OMED Pharmaceuticals இலங்கையில் mesoestetic® பயிற்சிப்பட்டறை மற்றும் மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததுடன் பிரத்தியேகமான மருத்துவ சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது

Share with your friend

இலங்கையில் முதன்முறையாக OMED Pharmaceuticals (Pvt) Ltd. இனால் mesoestetic® மாநாடு மற்றும் பயிற்சிப்பட்டறை தோலியல் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மருத்துவ நிபுணர்களுக்காக முன்னெடுக்கப்பட்டிருந்தது. மே மாதம் 14 ஆம் திகதி இடம்பெற்ற இந்த பயிற்சிப்பட்டறையில் நாடு முழுவதையும் சேர்ந்த 35க்கும் அதிகமான அழகியல் சிகிச்சைசார் ஆலோசகர்கள் பங்கேற்றிருந்தனர். depigmentation, peelings, intradermal solutions மற்றும் fillers ஆகிய துறைகளில் நவீன புத்தாக்கங்களை பின்பற்றும் அழகியல் மருத்துவதுறைசார் சர்வதேச முன்னோடிகளிடமிருந்து, இந்த செயன்முறைகளை தமது செயற்பாடுகளில் எவ்வாறு பின்பற்றலாம் என்பது பற்றி அறிந்து கொண்டனர்.

உலகளாவிய ரீதியில் காணப்படும் மருத்துவ ஆலோசகர்களை பயிற்றுவிப்பது மற்றும் மெருகேற்றம் செய்வதற்கான தமது அர்ப்பணிப்பின் பிரகாரம், பல்தேசிய மருந்துப்பொருட்கள் நிறுவனத்தில், சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற பேச்சாளர், சிகிச்சைநிபுணர் மற்றும் எழுத்தாளருமான வைத்தியர். கேப்ரியல் அயாலா வெலாஸ்குயெஸ் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தார். நிறுவனத்தின் தீர்வுகளுடன் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான செயற்பாடுகள் மற்றும் கற்கைகளை வெளிப்படுத்தியிருந்தமைக்கு மேலதிகமாக, வைத்தியர். அயாலாவினால், இலங்கையில் அழகியல் நிலையங்களில் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய மருத்துவ சாதனம் பற்றிய அறிவித்தலும் வழங்கப்பட்டது. இரு மேலதிக நுட்பங்களான -mesotherapy மற்றும் carboxytherapy- ஆகியவற்றை இணைக்கும் MCT injector ஐ பயன்படுத்தி, பல்வேறு தோல் மற்றும் உடல் சிகிச்சைகளை வலியின்றி, பாதுகாப்பாக மேற்கொள்ளலாம்.

OMED Pharmaceuticals தவிசாளர் ஷெர்வின் மரியோ லின்ட்சே கருத்துத் தெரிவிக்கையில், “mesoestetic® இன் வினைத்திறனான சிகிச்சை என்பது மருத்துவ அலங்கார சிகிச்சையாளர்களால் உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்றது. இலங்கையில் இந்த மாநாட்டை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்ததனூடாக, ஆர்வமுள்ள செயற்பாட்டாளர்களையும் எம்மால் பதிவு செய்து கொள்ள முடிந்துள்ளது. மேலும், MCT injector இன் அறிமுகத்துடன் மற்றும் சருமப் பராமரிப்பு நிபுணர்கள் மற்றும் அவர்களின் பெற்றோரின் நெகிழ்ச்சித்தன்மையினூடாக, இலங்கையின் நுகர்வோரிடமிருந்து mesoestetic® சருமப் பராமரிப்புக்கு அதிகளவு கேள்வியை நாம் எதிர்பார்ப்போம்.” என்றார்.

ஆய்வு மற்றும் அபிவிருத்திக்கு தம்மை அர்ப்பணித்துள்ள mesoestetic® தீர்வுகளில் இல்லங்கள், நிபுணத்துவ மற்றும் அழகியல்சார் மருத்துவ சிகிச்சைகள் அடங்கியுள்ளன. இவை அனைத்தும், பல்வேறு விஞ்ஞானபூர்வ ஆய்வுகளினூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன், ஆய்வுகள், புத்தாக்கம் மற்றும் துறைசார் முன்னோடிகளுடனான கைகோர்ப்புகளினூடாக கட்டியெழுப்பப்பட்டுள்ளன.


Share with your friend