Mark and Comm இலங்கையின் ஊடகத் துறையை வலிமைப்படுத்துவதற்காக அமைச்சருடன் உரையாடல்களை மேற்கொண்டதனூடாக தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்துள்ளது

Share with your friend

ஜனநாயகத்தை உறுதி செய்யவும், பொது மக்களுக்கு சரியான தகவல்களை வழங்குவதற்கும் உறுதியான மற்றும் சுயாதீனமான ஊடகத் துறை என்பது அத்தியாவசியமானது. இலங்கையின் ஊடகப்பரப்பை வலிமைப்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை Mark and Comm மீள உறுதி செய்துள்ளது. பெப்ரவரி 20ஆம் திகதி, அதன் முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்து, இலங்கையில் ஊடகத்துறையின் நிலை தொடர்பான பரந்த அறிக்கையை சமர்ப்பித்திருந்ததுடன், காணப்படும் சில பிரதான வாய்ப்புகள் பற்றியும் கலந்துரையாடியிருந்தார்.

    Mark and Comm Ltd முகாமைத்துவ பணிப்பாளர் தன்சில் தாஜுதீன் (இடம்) அறிக்கையை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி. நளிந்த ஜயதிஸ்ஸவிடம் சமர்ப்பிக்கின்றார்

    மும்மொழிகளிலும் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, மும் மொழிகளையும் சேர்ந்த பல ஊடகங்களின், ஊடக நிபுணர்களின் கருத்துகளை உள்ளடக்கியுள்ளதுடன், மீட்சியான மற்றும் முன்னேற்றமான துறையை கட்டியெழுப்புவதற்கு காணப்படும் வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

    முன்னர் ஊடக அமைச்சு மற்றும் இதர பங்காளர்களுடன் தொழிற்துறையில் பரந்த முன்னேற்றங்களை ஏற்படுத்த Mark and Comm ஈடுபாடுகளை பேணியிருந்தது. இந்த கலந்துரையாடல்களின் போது திறன் கட்டியெழுப்பல், நிபுணத்துவ விருத்தி மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு முன்னேறுவதற்கு வலுவூட்டும் நிலைபேறான தீர்வுகள் போன்றன அடங்கியிருந்தன. அதில், பொதுத்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மத்தியில் பொது உறவுகள் மற்றும் தொடர்பாடல் விழிப்புணர்வு போன்றனவும் அடங்கியிருந்தன.

    அறிக்கையில் பிரதானமாக அடையாளப்படுத்தப்பட்ட விடயமாக, ஊடக நிறுவனங்களில் சிறந்த நிதிசார் உறுதித்தன்மையை ஏற்படுத்த வேண்டியதற்கான தேவை அமைந்திருந்தது. நியாயமான சம்பளங்கள், உரிய காலத்தில் கொடுப்பனவுகள் மற்றும் நிலைபேறான வருமான வழிமுறைகள் போன்றன பாதுகாப்பான மற்றும் ஊக்கத்துடன் இயங்கும் பணியாளர்களில் பங்களிப்பு வழங்கும். மேலும், இந்த அறிக்கையினால் கட்டமைக்கப்பட்ட தொழில்நிலை வளர்ச்சி மற்றும் பதவி உயர்வு வாய்ப்புகள் போன்றவற்றின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், போதியளவு வழிகாட்டல்கள் மற்றும் திறன் விருத்திகளுடன், ஊடகவியலாளர்களுக்கு தமது தொழிலில் முன்னேறுவதற்கும் வாய்ப்பளிப்பதாக அமைந்திருக்கும்.

    நெறிமுறையான ஊடகவியல் மற்றும் பொறுப்பு வாய்ந்த அறிக்கையிடல் போன்றன தங்கியிருக்கக்கூடிய ஊடக கட்டமைப்பை ஏற்படுத்துவதில் முக்கிய காரணிகளாக அமைந்துள்ளன. Mark and Comm இனால் நெறிமுறை நியமங்களை மீளுறுதி செய்து, ஊடக சுதந்திரத்தை உறுதி செய்யும் வலிமையான தொழிற்துறை ஒழுங்குவிதிகளுக்கான தேவைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. தரவு-பரிசோதிப்பு, தவறான தகவல்கள் தவிர்ப்பு மற்றும் வெளிப்படையான அறிக்கையிடல் போன்றவற்றுக்கான தெளிவான வழிகாட்டல்களை வலியுறுத்துவதுடன், இலங்கை ஊடகவியலில் பொது மக்களின் நம்பிக்கையை மேம்படுத்த எதிர்பார்க்கிறது.

