Sana Commerce உடன் தந்திரோபாய கைகோர்ப்பை மேற்கொள்வதாக ISM APAC அறிவிப்பு

Share with your friend

முன்னணி e-வணிக தீர்வுகள் வழங்குநரான ISM APAC, நெதர்லாந்தைச் சேர்ந்த e-வணிக நிறுவனமான Sana Commerce Global உடன் தந்திரோபாய கைகோர்ப்பை மேற்கொண்டு Sana Commerce Sri Lanka என மாற்றம் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. தொழிற்துறையில் ஏழு ஆண்டுகள் சுயாதீனமாகவும், ஆசிய பசுபிக் பிராந்தியத்துக்கு சேவைகளை வழங்கியிருந்ததுடன், அதன் தலைமையகத்தின் பிரதான அபிவிருத்தி நிலையமாகவும் அமைந்திருந்ததைத் தொடர்ந்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

180க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்த புதிய கைகோர்ப்பினூடாக பரந்தளவு பிராந்தியங்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடிய வகையில் வியாபித்துள்ளதால், மேலும் வளர்ச்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், ஒவ்வொரு ஊழியருக்கும் தற்போது சர்வதேச வெளிப்படுத்தலை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், Sana Commerce இனால் முன்னெடுக்கப்படும் பரந்தளவு அறிவு, பயிலல் மற்றும் பயிற்சித் திட்டங்களில் பங்கேற்று, நிறைந்த, பரந்தளவு மற்றும் பரிபூரண அனுபவத்தைக் கொண்டிருக்க முடியும்.

உற்பத்தியாளர்கள், விநியோகத்தர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை வாடிக்கையாளர்களுடன் இணைப்பது, நிர்வகிப்பது மற்றும் நீண்ட காலம் நிலைத்திருக்கும் உறவுகளைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் e-வணிக கட்டமைப்பாக Sana Commerce அமைந்துள்ளது. வழமையான கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு அப்பால் உறவு சுழற்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகின்றது. Sana Commerce அண்மையில் பெற்றுக் கொண்ட கௌரவிப்புகளில், Forrester இனால் உறுதியான செயற்பாட்டாளர், E-Commerce ஜேர்மனி விருதுகள் 2021 இல்  சிறந்த E-shop வெற்றியாளர் மற்றும் G2 இடமிருந்து மத்திய சந்தையில் முன்னோடி ஆகிய விருதுகளை வென்றிருந்தது.

Sana Commerce இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பங்காளருமான Michiel Schipperus

கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையைச் சேர்ந்த எமது அபிவிருத்தி நிலையத்தில் திறமை வாய்ந்த நிபுணர்களைக் கொண்டுள்ளதுடன், எமது புத்தாக்கமான செயற்பாடுகளின் வெற்றிக்கு இவர்கள் முக்கிய பங்காற்றியிருந்தனர். பல்வேறு திட்டங்களை முன்னெடுப்பதற்கு தலைமைத்துவமளித்திருந்ததுடன், எமது எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் எப்போது செயலாற்றியிருந்தனர். இந்த கைகோர்ப்புடன், நாம் தொடர்ந்தும் வளர்ச்சியடைவோம்.” என்றார்.

Great Place to Work Sri Lanka இனால் 2021, 2020 மற்றும் 2017 வருடங்களில் சிறந்த சிறிய மற்றும் நடுத்தரளவு IT/ITes பணியிடங்களில் ஒன்றாக Sana Commerce Sri Lanka தரப்படுத்தப்பட்டிருந்தது. கலந்துரையாடல்கள், ஆக்கத்தின் மற்றும் அறிவுப் பகிர்வுத் திட்டங்கள் போன்றவற்றினூடாக, தனிநபர் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் நிறுவனத்தின் கலாசாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளில் பல்கலைக்கழகங்களில் அழைப்பு விரிவுரையாளர்களாக செயலாற்றுவது மற்றும் She Coderess போன்ற இலங்கையின் ஒரே பெண்களுக்கு மாத்திரமான hackathon நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்குவது போன்றன அடங்கியுள்ளன. 

Sana Commerce Sri Lanka முகாமைத்துவ பணிப்பாளர் பிரியந்த பெத்மகே கருத்துத் தெரிவிக்கையில், “Sana Commerce இன் பிரதான அபிவிருத்தி நிலையங்களில் ஒன்றாக நாம் இயங்க ஆரம்பித்திருந்தோம். ஆயினும் தற்போது இந்த கைகோர்ப்பினூடாக, உலகின் சகல பாகங்களையும் எம்மால் சென்றடையக்கூடியதாக இருக்கும். எம்மால் வழங்கக்கூடிய சேவைகளில் அபிவிருத்தி, தீர்வுகளை வழங்கல் மற்றும் பல அம்சங்கள் அடங்கியிருக்கும்.” என்றார்.

நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான குழுவினால் சமூகத்தில் பல்வேறு வலுவூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. ‘Sipsatharata Arunallak’ – “கல்விக்கான உதவும் கரங்கள்” திட்டத்தினூடாக, நாட்டின் பின்தங்கிய சிறுவர்களுக்கு தரமான கல்வியைத் தொடர்வதற்கான உதவிகள் வழங்கப்படுகின்றன. 

புதிய தோற்றத்துடன், Sana Commerce ஸ்ரீ லங்காவினால், இலங்கையின் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு பிரத்தியேகமான மற்றும் விரிவான சர்வதேச அனுபவத்தை வழங்கும் வகையில் தனது கதவுகளை திறந்திருக்கும்.


Share with your friend