ஆஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட முன்னணி வெளிநாட்டு கல்வி ஆலோசகரான PFEC Global, இலங்கையில் முதலாவது உலக கல்வி கண்காட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இந்நிகழ்வு நூற்றுக்கணக்கான இலங்கை மாணவர்களுக்கு அவர்களின் வெளிநாட்டு கல்வி கனவுகளை நனவாக்குவதற்கு முதல் படியாக அமைந்தது.
கொழும்பில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வு, ஒஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடாவைச் சேர்ந்த உயர்மட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைத்து, மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உலகளாவிய கல்வி கனவுகளை ஆராய்வதற்கு நேரடி வாய்ப்பை வழங்கியது.

100 இற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட நிலையில், பார்வையாளர்கள் சர்வதேச பல்கலைக்கழக பிரதிநிதிகளுடன் ஒருவருக்கு ஒருவர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, கல்விக்கான வழிகள், நுழைவுத் தகுதி, புலமைப்பரிசில்கள் மற்றும் கல்விற்கு பிந்தைய தொழில் வாய்ப்புகள் குறித்து தெளிவு பெற்றனர். மாணவர்கள் உடனடி சுயவிவர மதிப்பீடுகளிலிருந்து பயனடைந்து புலமைப்பரிசில்கள் அல்லது கட்டண சலுகைகள் பெறுவதற்கான வழிகாட்டுதலையும் பெற்றனர். மேலும் சிலர் உடனடி சலுகைக் கடிதங்களுடன் வெளியேறினர். இது அவர்களின் வெளிநாட்டு கல்வி லட்சியங்களை அடைவதற்கு முதல் படியாக அமைந்தது. பங்கேற்பாளர்கள் வெளிநாட்டு கல்விக்கு மாறுவதை, அணுகக்கூடியதாகவும் மலிவு விலையிலும் கிடைக்கக்கூடிய விதத்திலான பிரத்தியேக சலுகைகளான, விண்ணப்பக் கட்டணம் இல்லாமலும், மலேசிய விமான சேவையில் சலுகை விலையில் விமான கட்டணங்கள் மற்றும் மேலதிக பயணப் பொருட்களுக்கான அனுமதி போன்றவற்றையும் பெற்றுக்கொண்டனர்.
நிகழ்வின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த PFEC குளோபலின் தலைமை நிர்வாக அதிகாரி மொஹமட் ஷைதுல் இஸ்லாம், “இலங்கை நாட்டின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமிருந்து கிடைத்த பதில் அபரிமிதமானது. உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களுடன் இவ்வளவு ஆர்வமுள்ள அறிஞர்களை நேரடியாக இணைத்ததற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். இது ஒரு ஆரம்பமே – இலங்கை நாட்டின் திறமையாளர்கள் உலக மேடையில் செழிக்க இன்னும் பல நுழைவுகளைத் திறப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.”
PFEC குளோபல் இலங்கையின் தலைவர் நவ்தீப் கோர் கருத்து தெரிவிக்கையில், “மாணவர்கள் உடனடி சலுகைகள் மற்றும் அவர்களின் எதிர்காலம் குறித்த புதிய தெளிவுடன் வெளியேறுவதைப் பார்ப்பது மிகவும் பலனளிக்கும் அனுபவமாக இருந்தது. வெளிநாட்டு கல்வி பயணத்தை எளிமையாக்குவதும், மேம்படுத்துவதுமே எங்கள் இலக்காகும். மேலும் இந்நிகழ்வு பல்கலைக்கழக பிரதிநிதிகளுடனான நேரடி ஈடுபாடு எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது.”
2006 முதல், PFEC குளோபல் மாணவர்களை அவர்களின் சர்வதேச கல்வி மற்றும் குடிபெயர்வு இலக்குகளை நோக்கி வழிநடத்துவதில் முன்னணியில் உள்ளது. மெல்பர்னில் தலைமையகம் கொண்ட இந்நிறுவனம், ஒஸ்திரேலியா, பங்கலாதேஸ், இலங்கை மற்றும் இந்தியாவில் 11 அலுவலகங்களை இயக்குவதோடு, மேலும் உலகளவில் 550 இற்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதுவரை 22,000 இற்கும் மேற்பட்ட வெற்றிக் கதைகளுடன், PFEC குளோபல் வெளிநாட்டில் கல்வி கற்க விரும்பும் மாணவர்களுக்கு தடையற்ற, முழுமையான உதவியை வழங்கும் நம்பகமான பெயராக தொடர்கிறது.