JAAF இன் 19வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மீண்டும் தலைவர் ஷரட் அமலியன் மற்றும் செயற்குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது

Share with your friend

இலங்கையை உலகின் முதலாம் ஆடை உற்பத்தி நாடாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி பிரவேசிக்கும் கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF), அதன் 19வது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இதில் ஷரட் அமலியன் அதன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை, பிரதித் தலைவர்களாக சைபுதீன் ஜாபர்ஜி மற்றும் பீலிக்ஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர்.

வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் அமலியன்,”2025க்கு அப்பால் ஆடைத் தொழிலை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு புதிய தலைமுறை தைரியமான மற்றும் ஆர்வமுள்ள இளம் தலைவர்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை JAAF ஏற்றுக்கொள்வதாக வலியுறுத்தினார். கடந்த ஆண்டு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், பல ஆண்டுகளாக JAAF தக்கவைத்து வரும் நம்பகத்தன்மை, சவாலான மற்றும் முன் எப்போதும் இல்லாத சமூக பொருளாதார நிலைமையில் போட்டியிடுவதற்கு அரசாங்கம், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளுடன் நெருக்கமாக பணியாற்றுவதில் தொழில்துறைக்கு மகத்தான ஆதரவை வழங்கியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பொருளாதாரப் பின்புலம், வியாபாரம் செய்வதற்கு இது ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்றும் அவர் கூறினார்.

“2022ஆம் ஆண்டு இலங்கைக்கு சவாலான மற்றும் தீர்க்கமான ஆண்டாகும். ஜவுளி மற்றும் ஆடைத் தொழிலாக, கடந்த ஆண்டு இறுதியில் 5.5 பில்லியன் ரூபாய் வருவாயை எட்டியதில் பெருமைப்பட வேண்டும். இந்தச் சாதனையை அடைவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட நாடு முழுவதும் உள்ள எங்கள் உற்பத்தி ஆலைகளில் உள்ள எங்கள் பங்குதாரர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.” என அமலியன் கூறினார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவு இன்றியமையாத காரணியாக இருப்பதால், 2023 ஆம் ஆண்டிற்கான நம்பிக்கையான கண்ணோட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்பதையயும் அவர் சுட்டிக்காட்டினார். 

2023 மற்றும் அதற்குப் பின்னரும் இத்துறையில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கியமான கொள்கைகளை எடுத்துரைத்த JAAF இன் செயலாளர் ஜெனரல் யொஹான் லோரன்ஸ், 2022 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதிக்கு குறிப்பிடத்தக்க அதிர்ஷ்டமான ஆண்டாக இருந்தது, ஆனால் 2022 ஆம் ஆண்டின் கடைசி மாதங்களில் ஆடை ஏற்றுமதியில் பின்னடைவுகள் சிலவற்றைக் கண்டது. “உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அடைக்களஞ்சியங்களில் நுகர்வுப் பொருட்களின் அதிகப்படியான இருப்பு மற்றும் உலகளாவிய விநியோக வலைப்பின்னல்களில் உக்ரைன்-ரஷ்யா போரின் தாக்கம் ஆகியவை இதற்குக் காரணமாகும். 5.5 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதியுடன் 2022 ஆம் ஆண்டை முடிக்க முடிந்தது. முந்தைய ஆண்டுகளை விட சுமார் 10% அதிகரிப்பாகும்.

இலங்கையின் 10% உடன் ஒப்பிடுகையில், பங்களாதேஷின் 45 பில்லியன் அமெரிக்க டொலர் ஆடை ஏற்றுமதித் துறை 28% பாரிய வளர்ச்சியைக் காட்டுவதாக அவர் இங்கு குறிப்பிட்டார். “பங்களாதேஷின் இந்த வளர்ச்சியானது, ஏனைய போட்டி நாடுகள் இலங்கையிடமிருந்து சந்தைப் பங்கைப் பெறுவதைக் காட்டுகிறது. உலகளாவிய வர்த்தகத்தில் 1% முதல் 2% வரை மட்டுமே நாங்கள் கைப்பற்ற முயற்சிக்கிறோம், ஆனால் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் இது குறையும். பங்களாதேஷ் அபிவிருத்தியடைந்து வரும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டனிற்குள் பிரவேசிப்பதற்கு வரம்புகுள் இருப்பதாகவும், இலங்கையின் GSP+ மற்றும் DCTS திட்டங்களின் கீழ், எமது ஏற்றுமதியில் 50% மட்டுமே வரியின்றி அந்த நாடுகளுக்கு அனுப்ப முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கை அபிவிரருத்தியடைந்து வரும் நாடாக இருப்பதால், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ மற்றும் பிரிட்டனின் அபிவிரருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தக முறைமைத் திட்டத்திற்கான (DCTS) Rules of Origin தளர்த்துவதற்கான விடயங்களை JAAF தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முன்வைத்தமை குறித்து விளக்கினார். இலங்கை ஆடைகளுக்கு இந்தியாவில் வரியில்லா சலுகை 8 மில்லியன் ஆடைகளுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், ஒரு ஜோடி காலுறைகள் அல்லது கையுறைகள் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும்போது, ​​அவை இரண்டு துண்டுகளாகக் கணக்கிடப்படுவதால் சில அநீதிகள் ஏற்படுவதாகவும் அவர் இங்கு மேலும் குறிப்பிட்டார். முழு ஒதுக்கீட்டையும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கான முயற்சிகளுக்கு வர்த்தகத் துறைக்கு நன்றி தெரிவித்த லோரன்ஸ், JAAF 2023 ஆம் ஆண்டில் மிக உயர்ந்த FOB மதிப்புகளுக்கு ஒதுக்கீட்டைப் பயன்படுத்த விரும்புகிறது என்று வலியுறுத்தினார்.

JAAF இன் பங்குதாரர்களான Apparel Accessory Manufacturers Association (FAAMA), Sri Lanka Apparel Sourcing Association (SLASA), Sri Lanka Chamber of Garment Exporters (SLCGE) மற்றும் Free Trade Zone Manufacturers Association (FTZMA) (FTZMA) ஆகியன இந்த வருடாந்த பொதுக் கூட்டத்தில் பங்குபற்றியுள்ளன.


Share with your friend