வடிவமைப்பு சமுதாயத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பயனுள்ள உள்ளக வடிவமைப்பானது வாழ்க்கையை சிறப்பாக மாற்றும் திறகனைக் கொண்டுள்ளது என்பதைப் புரிந்துகொண்டு ஐக்கிய இராச்சியத்தின் புகழ்பெற்ற லிபபூர் ஜோன் மூர் கல்லைக்கழகத்திடமிருந்து (LJMU) முழுமையான உரிமையைப் பெற்று உள்ளக வடிவமைப்புக்கான (interior design) BA பட்டத்தை SLIIT School of Architecture மாணவர்களுக்கு வழங்கிவருகிறது.
இந்தப் பாடத்திட்டமானது மாணவர்களின் சர்வதேச மற்றும் உள்ளூர் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்தும் வகையில் புத்தாக்கமான இடத்தை உருவாக்கிக் கொள்ள அவர்களின் முழுமையான திறன்களை மேம்படுத்துகிறது. ஆனது தற்பொழுது கட்டடவடிவமைப்புக் கலையில் BSc (Hons) பட்டம் மற்றும் கட்டடக்கலையில் MSc பட்டப்பின்படிப்புத் திட்டம் ஆகியவற்றை வழங்கி வருகிறது. LJMU உடன் இணைந்து வழங்கப்படும் இந்த மதிப்புமிக்க பாடப்பட்டியலில் உள்ளக வடிவமைப்பில் பட்டமும் மேலதிகமாக இணைந்துள்ளது.
உள்ளக வடிவமைப்புப் பட்டப்படிப்பானது மூன்று வருடங்களைக் கொண்டதாக அமைந்திருப்பதுடன், மாலபேயில் அமைந்துள்ள பிரதான கம்பஸின் பொறியியல் பீட கட்டடத்தில் ஸ்டூடியோ வசதிகளுடன் இப்பாடநெறி கற்பிக்கப்படுகிறது. இதில் 60ற்கும் அதிகமான மாணவர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.
இந்தப் பாடத்திட்டத்துக்கு க.பொத. உயர்தரப் பரீட்சையில் அல்லது லண்டன் உயர்தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு துறையில் மூன்று சித்திகளைப் பெற்றிருப்பது தகுதியாக அமையும். அத்துடன் இந்தப் பாடநெறியைத் தொடர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு SLIIT School of Architecture திறனாய்வுப் பரீட்சை நடத்தி அதில் சித்திபெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுக்கும்.
படைப்பாற்றல் மற்றும் வடிவமைப்புத் தொடர்பான திறனை வெளிப்படுத்துவதற்கு வடிவமைப்புக்கான ஸ்டூடியோ, CAD வேர்க்ஷொப், பப்ரிகேஷன் வேர்க்ஷொப், பொறியியல் ஆய்வுகூடம் போன்ற பிந்திய வசதிகளை மாணவர்கள் பெற்றுக்கொள்வர்.
உள்நாட்டிலும், சர்வதேச ரீதியிலும் உள்ள எந்தவொரு நிறுவனத்திலும் மாணவர்கள் வேலையைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்துவதே SLIIT School of Architecture இன் நோக்கமாகும். கற்றல் முடிவுகளை தரப்படுத்துவதன் மூலம், உயர் திறமை வாய்ந்த நிபுணர்களுக்கு அதிக தேவை இருப்பதால், மாணவர்கள் உலகளவில் வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.
ஏனைய உள்ளக வடிவமைப்புத் திட்டங்களைப் போல் அன்றி, SLIIT மாணவர்கள் SLIIT School of Architecture இன் ஒரு பகுதியாக இருக்கும் பணியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கான அணுகலைப் பெறுவார்கள். வடிவமைப்பு மாணவர்கள் கட்டடக்கலை மாணவர்களின் பின்னணி மற்றும் வடிவமைப்பு ஸ்டுடியோக்களைப் பயன்படுத்துவதன் மூலம் பயன்பெறுவதுடன், இரு பகுதி மாணவர்களும் இந்த வசதிகளைப் பயன்படுத்துவார்கள்.
