உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட வர்த்தகத்திலிருந்து வர்த்தகத்திற்கு (B2B) மற்றும் வர்த்தகத்திலிருந்து நுகர்வோருக்கு (B2C) e-commerce தீர்வுகள் மற்றும் ஒரு முன்னணி மென்பொருள் மேம்பாட்டு நிறுவனமான Sana Commerceஇன் ஒரு பகுதியான ISM APAC இந்த வருடம் மூன்றாவது முறையாக இலங்கையில் சிறந்த பணிபுரிவதற்கு ஏற்ற 40 இடங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டலிருந்து ஒவ்வொரு ஆண்டும் இலங்கையில் 10 சிறந்த சிறு மற்றும் நடுத்தர அளவிலான நிறுவன தொடர்பான தகவல் தொழில்நுட்ப சேவைகள் வழங்கும் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
ISM APAC அண்மையில் 2021ஆம் ஆண்டில் பணிபுரிவதற்கான சிறந்த நிறுவனங்களுக்கான தரவரிசையில் தொடர்ச்சியாக நான்காவது முறையாக தனது இடத்தினைப் பெற்ற பெருமையைத் தேடிக்கொண்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த ISM APACஇன் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரியந்த பெத்மகே, ‘மிக சிறந்த பணிவுடனும் மரியாதையுடனும் தான் நாட்டின் சிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியதற்காக நாங்கள் மீண்டும் அங்கீகரிக்கப்பட்டுள்ளோம். எமது ஊழியர்களுக்கு முழமையான பாதுகாப்பான சூழலை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டிற்கு கிடைத்த ஒரு சான்றாகும், இதில் ஊழியர்கள் தொழில்முறை முன்னேற்றத்தையும் சிறப்பையும் அடைய முடியும், அத்துடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பட்ட தொழில்நுட்ப தீர்வுகளை வழங்க முடியும். நாங்கள் சாதாரண ஊழியர்களை கொண்டிருக்கவில்லை. எதிர்கால தலைவர்களின் வீடு என்று வர்ணிக்கக்கூடிய ISM APACஇன் குறிக்கோளானது, இந்த தலைவர்களை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதே எமது நோக்கமாகும்.’ என தெரிவித்தார்.
COVID-19 தொற்றுநோய் காரணமாக, ISM APACஇன் செயல்பாட்டு மாதிரியில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இச் செயற்பாட்டு மாதிரியானது உள்நாட்டு மற்றும் திறந்த கலாச்சார விதிமுறைகளின் ஒரு பகுதியாக இருந்துள்ளதுடன், இது நிறுவனத்திற்கு தற்போது நடைமுறையில் உள்ள ஒரு நேர்மறையான, பயனுள்ள மற்றும் இரட்டை கடமை (Hybrid) முறையாக மாற்றியது. இந்த மாற்றத்தின் வெற்றியில் நிறுவனத்தை இயக்கும் தொழில்முனைவோருக்கு, முடிவுகளை அடிப்படையாகக் கொண்ட மற்றும் கற்றல் மனநிலையை உருவாக்குவதற்கான பங்கையும் இது வகிக்கிறது.
இதன் போது கருத்து தெரிவித்த ISM ஈ-குழுமத்தின் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர், Sana Hosting Operations பிரதானி விஜேசுந்தர, ‘அதிக வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் வலுவான மற்றும் மகிழ்ச்சியாக கடமையாற்றும் ஊழியர்கள் ஒரு முக்கிய காரணியாக இருக்க முடியும். எங்கள் வாடிக்கையாளர்களின் யதார்த்த பிரச்சினைகளுக்கு தனித்துவமான தீர்வுகளை வழங்க எங்களுக்கு உதவும் வேகமான தொழில்நுட்ப தீர்வுகளாக e-commerceஐ மொழிபெயர்க்கும் செயலை உள்ளடக்கிய ஒரு பணி கலாச்சாரத்தை உருவாக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்கிறோம்.’ என தெரிவித்தார்.
ISM APACஇல் அதன் 7 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாட்டின் போது, அவர்களின் உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக முன்னுரிமை பயிற்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டங்கள் போன்ற பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது, அத்துடன் ஊழியர்களுக்கு, சந்தை போட்டித் தன்மைக்கு ஏற்ற நிகரான ஊதியம் வழங்குதல் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட ஊழியர்களுக்கான அதிக வாய்ப்புக்கள் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. நெகிழ்ச்சியுடனான நீண்டகால வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ISM APAC தீவிரமாக செயல்பட்டு வருகிறது, இது தொடர்ச்சியாக நேர்மறையான வளர்ச்சியை நிரூபித்துள்ளது, 21ஆம் நூற்றாண்டின் தலைமுறையினருக்கு, குறிப்பாக 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குகிறது. இது பணிபுரியும் சூழலில் அதன் பெருமையையும் மற்றும் பணிபுரியும் இடத்தின் திறன்களையும் பன்முகத்தன்மையையும் மேலும் நிரூபிக்கிறது.
நிறுவனத்தின் தனித்துவமான அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த ISM APACஇன் நிதி பணிப்பாளர் தரங்க பெரேரா, ‘தொழில்நுட்பம் நமது பொருளாதாரத்திற்கு பங்களிக்கும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். ஒரு வலுவான பணியிட கலாச்சாரத்தில் மதிப்பு கூட்டப்பட்ட, புத்தாக்க தீர்வுகளை வழங்கும் ஒரு நிறுவனத்தில் பணியாற்ற எங்கள் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆர்வமாக உள்ளனர் என்றும் கூறலாம். உயர்மட்ட நபர்களுடன் பணியாற்றுவதற்கும், வலுவான கலாச்சாரத்தைக் கொண்ட ஒரு நிறுவனத்தின் ஆதரவோடு முன்னேறுவதற்கான சூழலையும் தைரியத்தையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். அதனால்தான் மிகவும் திறமையான ஊழியர்கள் தங்கள் பணிச்சூழலுக்கு அப்பால் சென்று தங்கள் கடமைகளைச் செய்ய எப்போதும் தூண்டப்படுகிறார்கள்,’ என அவர் கூறினார்.
ந-உழஅஅநசஉந துறையில் ஒரு முன்னணி நிறுவனமான ISM APAC> SAP மற்றும் Microsoft Dynamic தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள விநியோகஸ்தர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு ஒரு தீர்வை வழங்குகிறது. இணையத்தளம் மூலமான விற்பனை மேம்பாடு, வடிவமைப்பு, e-commerce உத்திகள் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் ஆகியவற்றில் நிறுவனத்தின் சிறந்த அறிவு மற்றும் நிபுணத்துவம் அதன் வாடிக்கையாளர்களின் இலக்குகளை அடைய போட்டி தன்மை உள்ளிட்ட பல சேவைகளை வழங்குகிறது. அதன் தாய் நிறுவனமான ISM e-Group, Sana Commerce என மீண்டும் பெயர் இலச்சினை செய்துள்ளதுடன் எதிர்வரும் மாதங்களில் ISM APAC என மறுபெயரிட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.