செலான் வங்கியின் டிக்கிரி கணக்குதாரர்களுக்கு சவோய் 3D திரையரங்கில் ‘Jurassic World – Dominion’ விசேட காட்சியை பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. டிக்கிரி சிறுவர்களால் நிரம்பியிருந்த இந்த திரையரங்கில், தமது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இந்தத் திரைப்படத்தைக் கண்டு களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.
![](https://eyeviewsl.com/wp-content/uploads/2022/07/tikiri_jurassic_world_PR-1024x403.jpg)
தற்போதைய சூழலில் சிறுவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட களிப்பூட்டும் அம்சங்களில் ஈடுபடும் வாய்ப்புகளே காணப்படுகின்றன. நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் குடும்பத்தாருடன் இணைந்து நேரத்தை செலவிடுவதும் குறைந்துள்ளது. தமது பெற்றோருடன் மகிழ்ச்சிகரமாக பொழுதை செலவிடும் வாய்ப்பை சிறுவர்களுக்கு வழங்குவது செலான் டிக்கிரியின் நோக்காக அமைந்திருந்ததுடன், நாட்டில் காணப்படும் முன்னணி சிறுவர் சேமிப்புக் கணக்கை பேணுகின்றமைக்காக அவர்களுக்கு வெகுமதி வழங்குவதும் இலக்காகும்.
விறுவிறுப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், திரையரங்கில் சமூக ஊடக போட்டியொன்றை செலான் வங்கி ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது செலான் டிக்கிரி சிறார்களுக்கு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த உருவமைப்புகளுடன் செல்ஃபி ஒன்றை எடுத்தை அதனை #TikiriMovies உடன் அப்லோட் செய்யுமாறு கோரப்பட்டிருந்தது. இதில் 10 வெற்றியாளர்களுக்கு டிக்கிரி அன்பளிப்புகள் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று வழங்கப்பட்டிருந்தன.
சிறுவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதில் செலான் டிக்கிரி முன்னோடியாக அமைந்துள்ளதுடன், அவர்களின் கல்வி, ஆர்வம் மற்றும் பொழுதுபோக்கு செயற்பாடுகள் போன்றவற்றை மேம்படுத்துவதற்கு பல்வேறு அனுபவங்களை வழங்குவதாக அமைந்துள்ளது.