கட்டடக்கலைத் திட்டங்களில் பணிபுரிவதற்கான வாய்ப்புக்களை மாணவர்கள் பெற்றுக் கொள்வதுடன், கட்டடக் கலைஞர்கள் மற்றும் உள்துறை வடிவமைப்பாளர்களான விரிவுரைகளின் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து பயிற்சி பெறுவதற்கான அணுகலைப் பெறுகிறார்கள். மேலும் பயிற்சி பெற்ற கட்டக்கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பார்கள் தமது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்ள கல்லூரிக்கு வருகைதருவார்கள். கல்லூரியின் கணினி ஆய்வகம் மூலம் தொழில்துறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு திறன்களை சோதிக்கும் மென்பொருளைப் பெற முடியுமாக இருப்பது வடிவமைப்புத்துறை மாணவர்கள் பெற்றுக்கொள்ளும் மேலதிக நன்மையாக அமையும்.
பீடத்தின் தலைமையிலான களப்பயணங்கள், ஏற்கனவே உள்ள உள்ளக வடிவமைப்புக்கள், கட்டடங்கள் போன்ற பல்வேறு வகையான வடிவமைப்புக்கள் பற்றிய முதல் நிலை அறிவைப் பெற்றுக் கொள்வதை உறுதிசெய்யும். இந்த அனுபவம் மாணவர்களுக்கு இடம் தொடர்பான திட்டமிடல் மாத்திரமன்றி உள்ளக வடிவமைப்புத் தொடர்பில் பரந்தளவிலான அணுகுமுறையை வழங்கும். அத்துடன், கட்டடங்களில் உள்ள பாணிகளை அவர்களின் அறிவை செயல்படுத்துவதற்கான பின்னணியையும் இந்தப் பாடத்திட்டம் வழங்குகிறது.
தற்போதுள்ள கட்டடங்களின் உள்ளக வடிவமைப்புக்கள், மற்றும் அவற்றின் ஆயுட்காலத்தைப் புதுப்பித்தல், நீடித்தல், ஏற்கனவே காணப்படும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கட்டடங்களை மறுசீரமைத்தல் மற்றும் அவற்றின் உள்ளக வடிவமைப்புக்களை மேம்படுத்தல் என்பன தொடர்பிலும் இந்த உள்ளக வடிவமைப்புத் திட்டத்தின் ஊடாக மாணவர்களுக்குப் புகட்டப்படும்.
வருகை தரும் கட்டடக்கலைஞர்கள், உள்ளக வடிவமைப்பாளர்கள் டிசைன் ஸ்டுடியோவிற்குச் சென்று வடிவமைப்பு யோசனைகள், மாதிரிகளை உருவாக்குதல், CAD தொடர்பான திறன்கள், மாதிரிகளின் 2D விளக்கக்காட்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மாணவர்களுடன் பகிர்ந்துகொள்வார்கள்.
மேலும், பல்கலைக்கழகத்தில் உள்ள செயலமர்வு வசதிகள் மூலம் தச்சு மற்றும் உலோக வேலைகள் குறித்த நடைமுறையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் மாணவர்கள் தங்கள் ஆக்கபூர்வமான தீர்வுகளைப் பயன்படுத்துவதில் அனுபவத்தைப் பெறுவார்கள். இந்தச் செயலமர்வுகள் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தரநிலைகள் பற்றிய அமர்வுகளைக் கொண்டதாக இருப்பதுடன், இது மாணவர்களுக்கு உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் தொழில்துறை தேவைகளை எளிதில் மாற்றியமைக்கவும் இணங்கவும் உதவுவதாகவும் அமையும்.
முக்கியமாக, மாணவர்கள் தங்கள் ஆக்கபூர்வமான தீர்வுகளை நம்பிக்கையுடன் தொடர்புகொள்வதற்கான திறன்களைப் பெறுகிறார்கள். உள்ளக வடிவமைப்புத் திட்டம் மாணவர்களின் தகவல் தொடர்பு, விளக்கக்காட்சி மற்றும் வாய்மொழி திறன்கள் மற்றும் அறிக்கைகள் எழுதுதல் மற்றும் மாதிரி தயாரிப்பது தொடர்பான திறன்களை மேம்படுத்துவதை உறுதி செய்கிறது.