Prime Lands Residencies இன் J’Adore Negombo நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கும் முன்னதாக 99% விற்பனைகளை பூர்த்தி செய்துள்ளதுடன், ICC உடன் இணைந்து நிர்மாணப் பணிகளை ஆரம்பித்துள்ளது

Share with your friend

தொலைநோக்குள்ள நிர்மாணத் திட்டங்கள் மற்றும் சந்தையில் முன்னோடியான புத்தாக்கங்களை முன்னெடுக்கின்றமைக்காக புகழ் பெற்றுள்ள Prime Lands Residencies PLC, தனது J’Adore Negombo இன் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்காக, விருதுகள் வென்ற பல்-துறை ஒப்பந்தக்காரரான International Construction Consortium (ICC) உடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது.

Prime Lands Residencies மற்றும் ICC ஆகியவற்றுக்கிடையிலான பங்காண்மை என்பது, துறையில் காணப்படும் இரு நன்மதிப்பைப் பெற்ற முன்னோடி நிறுவனங்களின் கைகோர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது. தொலைநோக்குடைய வதிவிட அபிவிருத்திகளில் முன்னெடுப்பதில் உறுதியான நிலையை Prime Group கொண்டிருப்பதுடன், பொறியியல் நுணுக்கம் மற்றும் ஒப்பற்ற தரம் ஆகியவற்றில் ICC புகழ்பெற்றுள்ளது. இரு நிறுவனங்களும் தமது வலிமைகளை ஒன்றிணைத்து, முக்கியத்துவம் வாய்ந்த செயற்திட்டத்தை வழங்க முன்வந்துள்ளன. இந்த கைகோர்ப்பினூடாக J’Adore Negombo நிர்மாணப் பணிகள், நம்பிக்கை, நிபுணத்துவம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த வசிப்பிட அனுபவத்தை வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கான பகிரப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது உறுதி செய்யப்படும்.

வதிவிட, வணிக மற்றும் விருந்தோம்பல் துறைகளில், பாரிய நிர்மாணங்கள், MEP மற்றும் fit-out பணிகள் போன்றவற்றை முன்னெடுப்பதில் முன்னணி ஒப்பந்தக்காரராக International Construction Consortium (ICC) திகழ்கிறது. புகழ்பெற்ற வானுயர்ந்த டவர்கள் மற்றும் ஒன்றிணைந்த நிர்மாணங்கள் போன்றவற்றை தன்னகத்தே கொண்டுள்ள ICC, ஒப்பற்ற தரம், பாதுகாப்பு மற்றும் அதிகரித்துச் செல்லும் கேள்வியை நிறைவேற்றல் போன்றவற்றுக்காக பெரிதும் அறியப்படுகிறது.

நீர்கொழும்பு, ஹோட்டல் வீதியில் இந்தத் திட்டத்தின் அமைவிடப் பகுதியில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக, மொத்தமான 336 serviced apartmentகளின் 99% ஆனவை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே விற்றுத்தீர்ந்துள்ளமை விசேட அம்சமாக அமைந்துள்ளது. அதனூடாக J’Adore concept இன் மீது உறுதியான கொள்வனவாளர் நம்பிக்கை மற்றும் சிறப்புக்கான Prime Lands Residencies இன் கீர்த்தி நாமம் ஆகியவற்றை இது உறுதி செய்துள்ளது.

J’Adore Negombo இனால் இலங்கையின் முதலாவது பிரதான serviced-apartment சமூகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் பாணியிலமைந்த வசிப்பிடத்துடன், வீட்டு உரிமையாண்மையின் பிரத்தியேகத்தன்மை கலந்த வடிவமைப்பைக் கொண்டுள்ளது. நீர்கொழும்பு கடற்கரை பகுதியிலிருந்து சில நிமிடங்களில் பயணிக்கும் தூரத்திலும், கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையம் ஆகியவற்றை அண்மித்தும் அமைந்துள்ளது. நவீன வசதிகள் படைத்த இரண்டு மற்றும் மூன்று படுக்கையறை வதிவிடங்களில், முழுமையான வசதிகளைக் கொண்ட உடற்பயிற்சி நிலையம், களப்பை முகப்பாகக் கொண்ட நீச்சல் தடாகம், sky gardenகள் மற்றும் எந்நேரமும் வழங்கப்படும் concierge சேவைகள் போன்றன அடங்கியுள்ளன.

சிறந்த வசதிகள் மற்றும் அமைவிடம் போன்றன உயர்ந்த வருமதிகளைப் பெற்றுக் கொடுக்கும் என்பதுடன், நீண்ட கால மூலதன உயர்வுக்கும் வழிகோலும். அதனூடாக, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு J’Adore சிறந்த தெரிவாக அமைந்திருப்பது உறுதி செய்யப்படும்.

நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாக 99 சதவீதமானவை விற்றுத் தீர்ந்துள்ளதனூடாக, நீர்கொழும்பின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் துறையில் serviced-apartment மாதிரிக்கு நிலவும் உறுதியான சந்தை கேள்வி வெளிப்படுத்தப்பட்டுள்ளது. பெருமளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை, உறுதியான கூட்டாண்மை கேள்விகள் போன்றவற்றுடன் அருகாமையிலுள்ள போக்குவரத்து வசதிகள் மற்றும் குறுகிய கால தங்குமிட தேவைகள் உயர்தர சேவைகளுடன் கவரப்பட்டுள்ளன. J’Adore Negombo இனால் முதலீட்டாளர்களுக்கு முதல் நாளிலிருந்து ஆரோக்கியமான வாடகை வருமதிகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும். ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்காக மட்டுப்படுத்தப்பட்டளவு penthousesகளை முற்பதிவு செய்து கொள்ள முடியும். இதனூடாக, செயற்திட்டத்தின் உயர்ந்த கேள்வி மற்றும் சந்தையில் பிரத்தியேகமான அமைவிடம் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன.

விருதுகள் வென்ற வதிவிட மற்றும் கலப்பு-பாவனை செயற்திட்டங்களை வழங்குவதில் தனது கீர்த்தி நாமத்தை Prime Lands Residencies PLC கட்டியெழுப்பியுள்ளது. இவை மூலோபாய அமைவிடங்களில் புத்தாக்கமான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. நிறுவனத்தின் பிந்திய தொலைநோக்குடைய அபிவிருத்தித் திட்டமாக J’Adore Negombo அமைந்திருப்பதுடன், வெப்பவலய பிரதேச வசிப்பிட அனுபவத்தையும், இலங்கையின் நகரமயமாக்கல் வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளது.இலங்கையின் ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி செயலணியாக திகழும் Prime Group, நம்பிக்கை மற்றும் சிறப்பு ஆகியவற்றில் 30 வருட மரபை கட்டியெழுப்பியுள்ளது. தனது இந்த மரபின் அங்கமாக, தொடர்மனைகள் பிரிவில் உறுதியின் அடையாளமாக Prime Lands Residencies PLC நிறுவப்பட்டுள்ளதுடன், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இதுவரையில் 45 செயற்திட்டங்களை பூர்த்தி செய்துள்ளது. மேலும், தற்போது 5+ நிர்மாணத்திட்டங்களை முன்னெடுப்பதுடன், மேலும் 2+ திட்டங்களை புதிதாக அறிமுகம் செய்து, வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கை ஆகியவற்றில் தனது உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.


Share with your friend