இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தானான ‘Microsoft Global Hackathon 2024′ இல் சிறந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த 5 வெற்றியாளர்களில் இடம்பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life பெற்றுள்ளது. 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றதுடன், சமூக தாக்கத்திற்கான தனது புதுமையான ‘குளூக்-கார்ட்’ (Gluc-Guard) யோசனைக்காக Softlogic Life இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டது.
Microsoft Global Hackathon என்பது புதுமையான யோசனைகளை உருவாக்க, புத்தாக்கம் செய்ய மற்றும் ஹெக் செய்ய உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட விருந்தினர்களுக்கு ஒன்றிணைக்கும் ஒரு உலகளாவிய நிகழ்வாகும். இது உலகின் மிகப்பெரிய தனியார் வருடாந்த Hackathon போட்டியாகவும் உள்ளது. கல்வி மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவு முதல் போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் வரையிலான யோசனைகளை உருவாக்குவதில் நிறுவனங்களின் சிறப்பை இது மதிப்பிடுகிறது. Microsoft Sri Lanka ஹேக்கத்தானுக்கு அனுசரணை வழங்கிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும். மேலும், தனது சிறப்பு திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு Softlogic Life நிறுவனம் அழைக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாகவும் இது அமைந்தது. சமூக தாக்க சவாலில் அனுபவம் வாய்ந்த தொழில்நுட்ப புத்தாக்குநர்கள் மற்றும் முன்னோடிகளுடன் போட்டியிட்ட போதிலும், Softlogic Life இன் யோசனை சிறந்த தீர்வாக உருவெடுத்தது.
Softlogic Life நிறுவனத்தின் மற்றுமொரு சாதனை குறித்து கருத்து தெரிவித்த அதன் தலைவர் அசோக் பத்திரகே, ‘Softlogic Life இல், புத்தாக்கம் என்பது வெறுமனே முன்னிலையில் இருப்பது மட்டுமல்ல. அது மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானது. Softlogic Life இல் முதல் ஐந்து இடங்களில் எமது நிறுவனம் தரவரிசைப்படுத்தப்பட்டது, அர்த்தமுள்ள சமூக தாக்கத்திற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான எங்கள் அர்ப்பணிப்பிற்கு சான்றாக விளங்குகிறது. நாங்கள் செய்யும் மற்ற அனைத்தைப் போலவே, எங்கள் யோசனையும் மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அத்தியாவசிய சமூக சவால்களை நவீன தீர்வுகளுடன் எதிர்கொள்வதற்கான எங்கள் தொலைநோக்கை பிரதிபலிக்கிறது. அதனால்தான், எங்களைப் பொறுத்தவரை காப்புறுதி ஊடுருவல் என்பது எங்கள் வருவாய் இலக்குகளை அடைவது மட்டுமல்லாமல், விநியோகம், தொழில்நுட்பம் அல்லது தயாரிப்பு புத்தாக்கம் மூலமாக பாதுகாப்பு தேவைப்படுபவர்களுக்கு சேவை செய்வதற்கான வழிகளைக் கண்டறிவதையும் உள்ளடக்கியது. இந்த எண்ணத்தால் தான் இன்று இலங்கையில் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைப் பாதுகாக்கும் ஆயுள் காப்புறுதியாளர்களாக நாங்கள் திகழ்கிறோம். இந்தப் போட்டியில் Softlogic Life சார்பாக பங்கேற்ற எங்கள் குழுவின் மீது நான் பெருமைப்படுகிறேன். அவர்கள் இலங்கையை உலக வரைபடத்தில் திகழ வைத்தனர் மற்றும் இந்த தீவு பெரிய சாதனைகளைச் செய்யக்கூடியதென நிரூபித்தனர். நாங்கள் இந்தக் கருத்தின் செயல்பாட்டைக் காண ஆர்வமாக காத்திருக்கிறோம். இது இலங்கையிலும், உலகளாவிய சமூகங்களுக்கும் பயனளிக்கும் வகையில் ஒரு அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் என நம்புகிறோம்,’ என்று குறிப்பிட்டார்.
இந்த வெற்றியை மேலும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், Softlogic Life முன்வைத்த படைப்பாற்றல் மிக்க மற்றும் புதுமையான யோசனையை நனவாக்குவதற்கு Microsoft Sri Lanka உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டுறவின் மூலம் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் சமூகத் தேவைகளை நிறைவேற்றுவதில் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் விதம் சிறப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் புத்தாக்க திறனை வெளிப்படுத்தும் இது, தாக்கமிக்க தீர்வுகளை செயல்படுத்துவதில் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது.
இது குறித்து Microsoft இன் இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர் ஹர்ஷ ரண்டெனி கருத்து தெரிவிக்கையில், ‘Softlogic Life தங்கள் துறையிலும், அதற்கு வெளியேயும் புத்தாக்கங்களை முன்வைப்பதிலும், சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் முன்னணியில் இருப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம். புதிய தொழில்நுட்பத்தின் மூலம் இலங்கையில் நேர்மறையான சுகாதார சேவை தாக்கத்தை ஏற்படுத்த அவர்களின் உறுதியான அர்ப்பணிப்பு இந்த அங்கீகாரத்தில் நன்கு பிரதிபலிக்கிறது. Microsoft Global Hackathon executive challenge இல் பல சமர்ப்பிப்புகளுக்கு மத்தியில் Softlogic திட்டம் சிறப்பாக விளங்கியதுடன், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான அவர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்த முடிந்தது. இந்தப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதல் சந்தர்ப்பத்தில் Softlogic Life முன்வைத்த சிறப்பான தீர்வுகள் குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்’ என்றார்.”
பல ஆண்டுகளாக ஆயுள் காப்புறுதித் துறைக்கு பல அறிமுகங்களை செய்துள்ள Softlogic Life, உலகளாவிய தரத்திலான பல தீர்வுகள் மூலம் தொழில்துறையில் புதிய மைல்கற்களை தொடர்ந்து அடையாளப்படுத்தி வருகிறது. இது ஒரு நாளிலிருந்து ஒரு நிமிடம் வரையிலான மருத்துவமனை உரிமைகோரல் தீர்வு, முழுமையான டிஜிட்டல் விற்பனை தளம், தானியங்கி காப்புறுதி கொள்கை வழங்கல் மற்றும் மொபைல் அடிப்படையிலான புதிய நுண்-தயாரிப்புகள் போன்ற சேவைகள் இதில் அடங்கும். புத்தாக்கங்களை முன்வைப்பதன் மூலம் இலங்கையின் காப்புறுதித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் பணியை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் Softlogic Life, மாற்றமளிக்கும் டிஜிட்டல் திட்டங்கள் மூலம் வாடிக்கையாளரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் முதல் முறையாக AI மூலம் வலுப்படுத்தப்பட்ட உரிமைகோரல் தீர்வு நிறுவனத்தின் சமீபத்திய வெற்றியாக கருதப்படுவதோடு, இதன் மூலம் இணையற்ற வாடிக்கையாளர் வசதியை வழங்கி Softlogic Life வெற்றி பெற்றுள்ளது. AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்திற்கு காப்புறுதி சேவைகளை வழங்கும் Softlogic Life, செயல்பாட்டு செயல்திறன், வாடிக்கையாளர் திருப்தி மற்றும் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் அனுபவத்தை கணிசமாக மேம்படுத்தி திறமையான சேவையை வழங்கி வருகிறது. இது காப்புறுதித் துறையில் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.