முன்னணி காப்புறுதி சேவைகள் வழங்குநரான அலியான்ஸ் லங்கா, இலங்கையில் காணப்படும் சிறந்த 3 பொதுக் காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஒட்டு மொத்த காப்புறுதி சேவைகள் வழங்குநர்களில் சிறந்த 10 நிறுவனங்களில் ஒன்றாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ட் ஃபினான்ஸ் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டு LMD இனால் வெளியிடப்பட்டிருந்த இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமங்கள் 2022 வரிசையில் அலியான்ஸ் லங்கா இவ்வாறு தரப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 2019 ஆம் ஆண்டு முதல் இந்த தரப்படுத்தல்களில் அலியான்ஸ் லங்கா அடிக்கடி தரப்படுத்தப்படுவதுடன், இதனூடாக நிறுவனத்தின் வலிமை மற்றும் சந்தை நிலை ஆகியன பிரதிபலிக்கப்பட்டிருந்தன. மேலும், வாழ்க்கையில் மிகவும் பெறுமதி வாய்ந்த அம்சங்களை பாதுகாப்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்வதாகவும் இந்த தரப்படுத்தல் அமைந்துள்ளது. இலங்கையின் நுகர்வோர் வர்த்தக நாம கட்டமைப்பு தொடர்பில் இந்த தரப்படுத்தல்கள் பரிபூரண ஆய்வை மேற்கொள்வதுடன், பகுப்பாய்வு செய்து தரப்படுத்துவதாக அமைந்துள்ளது. இறுதித் தரப்படுத்தல்கள் தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக ஆழமான சந்தை ஆய்வு மற்றும் பொதுவில் கிடைக்கும் நிதித் தகவல்களுடன், நுகர்வோர்களின் உள்ளார்ந்த தகவல்கள் போன்றன பயன்படுத்தப்படுகின்றன.
இந்த சாதனை தொடர்பில் அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிடெட் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மங்கள பண்டார கருத்துத் தெரிவிக்கையில், “இந்தத் தரப்படுத்தல்களில் நாம் உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த நுகர்வோர் வர்த்தக நாமங்கள் வரிசையில் அலியான்ஸ் லங்கா தரப்படுத்தப்பட்டுள்ளமையினூடாக, எமது வாடிக்கையாளர்களின் மீது நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்புக்கான எமது கடின உழைப்பு போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் பிரதான காப்புறுதி சேவை வழங்குநர்களில் ஒன்றாக, டிஜிட்டல் மயமாக்கம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தி வருவதுடன், ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை ஏற்படுத்திக் கொடுப்பதிலும் கவனம் செலுத்துகின்றோம். இதனூடாக பிரத்தியேக வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. எனவே, இலங்கையின் மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்களில் ஒன்றாக நாம் கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
திறன் மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாக அணியினால் வழிநடத்தப்படுவதுடன், சர்வதேச நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனத்தின் வலிமையுடன் இயங்கும் அலியான்ஸ் லங்கா, வாழ்க்கையின் முக்கியமான விடயங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் இயங்குகின்றது. கொவிட்-19 கட்டுப்பாடுகள் உச்ச கட்டத்தில் காணப்பட்ட, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது வாடிக்கையாளர்களுக்கான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், சுமார் 500,000 உரிமைகோரல்களை அலியான்ஸ் லங்கா பெற்றிருந்ததுடன், அவற்றை நிறைவேற்றியிருந்தது. எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் ஒப்பற்ற தீர்வுகளினூடாக மக்களுக்கு வலுவூட்டுவதற்காக நிறுவனத்தினால் பல்வேறு இதர திட்டங்களும் அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. மாறி வரும் உலகில் ஆயுள் மாற்றும் காப்புறுதியை பொருந்தச் செய்யும் வகையில் இவை அமைந்திருக்கும்.
உலகின் முன்னணி காப்புறுதி சேவை வழங்குநர்கள் மற்றும் சொத்துக்கள் முகாமையாளர் சேவைகளை வழங்கும் நிறுவனங்களில் ஒன்றாக அலியான்ஸ் குழுமம் திகழ்கின்றது. 70க்கும் அதிகமான நாடுகளில் 126 மில்லியன் தனியார் மற்றும் கூட்டாண்மை வாடிக்கையாளர்களைத் தன்வசம் கொண்டுள்ளது. அலியான்ஸ் வாடிக்கையாளர்கள் பரந்தளவு பிரத்தியேக மற்றும் கூட்டாண்மை காப்புறுதி சேவைகளினூடாகவும், பரந்தளவு சொத்து, ஆயுள் மற்றும் சுகாதாரத் திட்டங்களினூடாகவும் பயன் பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், உதவிச் சுவைகள், கடன் காப்புறுதிகள் மற்றும் சர்வதேச வியாபார காப்புறுதிகளையும் வழங்குகின்றது. தனது காப்புறுதி வாடிக்கையாளர்கள் சார்பாக 809 பில்லியன் யூரோக்களை நிர்வகிப்பதுடன், உலகின் மாபெரும் முதலீட்டாளர்களில் ஒன்றாக அலியான்ஸ் திகழ்கின்றது. மேலும், நிறுவனத்தின் சொத்து முகாமையாளர்களாக PIMCO மற்றும் Allianz Global Investors (Allianz GI) ஆகியன திகழ்வதுடன், 1.9 ட்ரில்லியன் யூரோக்களுக்கு அதிக பெறுமதி வாய்ந்த மூன்றாம் தரப்பு சொத்துக்களை நிர்வகிக்கின்றது.அலியான்ஸ் லங்கா என்ற ஒருங்கிணைந்த பெயரில் அழைக்கப்படுகின்ற Allianz Insurance Lanka மற்றும் Allianz Life Insurance Lanka ஆகிய நிறுவனங்கள், காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வர்த்தகத்தில் உலகளாவில் நிதிச்சேவைகளை வழங்கி வருகின்ற ஜேர்மனி Allianz SE நிறுவனத்தின் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனமாகும். நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் ஆபத்து வாய்ப்புக்கள் மற்றும் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலம் தனது உலகத்தரம் வாய்ந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்கி அவர்களின் வணிக மூலோபாயத்திற்கு ஆதரிப்பதில் பெருமிதம் கொள்கிறது.