவும், இலங்கை முழுவதும் சீமெந்து விநியோகத்தை அதிகரிக்கவும் மேலும் இரண்டு இறக்குமதிக் கப்பல்களைச் சேர்க்கிறது

INSEE Cement – தற்போது 3.6 மில்லியன் தொன் அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதி திறனுடன் இயங்கி வரும் நிலையில், உள்ளூர் சந்தையில் நிலவும் சீமெந்திற்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் மேலும் இரண்டு சரக்கு கப்பல்களை தனது இறக்குமதிச் செயற்பாடுகளில் சேர்த்துள்ளது. இலங்கையின் ஒரேயொரு உள்ளூர் சீமெந்து உற்பத்தியாளர் என்ற வகையில், INSEE ஆனது, இலங்கை ரூபாயின் வீழ்ச்சியினால், நாட்டிலுள்ள ஏனைய போட்டி நிறுவனங்களின் சீமெந்து இறக்குமதியின் திடீர் வீழ்ச்சி ஏற்படுத்தியுள்ள வழங்கல் சங்கிலி பற்றாக்குறையை பல வாரங்களாக பொறுப்புடனும், உகந்த முறையிலும் கையாண்டு, வழிநடத்தி வருகின்றது.

“இலங்கையின் கட்டுமானத் துறையானது வெற்றிகரமான மீண்டெழும் பாதையில் தொடர்ந்து பயணிப்பதை உறுதி செய்வதற்காக INSEE Cement அதிகபட்ச உற்பத்தித் திறனுடன் தொடர்ந்து இயங்குகிறது” என INSEE Cement நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான குஸ்டாவோ நவாரோ அவர்கள் தெரிவித்தார். “உள்நாட்டுச் சந்தை தற்போது அனுபவிப்பது செயற்கையாக எழுந்துள்ள ஒரு பற்றாக்குறையாகும். இறக்குமதியாளர்கள் தங்கள் கையிருப்புக்களை சந்தையில் வெளியிட மறுத்ததால் இந்த நிலைமை முதலில் உருவாக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இப்போது, சீமெந்து ஏற்றுமதியாளர்கள் தங்கள் சொந்த நாடுகளில் நிலவும் தேவையைப் பூர்த்தி செய்யப் போராடுவதால், தடைப்பட்டுள்ள வழங்கல் சங்கிலியை மீட்டெடுக்க போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, இன்று அரசாங்கம் கட்டுப்பாட்டு விலையை தளர்த்தியுள்ள போதிலும், இலங்கையில் சீமெந்து இறக்குமதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எங்கள் இறக்குமதி நடவடிக்கைகளுக்கு மேலும் இரண்டு கூடுதல் இறக்குமதி கப்பல்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் இந்த சவாலை எதிர்கொள்ள INSEE மீண்டும் தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.  

இரண்டு கூடுதல் கப்பல்களைத் தவிர, INSEE Cement தனது துரித இறக்குமதி, வழங்கல் மார்க்கங்கள் மற்றும் மொத்த காவி வாகனத் தொகுதி ஆகியவற்றை மேம்படுத்தி, தனது விசுவாசம் மிக்க வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையின்றி சந்தை விநியோகத்தை உறுதி செய்து வருகிறது. அத்துடன் இப்போது INSEE Cement ஐ நாடும் போட்டி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கும் அவர்களின் கட்டுமானத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவ வருகிறது.  

“இங்கே உள்நாட்டில் தயாரிக்கப்படும் INSEE Cement தயாரிப்புகளான சங்ஸ்தா மற்றும் மகாவலி மெரின் பிளஸ் ஆகியவற்றின் மீதான விசுவாசத்தில் இலங்கை மக்களின் உணர்வை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த இறக்குமதி நெருக்கடியின் போது அந்த உணர்வு தொடர்பான நுண்ணறிவு அதனை நிரூபித்துள்ளது,” என்று விற்பனை, சந்தைப்படுத்தல் மற்றும் புத்தாக்கத்திற்கான நிறைவேற்று அதிகாரம் கொண்ட துணைத் தலைமை அதிகாரியான ஜான் குனிக் அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில் “ஏற்றுமதி செய்யும் நாடுகள் இலங்கைக்கு மொத்த அளவிலான மற்றும் பொதி செய்யப்பட்ட சீமெந்தை தமது சந்தர்ப்பத்திற்கேற்றவாறு வர்த்தகம் செய்கின்றன. இதனால் இறக்குமதி செய்யப்படும் சீமெந்தினை நாம் நம்பியிருப்பது குறைக்கப்படல் வேண்டும். நாட்டில் தற்போது நிலவும் சீமெந்துப் பற்றாக்குறையை அதிகபட்ச உற்பத்தி மற்றும் இறக்குமதித் திறனுடன் நிவர்த்தி செய்யும் அதே வேளையில், புத்தளம் மற்றும் காலி ஆகிய இரு உற்பத்தி ஆலைகளிலும் உள்நாட்டு உற்பத்தியை மேலும் அதிகரிப்பதிலும், மேம்படுத்துவதிலும் INSEE Cement கவனம் செலுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எங்களின் வாக்குறுதியை நாங்கள் எப்பொழுதும் வழங்கியுள்ளோம். இந்த சீமெந்து பற்றாக்குறையை இலங்கை விரைவில் சமாளிப்பதை உறுதி செய்வதன் மூலம் அதை தொடர்ந்தும் செய்வோம்,” என்று குறிப்பிட்டார். 


Share with your friend