அண்மையில் நடைபெற்ற NBQSA தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகள் 2021 நிகழ்வில் பல்வேறு விருதுகளை வெற்றிகொண்டு SLIIT இன் ஸ்கூல் ஒஃப் கம்பியூட்டிங் மாணவர்கள் தமது மகத்தான திறமையை வெளிக்காட்டினர்.
NBQSA விருதுகள் தகவல் தொழில்நுட்பத்துக்கான BCS பட்டய நிறுவனத்தினின் இலங்கைக் கிளையினால் கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. உள்நாட்டு மென்பொருள் தொழில்துறையில் நீண்டகாலமாக நாட்டின் தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இது தேசத்தின் நலனுக்காக தகவர் தொழில்நுட்பத்தில் முன்முயற்சிகள், கண்டுபிடிப்புகள், சேவைகளில் பங்களித்த தனிநபர்கள், மாணவர்கள், தொழில்முனைவோர், சிறிய நடுத்தர தொழில்முயற்சிகள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கிறது.
SLIIT இன் கணினி பீடத்தின் இறுதியாண்டு பட்டதாரி மாணவர்களின் ஆய்வுத் திட்டங்கள் தெரிவுசெய்யப்பட்டு NBQSA தேசிய தகவல் தொழில்நுட்ப விருதுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டன. 2021ஆம் ஆண்டு மாணவர்கள் 260 திட்டங்களைப் பூர்த்திசெய்திருந்ததுடன், இதில் சிறந்த 21 திட்டங்கள் போட்டிக்காகத் தெரிவுசெய்யப்பட்டன. SLIIT மாணவர்களின் ஆராய்ச்சித் திட்டங்கள், தொழில் மற்றும் சமூகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில், கல்வித் தரத்தின் மிக உயர்ந்த மட்டத்தைப் பராமரிக்கும் திறனுக்காகப் பாராட்டப்பட்டுள்ளன.
SLIIT இன் பெருமையைப் பறைசாற்றும் வகையில் Coco-Remady திட்டமானது நாட்டின் அனர்த்தங்களுக்கு சிறந்த தீர்வாக அங்கீகரிக்கப்பட்டது. கலாநிதி.ஜனக விஜேகோன் இத்திட்டத்தை மேற்பார்வை செய்ததுடன், டிலானி லுனுகலகே இணை மேற்பார்வை செய்ததுடன், தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து கலாநிதி. நயனி ஆர்ச்சிகே வெளியக மேற்பார்வை செய்தார். இந்த வெற்றி அணியானது சமித விதானாராச்சி, க்னனோட் சதுரமடு அகலங்க, தினாலி குணசேகர மற்றும் திவ்யானி ராஜபக்ஷ ஆகியோரை உள்ளடக்கியுள்ளது.
மூன்றாம் நிலை வணிகப் பிரிவில் LandVal திட்டம் வெண்கல விருதை வென்றது. இது கலாநிதி.தசுனி நாவின்னவினால் மேற்பார்வை செய்யப்பட்டதுடன், நர்மதா கமகேவினால் இணை மேற்பார்வை செய்யப்பட்டது. இந்த அணியில் இமால் குமாரகே, தனுஷா சமிக நுவன்கா வீரசேகர மற்றும் ஹேஷான் ரத்னபால ஆகியோர் அடங்குகின்றனர்.
SLIIT இற்கு பல்வேறு தகுதிக்கான விருதுகள் கிடைத்ததுடன், Agent Hunt திட்டத்துக்கு மூன்றாம் நிலை வணிகப் பிரிவில் விருது கிடைத்தது. இத்திட்டமானது திரு.அமில நுவான் செனவிரட்னவினால் மேற்பார்வை செய்யப்பட்டதுடன், திரு.தரிந்து தர்மசேன இணை மேற்பார்வையாளராகக் கடமையாற்றியிருந்தார். இந்த அணியானது சர்மின் அன்டர்சன், திலான் தர்மகீர்த்தி, யசிறு உமேஷா விஜேசிறிவர்த்தன மற்றும் கசுன் அதுகோரல ஆகியோரைக் கொண்டதாகும்.
