இலங்கையில் உயர்தர சர்வதேச சரும பராமரிப்பு மற்றும் அழகியல் வர்த்தகநாமங்களுக்கான முன்னணி விநியோகஸ்தர் மற்றும் பிரத்தியேக முகவராக திகழும் OMED பார்மாசூட்டிகல்ஸ் (பிரைவேட்) லிமிடெட், [OMED Pharmaceuticals (Pvt) Ltd] ஆனது மருத்துவ அழகுசாதன மற்றும் அழகியல் மருத்துவத் துறையில் உலகளாவிய முன்னணி நிறுவனமான mesoestetic உடன் இணைந்து நவம்பர் 23 அன்று Elevate by Jetwingஇல் பிரத்தியேக வாடிக்கையாளர் நிகழ்வை நடத்தியது. இதில் அதன் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் கல்வி வளங்களுடன் ஈடுபாடுடைய இலங்கையில் உள்ள சரும பராமரிப்பு தொழில்சார் நிபுணர்கள் கலந்துகொண்டனர்.
பிரத்தியேகமாக சரும மருத்துவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வானது , mesoestetic அதன் உள்நாட்டு பங்குதாரரான OMED Pharmaceuticals மூலம் நாட்டிற்கு உயர்தர, பரிசோதனை செய்யப்பட்ட சரும பராமரிப்பு தீர்வுகளை வழங்கும் சிறந்த அர்ப்பணிப்பான செயலை எடுத்துக்காட்டுவதாக அமைந்திருந்தது. இந்த ஒத்துழைப்பானது பல்வேறு சரும பராமரிப்புத் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும், சரும மற்றும் அழகியல் பராமரிப்புக்கான அறிவியல் பூர்வமான மற்றும் பயனுள்ள தயாரிப்புகளை உறுதி செய்வதிலும் முன்னேற்றமான ஆய்வு அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் (R&D&I) ஆகியவற்றிற்கான வர்த்தக நாமத்தின் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. 44% ஆய்வு அபிவிருத்தி மற்றும் புத்தாக்கம் [R&D&I] வரவு செலவுத் திட்டத்துடன், mesoestetic இன் முன்னேற்ற செயற்பாடுகள் மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடன் தொடர்ந்து ஆய்வு மற்றும் ஒத்துழைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் நிறுவனம் இவற்றுடன் இணைந்து புதிய சிகிச்சைகளை ஆய்வு செய்து மேம்படுத்துகிறது.
ஏற்கனவே 94 உத்தியோகபூர்வ விநியோகஸ்தர்கள் மூலம் உலகெங்கிலும் 109 நாடுகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ள mesoestetic, ஆனது தனது பிரத்தியேக முகவரான OMED Pharmaceuticals உடன் கைகோர்த்து இலங்கையில் தனது கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது. மேலும் mesoestetic இலங்கையின் பொதுவான சரும பராமரிப்பில் காணப்படும் கவலைகளான நிறமி, சூரிய பாதிப்பு மற்றும் முகப்பரு போன்றவற்றை நிவர்த்தி செய்வதற்கு பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட உற்பத்திகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. OMED மருந்துகளின் வலுவான விநியோக வலையமைப்பு மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதன் மூலம், நாடு முழுவதும் தடையற்ற அணுகலை உறுதி செய்வதற்காக mesoestetic அதன் இலத்திரனியல் வணிக இருப்பு மற்றும் விநியோக சேவைகளை வலுப்படுத்துகிறது. இலங்கையில் mesoestetic இன் வெற்றியின் முக்கிய உந்துதலாக OMED Pharmaceuticals ஐ நிலைநிறுத்துவதன் மூலம் தரம், புத்தாக்கம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த பங்குடைமையானது வெளிப்படுத்துகிறது.
ஷெர்வின் மரியோ லிண்ட்சேயால் 2019 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட OMED Pharmaceuticals இலங்கையில் தோல் மற்றும் அழகியல் சரும பராமரிப்பு தீர்வுகளில் முன்னணியில் உள்ளது. இலங்கையின் நவீன நுகர்வோரின் தனித்துவமான தேவைகளுக்கு ஏற்றவாறு மேம்பட்ட, விஞ்ஞானத்துடன் கூடிய சரும பராமரிப்பு தீர்வுகளை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும். பிரத்தியேகமான உள்நாட்டு பங்காளியாக, OMED Pharmaceuticals, mesoestetic இன் புதுமையான தீர்வுகளை இலங்கை முழுவதிலும் உள்ள தொழில் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோருக்கு அணுகக்கூடியதாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் சரும பராமரிப்பில் சிறந்து விளங்குவதற்கான அவர்களின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பையும் வலுப்படுத்துகிறது.
OMED Pharmaceuticals இன் பணிப்பாளரான ஷெர்வின் மரியோ லிண்ட்சே இந்த பங்குடைமை பற்றி தனது கருத்துக்களை பின்வருமாறு பகிர்ந்துகொண்டார், “OMED Pharmaceuticals ஆனது இலங்கை சந்தையில் mesoestetic இன் மேம்பட்ட சரும பராமரிப்பு தீர்வுகளை அறிமுகப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. . கல்விப் பட்டறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்களுடன் உள்நாட்டு சரும பராமரிப்பு நிபுணர்களை மேம்படுத்துவதில் இந்த ஒத்துழைப்பானது கவனம் செலுத்துகிறது, அதே வேளை விஞ்ஞானத்துடன் கூடிய சரும பராமரிப்பு மற்றும் மருத்துவ ரீதியாக சரிபார்க்கப்பட்ட தயாரிப்புகளின் நன்மைகள் குறித்து நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
OMED Pharmaceuticals நிறமி, முகப்பரு, மூப்படைவதை தள்ளிப்போடுதல் மற்றும் அழகியலுக்குப் பிந்தைய பராமரிப்பு போன்ற பல்வேறு சருமம் தொடர்பான கவலைகளுக்கு தொழில்முறையில் தரமான உற்பத்திகளை வழங்குகிறது. நம்பகமான வர்த்தகநாமங்களை விநியோகிப்பதோடு, சரும மருத்துவர்கள், அழகியல் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோருக்கு பட்டறைகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள் மூலம் கல்வி கற்பதற்கு நிறுவனம் உறுதிபூண்டுள்ளது. புதுமை மற்றும் நிலைபெறுதகு தன்மையை மையமாகக் கொண்டு, நிறுவனம் அதன் அனைத்து தயாரிப்புகளும் உலகளாவிய பாதுகாப்பு மற்றும் தரத் தராதரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்கிறது. OMED Pharmaceuticals இலங்கை முழுவதிலும் உள்ள முன்னணி சரும மருத்துவர்கள் மற்றும்சிகிச்சை நிலையங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறது, தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் ஆதரவை வழங்குகிறது. ஷெர்வின் மரியோ லிண்ட்சேயின் தலைமையின் கீழ், நிறுவனம் சரும பராமரிப்பு மற்றும் அழகியல் பராமரிப்பில் புதிய வரையறைகளை அமைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இதன் உயர்தர சிகிச்சைகள் அனைவருக்கும் அணுகக்கூடியதாக உள்ளது.