– INNO DAY 2021 இல் உத்தியோகபூர்வமாக அறிமுகம்
உலகளாவிய ஸ்மார்ட் தொழில்நுட்ப நிறுவனமான OPPO, அதன் முதலாவது மடிக்கக்கூடிய முதன்மை ஸ்மார்ட்போனான OPPO Find N இனை அதன் வருடாந்த OPPO INNO DAY நிகழ்வின் இரண்டாவது நாளில் அறிமுகப்படுத்தியுள்ளது. நான்கு வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆறு தலைமுறை முன்மாதிரிகளின் சோதனைகளைத் தொடர்ந்து, OPPO Find N ஆனது மடிக்கக்கூடிய வடிவ அம்சத்துடனான ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டுவந்துள்ளது. கடந்த காலத்தில் மடிக்கக்கூடிய சாதனங்களைப் பயன்படுத்தியவர்களுக்கும் மடிக்கக்கூடிய வகை சாதனங்களில் புதியவர்களுக்கும், புதுமையான பயனர் அனுபவத்தை இது வழங்கும்.
OPPO வின் தலைமை தயாரிப்பு அதிகாரி Pete Lau இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “புதிய வடிவத்திற்கான காரணிகள் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தில் ஒரு அற்புதமான புதிய வழிகாட்டலுக்கு இட்டுச் செல்கின்றன. OPPO ஆனது, மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனுக்கான சிறந்த அணுகுமுறையைக் கொண்டு வருவதற்கு கணிசமான அளவு நேரத்தையும் முயற்சியையும் முதலீடு செய்துள்ளது. குறிப்பாக, பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் புதிய சாதனத்தை உருவாக்கும் பொருட்டு, பயனர்களை மேலும் ஈர்க்கும் வகையில், வடிவத்திற்கான காரணிகள், வளைவுக் கீலங்களின் (hinge) வடிவமைப்புகள், திரைக்கான மூலப்பொட்கள், திரை விகிதங்கள் ஆகியன தொடர்பில் நிறுவனம் சோதனைகளை மேற்கொண்டது.” என்றார்.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வகைகளில் முதன்முறையாக, OPPO Find N ஆனது உள்ளக திரையிலான காட்சியின் பொருட்டு, landscape விகிதத்தைப் பயன்படுத்தியுள்ளது. இது பயனர்களின் ஸ்மார்ட்போன் அனுபவத்திற்கு தடை எதனையும் ஏற்படுத்தாத வகையில், அதிவேகமாக 7.1 அங்குல உள்ளகத் திரை மற்றும் 5.49 அங்குல வெளியகத் திரை ஆகியவற்றிற்கு இடையே தடையின்றி மாறுவதற்கான சிறந்த சமநிலையை வழங்குகிறது.
OPPO Find N இல் உள்ள Flexion Hinge ஆனது, 0.01 mm வரையான நுண்ணிய அளவுடன் அது போன்ற 136 சிறிய கூறுகளை கொண்டுள்ளது. இது மனித உடலில் உள்ள மூட்டுகள் போல் சீராக இயங்குவதை உறுதி செய்கிறது. OPPO வின் தனித்துவமான water-drop hinge வடிவமைப்பானது, திரை மற்றும் மடிப்பின் கோணத்தை விரிவுபடுத்துவதன் மூலம் மடிக்கக்கூடிய சாதனங்களில் வழக்கமாகக் காணப்படுகின்ற, பாரிய பாதிப்பை சந்திக்கின்ற புள்ளிகளை தடுக்கிறது. TUV இற்கு அமைய, ஏனைய சாதனங்களுடன் ஒப்பிடும்போது திரை மடியும் போது 80% வரை குறைவாக கவனிக்கத்தக்கதான இடையகத்தை இது வழங்குகிறது. இதன் விளைவாக இந்த வடிவமைப்பானது, மடிக்கும்போது காட்சிகளுக்கு இடையே உள்ள இடைவெளியை நடைமுறையில் நீக்குவதுடன், ஒருங்கிணைக்கப்பட்ட தோற்றத்தை வழங்குவதோடு, உள்ளகத் திரையை கீறல்களிலிருந்து சிறப்பாகப் பாதுகாக்கிறது.
இசை, Notes, கெமரா செயலிகள் போன்ற செயலிகளில் சிறப்பாகவும் திறமையாகவும் செயற்படுவதற்கான பயனர் இடைமுகத்தை OPPO இதில் தனிப்பயனாக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக, Notes செயலியின் பயன்பாட்டின் போது, OPPO Find N இனை ஒரு மினி மடிகணனியாக மாற்ற முடியும். இதன்போது நீங்கள் சாதனத்தை கையில் பிடிக்காமலேயே குறிப்புகளை எழுத முடியும்.
