Pelwatte Dairy புதிய நியமனங்களுடன் தலைமைத்துவ அணியை வலுப்படுத்தியுள்ளது

Share with your friend

Pelwatte Dairy தனது வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு, முக்கிய தலைமைத்துவ நியமனங்கள் குறித்து அறிவித்துள்ளது  

கொழும்பு, இலங்கை – [திகதி] – Pelwatte Dairy Industries Ltd நிறுவனம் தனது தொழிற்பாட்டு மகத்துவம் மற்றும் மூலோபாய வளர்ச்சி ஆகியவற்றின் மீது கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, தொழில்துறையில் பாண்டித்தியம் பெற்ற இரு வல்லுனர்களை முக்கிய தலைமைத்துவ பதவிகளுக்கு நியமனம் செய்துள்ளமை குறித்து அறிவித்துள்ளது. டிலாந்த பெர்னாண்டோ அவர்கள் குழும பிரதம நிதியியல் அதிகாரியாகவும், துஷார ஜெயலத் அவர்கள் குழும பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாகவும் தலைமைத்துவ அணியில் இணைந்துள்ளனர். தனது தொழிற்பாடுகளை விரிவுபடுத்தி, வினைதிறன்களை மேம்படுத்தி, மற்றும் ஒட்டுமொத்த வணிக பெறுபேற்றுத்திறன்களை மேம்படுத்தும் நிறுவனத்தின் ஆற்றலை அவர்களுடைய கூட்டு நிபுணத்துவம் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.      

டிலாந்த பெர்னாண்டோ – குழும பிரதம நிதியியல் அதிகாரி

வணிக திட்டமிடல், இலாப,நட்ட முகாமைத்துவம், நிதியியல் அறிக்கையிடல் மற்றும் முதலீட்டாளர் உறவுகள் ஆகியவற்றில் அனுபவத்துடன், பல்வேறுபட்ட துறைகள் மத்தியில் இரு தசாப்த காலத்திற்கும் மேலான தலைமைத்துவத்தை டிலாந்த பெர்னாண்டோ அவர்கள் கொண்டுள்ளார். சீனாவின் Maxim Group மற்றும் Crystal Martin Ceylon ஆகிய நிறுவனங்களில் சிரேஷ்ட நிதிப் பதவிகளை வகித்துள்ள அவர், நிதியியல் மூலோபாயத்தை உச்சப்பயனாக்கி, நிறுவன ஆட்சி அதிகாரத்தை வலுப்படுத்துவதற்குப் பொறுப்பு வகித்துள்ளார். சிக்கல்மிக்க நிதியியல் கட்டமைப்புக்கள் மற்றும் இடர் முகாமைத்துவம் ஆகியவற்றை மேற்பார்வை செய்வதில் அவர் கொண்டுள்ள அனுபவம், நிலைபேணத்தக்க வளர்ச்சியில் Pelwatte Dairy தொடர்ந்தும் சிறந்த ஸ்தானத்தில் திகழ்வதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும்.         

துஷார ஜெயலத் – குழும பிரதம தொழிற்பாட்டு அதிகாரி 

உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளில் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள துஷார ஜெயலத் அவர்கள், Unilever, Fonterra, மற்றும் Avery Dennison உள்ளிட்ட விரைவாக விற்பனையாகும் நுகர்வோர் தயாரிப்பு மற்றும் உற்பத்தி சார்ந்த முன்னணி நிறுவனங்களில் பாரிய அளவிலான உற்பத்தி மற்றும் வழங்கல் சங்கிலியின் பரிணாம வளர்ச்சிக்கு தலைமை வகித்துள்ளார். Japan Institute of Plant Maintenance ல் சான்று அங்கீகாரம் பெற்ற Total Productive Maintenance (TPM)  போதனாசிரியராக தகமை பெற்றுள்ள அவர், பல்வகைப்பட்ட உற்பத்திச் சூழல்கள் மத்தியில் தொழிற்பாட்டு வினைதிறன் மற்றும் தொடர்ச்சியான மேம்பாடுகளை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். உற்பத்தி நடைமுறைகளை சீரமைத்தல், செலவுக் கட்டமைப்புக்களின் உச்சப் பயனாக்கம், மற்றும் வழங்கல் சங்கிலி நெகிழ்திறனை வலுப்படுத்தல் ஆகியவற்றில் அவர் கொண்டுள்ள அனுபவமானது Pelwatte Dairy தனது ஆற்றல்களை விரிவுபடுத்தும் ஒரு காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகக் காணப்படுகின்றது.           

இந்நியமனங்களை வரவேற்று கருத்து வெளியிட்ட Pelwatte Dairy முகாமைத்துவப் பணிப்பாளர் அக்மால் விக்ரமநாயக்க அவர்கள், “வளர்ச்சிக்கான புதிய கட்டத்தில் Pelwatte Dairy காலடியெடுத்து வைத்துள்ள தருணத்தில், எமது தலைமைத்துவ அணியை வலுப்படுத்துவதற்கு அந்தப் பயணத்தை நோக்கிய முக்கியமானதொரு படியாக இந்நியமனங்கள் காணப்படுகின்றன. நாம் எமது போட்டித்திறனை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதை உறுதி செய்து, இலங்கையின் பாலுற்பத்தித் துறைக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதற்கு, எமது நிதியியல் மற்றும் தொழிற்பாட்டியல் கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான பொருத்தமான நிபுணத்துவத்தையும், அனுபவத்தையும் டிலாந்த மற்றும் துஷார ஆகியோர் எமக்கு வழங்குவர். எமது அடுத்த அத்தியாயத்தைச் செதுக்குவதற்கு அவர்களுடைய அனுபவம் மிகவும் முக்கியமானது,” என்று குறிப்பிட்டார்.    

உள்நாட்டில் பெறப்பட்ட பாற்பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துச் செல்லும் நிலையில், தனது உற்பத்தி வலையமைப்பை விரிவுபடுத்தி, தனது தயாரிப்புக்களை பல்வகைப்படுத்தி, மற்றும் உள்நாட்டு பால் உற்பத்தியாளர்களுடனான தனது கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதில் Pelwatte Dairy கவனம் செலுத்தியுள்ளது. நிறுவனத்தின் நீண்ட கால இலக்குகளுடன், தலைமைத்துவ நிபுணத்துவத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு முக்கியமான படியாக இந்நியமனங்கள் காணப்படுகின்றன.  

2006ல் தான் இயங்க ஆரம்பித்த காலம் முதல், உயர் தரம் கொண்ட, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பாற்பொருட்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகளை உறுதி செய்து, நிலைபேற்றியல் மற்றும் நெறிமுறை சார்ந்த கொள்வனவு நடைமுறைகள் மீது உறுதியான அர்ப்பணிப்பைப் பேணி, இலங்கையின் பால் உற்பத்தித் துறையில் Pelwatte Dairy முன்னணி பங்கு வகித்து வந்துள்ளது. தற்போது புதிய தலைமைத்துவ அணியுடன், தனது உறுதியான அத்திவாரத்தை மேலும் கட்டியெழுப்பி, அதன் வளர்ச்சி மூலோபாயத்தின் அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதற்கான சிறந்த ஸ்தானத்தில் நிறுவனம் உள்ளது.   


Share with your friend