Prime Group தனது Clover Signature Villas ஐ உரிமையாளர்களிடம் கையளித்தது

Share with your friend

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் ஒப்பற்ற முன்னோடியாகத் திகழும் Prime Group, தனது Clover by Prime Signature Villas திட்டத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து, அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வை அண்மையில் கொண்டாடியிருந்தது. தனது ஒவ்வொரு நிர்மாணத்திட்டங்களிலும், தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை விவரங்களில் நுணுக்கமாக கவனம் செலுத்தல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு முதலிடம் அளித்தல் எனும் கோட்பாடுகளைப் பேணும் Prime Group இன் அர்ப்பணிப்பை மேலும் வெளிப்படுத்துவதாக இந்தத் திட்டத்தின் பூர்த்தி அமைந்துள்ளது.

Clover இல் 54 சொகுசு விலாக்கள் அமைந்திருப்பதுடன், அவை 16 பிரத்தியேகமான வடிவமைப்புகளில் காணப்படுகின்றன. தலவத்துகொட பகுதியில் அமைதியான 4.5-ஏக்கர் காணியில் இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

Prime Group’இன் இணை-தலைமை அதிகாரி சந்தமினி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “Prime Group’இன் 28ஆவது விலா பூர்த்தியை நாம் இன்று கொண்டாடுகிறோம். 28ஆவது விலா சமூகத்தாருக்கும் மற்றும் இதுவரையில் குழுமத்தினால் 39 தொடர்மனைத் தொகுதிகளும் நிர்மாணிக்கப்பட்டு உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. அதனூடாக, வாழ்வுக்கு வளமூட்டும் இல்லங்களை விநியோகிப்பதில் எமது அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. Clover இல் காணப்படும் ஒவ்வொரு அம்சமும், அலங்காரம், சௌகரியம் மற்றும் சமூகம் ஆகியவற்றில் Prime’இன் அதீத ஈடுபாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன. மேலும், தற்போது 3,000 க்கும் அதிகமான அலகுகள் நிர்மாணிக்கப்பட்ட வண்ணமுள்ள நிலையில், இலங்கையின் பொருளாதாரத்துக்கு Prime Group பெருமளவு பங்களிப்பு வழங்கப்பட்ட வண்ணமுள்ளது. அவற்றினூடாக, ஆயிரக் கணக்கான தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், வரி வருமானமும் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. Prime இல், வாழ்க்கை முறைகளை வடிவமைத்து, ரியல் எஸ்டேட் தொழிற்துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். இந்த மைல்கல் பூர்த்தியானது, Clover குடும்பத்தாருக்கு மகிழ்ச்சிகரமான தருணங்களின் ஆரம்பமாக அமைந்திருப்பதுடன், இலங்கையின் ரியல் எஸ்டேட் தொழிற்துறையை மாற்றியமைப்பதில் நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.”

Prime Group இன் நீண்ட நாள் வாடிக்கையாளர்களில் ஒருவரான ரெக்ஸ் குணதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கும், Clover Villas இன் உரிமையாளர்களாக திகழும் அனைவருக்கும் இன்று மிகவும் மகிழ்ச்சிகரமான நாளாகும். நான் Prime இன் நீண்ட கால வாடிக்கையாளராக திகழ்வதுடன், இது எனது மூன்றாவது முதலீடாகும். Prime Group இன் வலிமையான செயற்பாட்டை நான் பாராட்டுகிறேன். அவர்களின் வாடிக்கையாளர் சேவை மற்றும் பணிகளில் ஈடுபட்ட அணியினர் சிறப்பாக செயலாற்றியிருந்தனர். நான் நிர்மாணப் பணிகளின் போது சில தடவைகள் விஜயம் செய்திருந்தேன். பெரும்பாலும் முன்னறிவித்தல்கள் எதுவுமின்றி வந்திருந்தேன். எவ்வாறாயினும், அனைவரும் ஆதரவாக இருந்தனர். மேலதிகாரியுடன் என்னால் கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடிந்திருந்தது. அவரும், அவரின் அணியினரும் சுமூகமாக பதிலளித்திருந்தனர். Prime இல் நான் அவதானித்த பிரத்தியேகத் தன்மையாக இது அமைந்திருந்ததுடன், நட்பான சூழல் உருவாக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களின் மீது அக்கறையுடன் செயலாற்றும் தவிசாளர் மற்றும் இணை-தலைமை அதிகாரிக்கு நான் நல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். Prime இல் முதலீடு செய்ததையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.” என்றார்.

புதிய உரிமையாளர்களான சாரங்க திசாசேகர மற்றும் தினக்ஷி பிரியசாத் ஆகியோர் குறிப்பிடுகையில், “நாம் எதிர்பார்ப்புடன் இருந்தோம். தற்போது பணிகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அதன் வனப்பை எம்மால் காணக்கூடியதாக உள்ளது. Prime இன் Clover நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் வரை நாம் விறுவிறுப்பான எதிர்பார்ப்புகளை கொண்டு காத்திருந்தோம். இது ஒரு  அழகிய மாலைப் பொழுது. இங்கு குடியேற நாம் ஆர்வத்துடன் உள்ளோம். எமது அயலவர்கள் பலரை நாம் சந்தித்தோம். அவர்களும் நட்பானவர்களாக உள்ளனர். முழுத் திட்டமும் சிறப்பாக அமைந்துள்ளதுடன், அதில் அங்கம் பெறுவதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகிறோம். அழகிய, சொர்க்கத்தைப் போன்ற வியக்கத்தக்க பகுதியாக அமைந்துள்ளது. நீச்சல் தடாகம், ஜிம், யோகா டெக் போன்ற பல அம்சங்களைக் கொண்ட பரிபூரணமான பகுதியாகும். எதிர்காலத்தில் மேலும் வனப்புப் பெறும் என எதிர்பார்க்கிறோம். எமது வாழ்நாள் முழுவதையும் இங்கே செலவிட விரும்புகிறோம்.  எமது பிள்ளைக்கு சிறந்த சூழலை, பாதுகாப்பான சமூகத்தை, பெருமளவு  இடவசதியுடன் வழங்குவது நாங்கள் இங்கு முதலீடு செய்ததற்கான காரணங்களில் ஒன்றாகும். இந்த அழகிய திட்டத்தை எமக்கு வழங்கியமைக்காக Prime Group க்கு நன்றி தெரிவிக்கிறோம்” என்றனர்.

இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் Prime Group இன் தலைமைத்துவத்தை நோக்கிய பயணத்துக்கு இது போன்ற திட்டங்கள் மேலும் வலுவூட்டுகின்றன. உறுதியான அடித்தளம் மற்றும் பரந்த பிரிவுகளுடன் சந்தையின் முன்னோடி எனும் நிறுவனத்தின் கீர்த்திநாமத்தை மேலும் உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கையளிப்பினூடாக, Prime Group இன் இலங்கைக்கு அப்பால் தனது ரியல் எஸ்டேட் சிறப்பை வியாபிக்க தயாராகும் செயற்பாட்டுக்கு மேலும் வலுச் சேர்க்கப்பட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் வீட்டு உரிமையாளர்களுக்கு தனது ரியல் எஸ்டேட் சிறப்பை வெளிகாண்பிப்பதற்கு புதிய வழிமுறைகளையும், பங்காண்மைகளையும் ஏற்படுத்தும் சர்வதேச செயற்பாட்டாளராக Prime Group தன்னை நிலைநிறுத்தும். Prime Group இன் செயற்திட்டங்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.primelands.lk ஐப் பார்வையிடவும் அல்லது 0706 859 859 என்ற எண்ணை அழைக்கவும். 


Share with your friend