OPPO வின் தனிப்பயனாக்கப்பட்ட 12 அடுக்கு Serene Display ஆனது, சிறந்த பாதுகாப்பு மற்றும் நீடித்த உழைப்பை வழங்குவதுடன், மிருதுவாக மடிக்கக்கூடிய அனுபவத்திற்காக Flexion Hinge இதில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த திரை 0.03 மி.மீ. படையினாலான Flexion UTG (ultra-thin glass) (மிக-மெல்லிய கண்ணாடி) இனைக் கொண்டுள்ளது. வழக்கமான ஸ்மார்ட்போன் திரையின் கண்ணாடி 0.6 மிமீ ஆகும். இது எளிதாக வளைவை மேற்கொள்ள அனுமதிப்பதுடன் வலுவான ஆயுளையும் வழங்குகின்றது. Serene Display ஆனது மிகவும் நம்பகமானது, 200,000 தடவைகளுக்கு மேல் மடிக்கும் திறனுடன், TUV இனால் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டதற்கு அமைய, மடிப்புகள் இல்லாமல் ஒட்டுமொத்த மிருதுவான மடித்தல் அனுபவத்தைப் பேணுகிறது.
OPPO Find N ஆனது உயர் தர புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வழங்குவதற்கான முதன்மை நிலை மூன்று கெமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 50MP Sony IMX 766 பிரதான சென்சர், 16MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 13MP telephoto லென்ஸ் மற்றும் உள் மற்றும் வெளிப்புற திரைகளில் அமைந்த செல்பி கெமராக்களையும் கொண்டுள்ளது.
OPPO Find N இல் உள்ள புதிய split-camera பயனர் இடைமுகமானது, பெரிய, ஆழமான உள்ளக திரையைப் பயன்படுத்தி திறமையாகப் புகைப்படங்களை ஒரு பக்கத்தில் எடுக்கவும், மறுபுறத்தில் உங்களது மிகச் சமீபத்திய புகைப்படத்தைப் பார்க்கவும், பகிரவும் அல்லது நீக்குவதற்குமான திறனை வழங்குகிறது.
மடிக்கக்கூடிய கையடக்கத் தொலைபேசிகளில் முதன்முறையாக, OPPO Find N ஆனது கைகளில் இருக்குமபோதான உணர்வை மேம்படுத்துவதற்காகவும் நேர்த்தியான தோற்றத்தை பராமரிப்பதற்காகவும் சாதனத்தின் இரு வெளிப்புற விளிம்புகளிலும் 3D-வளைந்த வடிவமைப்பைப் பயன்படுத்துகிறது. உரிய வகையில் நெறிப்படுத்தப்பட்ட வளைவுகள் காரணமாக, பார்வை மட்டத்தின் அடிப்படையில் கெமரா தொகுதியின் உயரம் குறைக்கப்பட்டு காண்பிக்கப்படுகின்றன. அதே சமயம் Gorilla Glass Victus உடனான பின்புற பகுதி மற்றும் செரமிக் கெமரா தட்டு ஆகியவற்றின் நேர்த்தியான ஒருங்கிணைப்பானது சிறந்த வகையிலான கலவையாக இணைக்கப்பட்டுள்ளன.
OPPO Find N ஆனது மூன்று தனித்துவமான வண்ணங்களில் வருகிறது. பளபளப்பான மேட் கிளாஸ் மற்றும் புதிய பிலிம் லேமினேஷன் ஆகியவற்றை இணைத்து நுட்பமான மற்றும் ப்ரீமியம் மினுமினுப்பான விளைவை வழங்கும் கறுப்புக் கலவை, பளபளப்பான கண்ணாடியுடன் கூடிய வெள்ளை வண்ணமானது, வெள்ளை செரமிக் தோற்றத்தின் கலவையுடன் இணைந்துள்ளது. ஊதா நிறமானது, ஒரு போத்தலில் அடைக்கப்பட்ட ஆடம்பர வாசனைத் திரவியத்தை நினைவூட்டுகிறது.
OPPO Find N ஆனது Qualcomm® Snapdragon™ 888 Mobile Platform, 12 GB வரையான LPDDR5 RAM மற்றும் 512GB UFS 3.1 சேமிப்பகத்துடன் வருகிறது. ஒரு பெரிய 4,500 mAh மின்கலம் நாள் முழுவதற்குமான மின்கல ஆயுளை வழங்கும் அதே நேரத்தில், 33W SUPERVOOC Flash Charge ஆனது, 30 நிமிடங்களில் 55% வரையும் 70 நிமிடங்களில் 100% வரையும் சார்ஜ் செய்ய உகந்ததாக உள்ளது. இது 15W AIRVOOC wireless charging (வழக்கமான Qi இல் செயற்படக்கூடியது) அத்துடன், 10W reverse wireless charging இனையும் கொண்டுள்ளது. OPPO Find N ஆனது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை உணரியையும் அதனுடன் ஒருங்கமைந்த பவர் பட்டனையும் கொண்டுள்ளது. dual speaker தொகுதி மற்றும் Dolby Atmos அம்சங்களுடன், இயற்கையான ஒலி உணர்வை வழங்குகின்றது. OPPO Find N ஆனது, டிசம்பர் 23 முதல் சீனாவில் கிடைக்கிறது.