‘இந்த மாரி காலத்தில் சுவர்களில் கசிவு ஏற்படுவதை தவிருங்கள்’
மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், இல்லங்களின் உரிமையாளர்களுக்கு சுவர்களில் கசிவுகள் மற்றும் ஈரப்பதனால் ஏற்படும் சேதங்களை தவிர்த்துக் கொள்வதற்காக Nippon Paint லங்கா தனது புதிய மேம்படுத்தப்பட்ட Aqua Proof 7 in 1 – வோட்டர்ப்ரூஃவ் பெயின்ட் வகையை அறிமுகம் செய்துள்ளது. இதனை பயன்படுத்துவதனூடாக, மழைக்காலங்களிலும் இல்லங்களின் சுவர்களை பசுமையான தோற்றத்துடன், தூய்மையாகவும், அழகாகவும் பேணிக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இலங்கையின் காலநிலைக்கு பொருத்தமான வகையில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய Aqua Proof 7 in 1 இனால், வெளியக மேற்பரப்புகளை பாதுகாக்கும் வகையில் உறுதியான பாதுகாப்பு லேயர் உருவாக்கப்படுவதுடன், அதனூடாக நீர் கசிவு, சுவர்களின் மேற்பரப்பில் காணப்படும் வெடிப்புகளை மூடுவதுடன், மாசுகள், பாசி மற்றும் பங்கஸ் படிதல் போன்றவற்றை தவிர்க்கவும் உதவுகிறது. மழைக்கு வெளிப்படுத்தப்படும், ஈரப்பதனான அல்லது வெடிப்புகளைக் கொண்ட சுவர்களை உடைய இல்லங்களுக்கு சிறந்த தீர்வாக அமைந்திருக்கும்.
Nippon Paint lanka பணிப்பாளர் நாயகம் Low Yoon Pak கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் இல்ல உரிமையாளர்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் நாம் ஆழமாக எம்மை அர்ப்பணித்துள்ளோம். எதிர்பாராத பருவமழை முதல் கரையோர ஈரப்பதன் போன்றவற்றை தாங்கிக் கொள்ளக்கூடிய வகையில், எமது தயாரிப்புகளை நாம் வடிவமைக்கிறோம். நாம் மேற்கொள்ளும் சகல செயற்பாடுகளிலும் புத்தாக்கத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். புதிய Aqua Proof 7 in 1 அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது. மேம்படுத்தப்பட்ட வோட்டர்ப்ரூஃபிங் தொழில்நுட்பத்துடன், பாரம்பரிய அம்சங்களுடன், எமது வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அழகு ஆகிய அம்சங்களை வழங்கும் வகையில் அமைந்துள்ளது.” என்றார்.
பாரம்பரிய பெயின்ட் வகைகளைப் போலன்றி, Aqua Proof 7 in 1 என்பது நீர் ஊடுபுகவிடாத தடுப்பை ஏற்படுத்துகிறது. அதனூடாக சுவர்களின் மேற்பரப்பில் காணப்படும் சிறிய வெடிப்புகள் மூடப்பட்டு, சுவர்களினுள்ளே நீர் கசிவடைவது தவிர்க்கப்படுகிறது. அதன் பங்கஸ் தவிர்ப்பு மற்றும் பாசி தவிர்ப்பு சூத்திரத்தின் காரணமாக, பச்சை படிமங்கள், ஈரலிப்பான மேற்பரப்புகள் மற்றும் துர்மணங்கள் கொண்ட ஈரமான சுவர்கள் போன்றன தவிர்க்கப்படுகின்றன.
கவர்ச்சிகரமான வர்ணங்களில் தற்போது Aqua Proof 7 in 1 கிடைப்பதுடன், உங்களின் இல்லங்களுக்கு மிருதுவான, நீண்ட காலம் நிலைத்திருக்கும் தோற்றம் போன்றன வழங்கப்படுவதோடு, மிகவும் முக்கியமானதை பாதுகாத்து, பின்புலத்தில் அமைதியாக செயலாற்றுகிறது.
இலங்கையின் முன்னணி பெயின்ட் மற்றும் மேற்பூச்சு தயாரிப்பு நிறுவனமான Nippon Paint லங்கா, ஒவ்வொரு பகுதியையும் பாதுகாக்கும், புத்தாக்கமான, நிலைபேறான வர்ணத் தீர்வுகளை வழங்குவதில் தம்மை அர்ப்பணித்துள்ளது.
NIPSEA Group பற்றி (Nippon Paint Holdings Co. இன் துணை நிறுவனம்)
NIPSEA Group என்பது, மேற்பூச்சு வகைகள் மற்றும் நிர்மாணத் துறைக்கு புத்தாக்கமான தீர்வுகளை வழங்குவதில் சர்வதேச முன்னோடியாகத் திகழ்கின்றது. சிங்கப்பூரில் தலைமையகத்தைக் கொண்டுள்ளதுடன், 28 பகுதிகளில் 148 NIPSEA நிறுவனங்களைக் கொண்டுள்ளது. உற்பத்தி மற்றும் விற்பனை வருமானத்தைப் பொறுத்தமட்டில், ஆசிய பசுபிக்கின் 1ல் தர பெயின்ட் மற்றும் மேற்பூச்சு வகை உற்பத்தியாக திகழ்கிறது. 60 வருட காலப்பகுதிக்கு அதிகமான வளர்ச்சியை தொடர்ந்து, NIPSEA Group தன்வசம் 31,000 க்கு அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளதுடன், 118 உற்பத்தி பகுதிகளையும் கொண்டுள்ளது. அதனூடாக உற்பத்தி முதல் வாடிக்கையாளர் திருப்திகரத்தன்மை வரையில் சகல விதமான செயற்பாடுகளையும் வினைத்திறனான முறையில் முன்னெடுக்கிறது.
எமது வாடிக்கையாளர்களுக்கு பெறுமதியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி, எமது சகல பங்காளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் இல்ல உரிமையாளர்களுக்கு உகந்த உயர் தரம் வாய்ந்த தீர்வுகளை பெற்றுக் கொடுக்கிறோம். தொழிற்துறைக்கு NIPSEA Group இனால் வழங்கப்படும் பெருமளவு தீர்வுகளில், கட்டடக்கலை, தொழிற்துறை, வாகனங்கள், மரைன் மேற்பூச்சுகள் மற்றும் பரந்தளவு நிர்மாணத் தீர்வுகள் போன்றன பெயின்ட்களுக்கு அப்பால் அமைந்துள்ளன. வாடிக்கையாளர்களில் கவனம் செலுத்தி, எமது அனைத்து பங்காளர்களுக்கும் சிறந்த புத்தாக்கமான அம்சங்களை வழங்கும் ஊழியர் குழுவை நாம் கொண்டுள்ளோம்.
NIPSEA Group பற்றிய மேலதிக தகவல்களுக்கு பார்வையிடவும் https://nipsea.group/