Lumoz திட்டம் மூன்றாம் நிலை வணிகப் பிரிவில் தகுதிக்கான விருதைப் பெற்றது. இதற்கு மேற்பார்வையாளராக கலாநிதி. ஷியாம் ரெயல் பணியாற்றியதுடன், இணை மேற்பார்வையாளராக திரு.துஷிதாஞ்சன திலகரட்னவும் பணியாற்றினர். இக்குழுவில் புபுது அரோஷா, விஹான்க நிவர்த்தன, பவந்த திலான் மற்றும் ஜயங்கி கன்கந்த ஆகியோர் அடங்குகின்றனர்.
மூன்றாம் நிலை வணிகப் பிரிவில் NenaShilpa திட்டத்துக்கும் தகுதிக்கான விருது கிடைத்தது. இத்திட்டத்தை பேராசிரியர் சமந்த தெலிஞ்ஞகொட மேற்பார்வை செய்ததுடன், ஜெனி கிரிஷாரா இணை மேற்பார்வை செய்தார். வெளியக மேற்பார்வையாளராக கலாநிதி.டபிள்யூ.எம்.கே.வணிகசிங்ஹ பணியாற்றியிருந்தார். சமில் திலுக்ஷா, கல்பனி அபேசிங்ஹ, பமோத்ய மஹிஷானி மற்றும் பிரபாத் ஷாலித ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாவர்.
SLIIT இன் இந்த வெற்றிகள் தொடர்பில் கணினி பீடத்தின் உதவி பேராசிரியர் கலாநிதி ஜனக விஜேகோன் குறிப்பிடுகையில், “NBQSA விருதுகள் எமது நாட்காட்டியில் மிகவும் முக்கியமானதொன்றாக விளங்குவதுடன், இதில் பங்கெடுப்பதில் எமது மாணவர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர். அவர்கள் தேர்ந்தெடுத்த தகவல் தொழில்நுட்பத் துறையில் சிறந்து விளங்குவதற்கு இது ஒரு உத்வேகத்தை அளிக்கிறது என்று நாம் உறுதியாக நம்புகிறோம். இந்த ஆண்டு தென்னை தொழிற்துறையில் இயற்கைப் பேரழிவுகளுக்கான சிறந்த தீர்வு மற்றும் ஊடகவியலாளர்கள் தமது ஆக்கங்களை அறிவார்ந்த ரீதியில் எடிட் செய்வதற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்ட மென்பொருள் என்பவற்றுக்கு விருதுகள் கிடைத்துள்ளன. இந்த விருதுகளை வெல்வது எங்கள் மாணவர்களுக்கு ஒரு கௌரவமாக அமைந்திருப்பதுடன், தொழில்கள், சமூகத்தில் நேரடியாக தாக்கத்தை உருவாக்கும் வணிக நுண்ணறிவு மூலம் சவால்களுக்கு தீர்வு காணும் ஆராய்ச்சியாளர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது” என்றார்.
கணினி பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர்.சந்திமல் ஜயவர்த்தன தெரிவிக்கையில், “எதிர்கால வாழ்க்கையில் வெற்றியாளர்களுடன் சிறந்த மென்பொருள் துறையில் திறமைகளை வெளிப்படுத்தும் தளமாக NNQSA அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் எங்கள் மாணவர்கள் புதுமை மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் தங்கள் முயற்சிகளில் சிறந்து விளங்கியதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு SLIIT வெற்றியாளர்கள் இலங்கையில் செழிப்பான புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்ப சூழலை உருவாக்குவதற்கான உறுதியுடன் எமது இளைஞர்களை ஊக்குவிக்கும் முன்மாதிரியாக விளங்குகின்றனர்” என்றார்.