    ஊடகவியலாளர் பாதுகாப்பு மற்றும் உளவியல் நலன் போன்றன அதிகளவு கவனம் செலுத்தப்பட வேண்டிய பிரிவுகளாக அமைந்துள்ளன.  Mark and Comm’இன் அறிக்கையில், ஊடகவியல் நிபுணர்களின் நலனை பாதுகாப்பதில், உளவியல் சுகாதார வளங்கள், அழுத்த முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் சமநிலையான பணி சூழல்கள் போன்றவற்றின் முக்கியத்துவம் குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமளவான ஊடகவியலாளர்கள் பயிற்சி மற்றும் திறன் வளர்ச்சி வாய்ப்புகளை கோரியிருந்தனர். குறிப்பாக, டிஜிட்டல் மற்றும் மல்டிமீடியா ஊடகவியல், விசாரணை அறிக்கையிடல். ஊடக நெறிமுறைகள் மற்றும் நெருக்கடியான நிலையில் அறிக்கையிடல் போன்ற தலைப்புகளில் கோரியுள்ளனர். தொழிற்துறையின் ஆற்றல்களை வலிமைப்படுத்துவதில் இந்த நிலை உறுதியான வாய்ப்பை வெளிப்படுத்துவதுடன், இலங்கையின் எதிர்காலத்துக்கு பாதுகாப்பான ஊடக கட்டமைப்பை ஏற்படுத்தவும் ஏதுவாக அமைந்திருக்கும்.

    ஊடகவியல் தொடர்பில் பொது மக்களின் நிலைப்பாடு நேர்த்தியானதாக அமைந்துள்ளது. பெருமளவான பதிலளித்திருந்தோர், அதனை நன்மதிப்பைப் பெற்ற தொழிலாக கருதுவதாக குறிப்பிட்டிருந்தனர். மேம்படுத்தப்பட்ட நெறிமுறை நியமங்களினூடாக நம்பகத்தன்மையை மீளக் கட்டியெழுப்பலுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதுடன், மேம்படுத்தப்பட்ட கதைகூறும் நுட்பங்கள் மற்றும் பெருமளவு ரசிகர் ஈடுபாடு பற்றியும் குறிப்பிட்டிருந்தனர். மேலும், டிஜிட்டல் ஊடகவியலில் அதிகரித்த பயிற்சியினூடாக தொழிற்துறையில் அதிகரித்துச் செல்லும் வாய்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமது சென்றடைவை வியாபிக்கவும் வாய்ப்புகள் இருப்பதை உணர்த்தியிருந்தது.

    கல்வி மற்றும் தொடர்ச்சியான கற்றல் தொழில் முன்னேற்றத்திற்கு அடிப்படையாக உள்ளது. நிறுவன மற்றும் தொழில்முறை மட்டங்களில் ஊடகக் கல்வியை வலுப்படுத்துவது, மேலும் தகவலறிந்த மற்றும் மாற்றியமைக்கக்கூடிய பத்திரிகையாளர்களை உருவாக்கும். இலங்கையின் ஊடக வல்லுநர்கள் தொழில்துறை முன்னேற்றங்களில் முன்னணியில் இருப்பதை உறுதி செய்வதற்காக விசேட பயிற்சி திட்டங்கள் மற்றும் கூட்டு கற்றல் தளங்களில் முதலீடு செய்வதை இந்த அறிக்கை ஊக்குவிக்கிறது.

    எதிர்காலத்தில், Mark and Comm நம்பகத்தன்மை, ஸ்திரத்தன்மை மற்றும் புதுமையுடன் ஊடகவியல் வளரக்கூடிய சூழலை வளர்ப்பதில் உறுதியாக உள்ளது. மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறைகள், நெறிமுறை அறிக்கையிடல் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்புகள் ஆகியவற்றின் தேவை பற்றிய பரந்த உடன்பாட்டுடன், தொழில்துறை அளவிலான மேம்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க சாத்தியம் உள்ளது.


    Share with your friend