‘Know Your Neethi’ சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம் 

Share with your friend

பதுளை மாவட்ட மக்களை வலுப்படுத்தும் சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், ஐ.நா. அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் UNICEF Sri Lanka ஆகிய அமைப்புகளினால் இணைந்து செயற்படுத்தப்படுகின்ற, நீதி அமைச்சின் ஒத்துழைப்புடனான நீதித்துறைக்கான அனுசரணை திட்டமானது ‘Know Your Neethi’ எனும் தொனிப்பொருளின் கீழ், சட்ட உதவி மற்றும் விழிப்புணர்வு முகாம்களின் முதல் கட்டமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் தொடக்க முகாம் 2025 ஓகஸ்ட் 01 மற்றும் 02 ஆம் திகதிகளில் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இலவச சட்ட ஆலோசனைகள், அரச சேவைகள் மற்றும் பங்கேற்புடனான சட்ட விழிப்புணர்வு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் தனித்துவமான வாய்ப்பை அங்குள்ள சமூகத்தினர் பெறவுள்ளனர்.

இந்நிகழ்வு சட்டத்திற்கான அணுகலை மேம்படுத்தவும், சட்ட விழிப்புணர்வை ஊக்குவிக்கவுமான நோக்கத்தை கொண்டுள்ளது. இது குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள், பெண்கள், இயலாமைகளைக் கொண்டுள்ள நபர்கள் மற்றும் சிறுபான்மை இனத்தவர்களை மையப்படுத்தி இடம்பெறுகின்றது. தாம் பயன்படுத்தும் மொழிகளில் நேரடியாக சட்ட சேவைகளை மக்களுக்கு கொண்டு செல்வதன் மூலம், சட்ட அறிவை அடைவதில் காணப்படும் இடைவெளிகளை நிரப்பி, தங்கள் உரிமைகளை அறிந்து கொள்ளவும், அவற்றை நடைமுறைப்படுத்தவும் ஒவ்வொரு தனிநபர்களையும் வலுவூட்டுவதை இந்த முகாம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளவை:

  • நேரடி சட்ட ஆலோசனை நிலையங்கள்
  • அரச நிறுவனங்களின் தகவல் தளங்கள்
  • பங்கேற்புடனான விளையாட்டுகள் மற்றும் நாடக நிகழ்வுகள்
  • உளவள மற்றும் சமூகஆதரவு சேவைகள்

‘Know Your Neethi’ பிரசாரத் திட்டமானது, JURE திட்டம் கொண்டுள்ள பரந்துபட்ட பணிநோக்கத்தின் ஒரு அங்கமான, சட்டத்தின் ஆட்சி வலுப்படுத்தப்பட்டு, அனைவருக்கும் நீதிக்கான சம வாய்ப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

JURE திட்டம் பற்றி: 

நீதித் துறைக்கான அனுசரணை (Support to Justice Sector Project – JURE) திட்டமானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன், UNDP மற்றும் UNICEF ஶ்ரீ லங்கா அமைப்புகளினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற, நீதியமைச்சின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். JURE திட்டம், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. இது நவீன, செயல்திறனைக் கொண்ட, உள்ளீர்க்கப்பட்ட விடயங்களுடன் கூடிய நீதித் துறையை கட்டியெழுப்பும் மூன்று கட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளது. ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) முக்கிய திட்டங்களின் கீழ் செயற்படும் JURE திட்டமானது, இலங்கையின் நீதித் துறைக்கு முழுமையான ஆதரவை வழங்கும் ஒரு முழுமையான திட்டமாகும். இது, முக்கிய நீதித்துறை நிறுவனங்கள் மற்றும் பங்குதாரர்களின் நெருக்கமான ஆலோசனைகள் மற்றும் கூட்டுச் செயற்பாடுகள் மூலம் செயற்படுத்தப்படுகிறது.

UNDP பற்றி: 

UNDP ஆனது வறுமை, சமத்துவமின்மை மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்த்துப் போராடும் ஐக்கிய நாடுகளின் முன்னணி அமைப்பாகும். இது 170 நாடுகளில் நிபுணர்கள் மற்றும் கூட்டாளர்களுடன் இணைந்து, மக்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான நீடித்த தீர்வுகளை ஏற்படுத்துகிறது.

மேலதிக தகவல்களுக்கு: www.undp.org/srilanka அல்லது சமூக ஊடகங்களில் பின்தொடர: @UNDPSriLanka
தொடர்புக்கு: Socialmedia.lk@undp.org | 0779804188 | Ext. 1501 சமூக ஊடகங்கள்: UNDP on X | Facebook | Instagram | LinkedIn


Share with your friend