Pelwatte Dairy நிறுவனம், Culinary Arts Food Exhibition 2025 நிகழ்வின் தங்க அனுசரணையாளராகப் பிரகாசித்துள்ளது  

Share with your friend

இலங்கையில் பாலுற்பத்தித் துறையில் முன்னணி நாமமாகத் திகழ்ந்து வருகின்ற Pelwatte Dairy நிறுவனம், Culinary Arts Food Exhibition 2025 (CAFE 2025) நிகழ்வின் தங்க அனுசரணையாளராக வெற்றிகரமாக பங்கேற்றுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. 2025 ஜுன் 13 முதல் 15 வரை கொழும்பிலுள்ள பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற இந்த பிரசித்தி பெற்ற நிகழ்வு, புத்தாக்கம் மற்றும் தொழிற்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கான மூன்று தினங்களாக புகழ்பெற்ற சமையல் கலை வல்லுனர்கள் மற்றும் பிரபல உணவு வர்த்தகநாமங்களை ஒன்றுதிரட்டியுள்ளது.

இக்கண்காட்சி இடம்பெற்ற காலப்பகுதியில், Pelwatte Dairy ஏற்பாடு செய்திருந்த கண்காட்சிக்கூடத்திற்கு 1,500 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதுடன், உயர் தரம்மிக்க Pelwatte Dairy தயாரிப்புக்களைக் கொண்டு நிபுணத்துவமாகத் தயாரிக்கப்பட்ட பல்வகைப்பட்ட ஐஸ்கிறீம், மற்றும் பாற்பொருள் உணவுகளை அவர்கள் சுவைத்து மகிழ்ந்தனர். வாயில் சுவைக்கும் ஒவ்வொரு தடவையும் தெள்ளத்தெளிவாக நிரூபணமாகும் வகையில் புத்தம்புதிய தன்மை, அதியுயர் தரம், மற்றும் உள்நாட்டு மூலம் ஆகியவற்றின் மீது இந்த வர்த்தகநாமம் காண்பிக்கும் இடைவிடாத அர்ப்பணிப்பை இங்கு வருகை தந்த பார்வையாளர்கள் உற்சாகத்துடன் அனுபவித்து மகிழ்ந்தனர். 

CAFE 2025 கண்காட்சியின் ஆரம்ப தினத்தன்று இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் வருகை தந்து நிகழ்வை அலங்கரித்திருந்தார். Pelwatte Dairy கண்காட்சிக்கூடத்திற்கு வருகை தந்த பிரதமர் அவர்கள், அணியின் உறுப்பினர்களுடன் அளவளாவியதுடன், உள்நாட்டு பாலுற்பத்தித் துறைக்கு இந்த வர்த்தகநாமம் ஆற்றி வருகின்ற கணிசமான பங்களிப்புக்களையும் பாராட்டியுள்ளார்.

கண்காட்சியில் கிடைக்கும் அனுபவத்தை மேலும் மேம்படுத்தும் வகையில், புகழ்பெற்ற சமையல் கலை வல்லுனர் ரஞ்சன் கருணாநாயக்க மற்றும் அவரது உதவியாளரின் தலைமையில் நேரடி சமையல் செயல் விளக்கங்களை Pelwatte Dairy ஏற்பாடு செய்துள்ளது. பாரம்பரிய சமையல் கைவண்ணங்களில் Pelwatte Dairy பாற்பொருள் தயாரிப்புக்களை புதுமையாகவும், நடைமுறைரீதியாகவும் பயன்படுத்துவதைக் காண்பதில் அனைவரும் ஆர்வத்துடன் பங்குபற்றியுள்ளதுடன், அனுபவம்மிக்க சமையல் தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் உணவுப் பிரியர்கள் என கணிசமான எண்ணிக்கையானவர்களை இந்த நிகழ்வு ஈர்த்துள்ளது. 

Culinary Arts Food Exhibition 2025 நிகழ்வானது இலங்கையின் முன்னணி உணவு வர்த்தகநாமங்கள் ஒன்றுகூடும் முக்கியமான மேடையாக மாறியுள்ளதுடன், தனது தயாரிப்பின் மகத்துவத்தைக் காண்பித்து, தொழில்துறையில் முக்கிய தரப்பினருடன் ஈடுபாடுகளை வளர்த்து, மற்றும் தொழில்சார் சமையல் கலை சமூகத்தில் தனது ஸ்தானத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு Pelwatte Dairy நிறுவனத்திற்கு மதிப்புமிக்க வாய்ப்பினையும் வழங்கியுள்ளது. CAFE 2025 நிகழ்வில் Pelwatte Dairy நிறுவனத்தின் ஆர்வத்துடனான பங்கேற்பானது இலங்கையின் துடிப்புமிக்க உணவுத் தொழிற்துறையைப் பலப்படுத்தி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உயர் தர பாற்பொருள் புத்தாக்கங்களை முன்னின்று வழிநடத்துவதில் அதன் உறுதியான அர்ப்பணிப்பைக் காண்பிக்கின்றது.         


Share with your friend