Samsung Sri Lanka அறிமுகப்படுத்தும் ‘Upgrade Festival’

Share with your friend

இலங்கையின் முன்னணி நுகர்வோர் Electronics Brandஆன Samsung, Upgrade festival என்ற பருவகால பிரச்சாரத்தினை தொடங்குவதாக அறிவித்தது. இதுவே இலங்கையின் முதல் மற்றும் மிகப்பெரிய Home Upgrade festival ஆகும். இந்தப் பருவத்தில் நுகர்வோருக்கு மீளக் கொடுக்கும் நோக்குடன், Samsung Electronics அனைத்து இலங்கை வாழ் குடும்பங்களையும் உயர்ந்த Samsung தெரிழில்நுட்பத்திற்கு மேம்படுத்த தயாராக உள்ளது. 

இப்பிரச்சாரம் நவம்பர் 5ஆம் திகதி ஆரம்பித்ததுடன் டிசம்பர் 31, 2021 வரை செல்லும்படியாகும். கிடைக்கப்படும் voucherகளை குறிப்பிட்ட வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கு மட்டுமே பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ரூபா.140 மில்லியன் வரை பரிசுகள் பெற முடியும்.

வரவிருக்கும் பருவத்தில் மேலும் உற்சாகத்தை அதிகரிக்க நாடு முழுவதுமுள்ள அனைத்து முன்னணி நுகர்வோர் Electronics சில்லறை விற்பனையாளர்களிடமும் கவர்ச்சிகரமான கட்டணத் திட்டங்களுடன் அற்புதமான தயாரிப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

Kevin SungSU YOU, இலங்கைக்கான Samsungஇன் முகாமைத்துவப் பணிப்பாளர், ‘இந்தப் பண்டிகைக்காலம் என்பது நுகர்வோர் தங்கள் வீடுகளை மேம்படுத்துவதற்கும் அவர்களுடன் நாம் தொடர்பு கொள்வதற்குமான ஆண்டின் சிறந்த காலப்பகுதியாகும். நுகர்வோர் வீட்டில் அதிக நேரம் செலவிடுவது அவர்கள் விருப்பங்களை மாற்றியுள்ளது. இதனால் வீட்டுப் பாவனைப் பொருட்களுக்கான தேவை அதிகரிப்பதற்கும் அவர்கள் வாழும் இல்லத்தின் தனித்துவமான சிறந்த அனுபவத்தை பெறவும் வழிவகுக்கிறது. Smart TVகள், அதித திறன்கொண்ட குளிர்சாதனப் பெட்டிகள், washing machineகள் மற்றும் microwavesகான தேவை அதிகரிப்பதையும் நாம் கண்டிருக்கிறோம். அனைத்து குடும்ப அங்கத்தினரும் வீட்டிலிருந்து வேலை செய்வதையும் படிப்பதையும் தொடர்வதால் வீடுகளுக்கு premium air conditionerகளை வாங்குவது அதிகரித்துள்ளது. இந்த Upgrade Festival மற்றும் சலுகைகள் இந்த கொண்டாட்டங்களை இன்னும் சிறப்பானதாகவும் மறக்க முடியாததாகவும் மாற்றும். voucherகள் bundle offerகள் மற்றும் எளிதான தவணைக் கட்டணத் திட்டங்களின் கூடுதல் நன்மைகளுடன் வாழ்க்கையை எளிதாக்கும் புத்தாக்க தயாரிப்புகளை வழங்க நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்’ எனக் கூறினார். 

Samsung Electronics தொடர்ந்து மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கை வாழ தொடர்ந்து கண்டுபிடிப்புகளை செய்து வருகிறது. இந்த உபகரணங்களின் திறன்களைக்; கண்டறிய மறைந்திருக்கும் பகுதிகளை ஆராய்வதன் மூலம் அதிக வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறது.

Upgrade Festival மூலம் தேந்தெடுக்கப்பட்ட Samsung TVகள், குளிர்சாதனப் பெட்டிகள், washing machineகள் மற்றும் A/Cகளுக்கு ரூபா 2,500 முதல் ரூபா 5,000 வரை voucherகளை redeem செய்ய முடியும். bundle offer மூலம் ரூபா.9,999 மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள Sound bar போன்றவற்றையும் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கொண்டாட்டமானது தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வழியாகும்.அவ்வாறான அர்த்தமுள்ள கண்டுபிடிப்புகள் இலங்கை வாழ் மக்களை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

Visual Display வணிகத்தில், 2021ஆம் ஆண்டும் தொடர்ந்து 15வது ஆண்டாகவும் Samsung Electronics உலகளாவிய TV சந்தையில் முதலிடத்தில் உள்ளது. Samsung நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்றவிதமாக அதிநவீன புத்தாக்க கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் இத்துறையில் 15 ஆண்டுகளாக முன்னணியில் உள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வண்ணப்பார்வை குறைபாடுள்ளவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகள் மற்றும் eco-friendly packaging போன்றவை இத்துறையில் தன் நிலைத்தன்மையை தொடர்ந்து காட்டுவதற்கான முயற்சிகளும் தொடர்கிறது என்பதற்கு சான்றாகும். 

QLED 8K TV மற்றும் Crystal UHD 4K TV ஆகியவை அற்புதமான தொழில்நுட்பத்தையும் பார்வை அனுபவத்தையும் வழங்குகின்றன. Windfree மற்றும் 5in1 air conditionerகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியான மேம்பட்ட Curd Maestro Refrigerator, உலகின் முதல் Frost Free Refrigeratorஆன இது புதிய தயிரை உருவாக்கி பாதுகாக்கிறது.

Covid-19 தொற்று நோய் சமயத்திலும் Samsung Electronics தனது உறுதித் தன்மையைக் காத்துக்கொண்டது. மேலும் Omdia சந்தை ஆராய்ச்சியின் படி தொடர்ந்து 15வது ஆண்டாகவும் உலகளாவிய TV சந்தையில் No:1 இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

புதிய கண்டுபிடிப்புகள் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலப்பகுதியில் அனைத்து நுகர்வோருக்கும் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் நம்பகமான brandஐ தேந்தெடுப்பது மிகவும் முக்கியம். இன்றுள்ள நுகர்வோர் மிகவும் மாறுபட்ட வித்தியாசமான விருப்பங்களை கெர்ண்டுள்ளனர். சில உயர்தர நுகர்வோர் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களை சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் தங்கள் வீடுகளை தனிப்பயனாக்கம் செய்து பராமரிக்க விரும்புகிறார்கள். இவ்வாறான தேவைகள் பூர்த்தி செய்யும் வண்ணம் Samsung விரிவாக்கப்பட்ட வீட்டு உபகரங்களின் வரிசையை வடிவமைத்துள்ளது. இதனால் பயனர்கள் தங்கள் வீட்டு அலங்காரம் மற்றும் வாழ்க்கை முறை  தேவைகளுடன் தனிப்பயனாக்கம் செய்யக்கூடிய சாதனங்களை ஒத்திசைக்க அனுமதிக்கிறது.

இலங்கையின் Samsung most Love Electronic Brandஆக தொடர்ச்சியான மூன்று வருடங்கள் Brand Finance Lankas நிறுவனத்தால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இங்கையின் No:1 Smartphone Brand Samsung அனைத்து வயதினரிடமும் குறிப்பாக Gen Z மற்றும் millennial பிரிவுகளில் உள்ளது.


Share with your friend