சிறப்புமிக்க ஒன்றுகூடலுக்கு மத்தியில் மாணவர்களுக்கு கல்விசார் கற்றல் அனுபவங்களை மீள வடிமைக்கும் நோக்கில் திறன், வளங்கள் மற்றும் புத்தாக்கமான இடங்களை ஒன்றிணைக்கும் வகையில் விஸ்தரிக்கப்பட்ட புதிய ‘Library Learning Commons’ வசதியை SLIIT அண்மையில் உத்தியோகபூர்வமாகத் திறந்துவைத்தது.
வேந்தர் பேராசிரியல் லக்ஷ்மன் ரத்னாயக, உபவேந்தர் பேராசிரியர் லலித் கமகே, சிரேஷ்ட உபவேந்தர், தலைமை அதிகாரி பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ ஆகியோர் இந்த வசதியைத் திறந்து வைத்தனர். இந்த நிகழ்வில் துணை வேந்தர்கள், பீடாதிபதிகள் மற்றும் திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
கல்விக்கான ஒத்துழைப்பு, ஒருங்கிணைப்பு மற்றும் ஆய்வு என்பவற்றை குறிக்கோளாகக் கொண்டு நவீன, தொழில்நுட்ப ரீதியில் கற்றலை வழங்குவதே இந்த LLC இன் குறிக்கோளாகும். பாரம்பரியமான நூலகக் கோட்பாட்டிலிருந்து மாற்றத்தை ஏற்படுத்தி, Library Learning Common வசதியானது மாணவர்களுக்கு ஆரோக்கியமான நவீன சூழலை வழங்குகிறது. ஆயிரத்துக்கும் அதிகமான பயனர்களுக்கு சேவையாற்றும் வகையில், மூன்று மாடி விஸ்தீரணம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள Learning Commons வசதியானது வளங்களுக்கான நுகர்வுகளுக்கு அப்பால் ஒருங்கிணைந்த கற்றலை நோக்காகக் கொண்டது.
குழுச் செயற்பாடுகள், நண்பர்களுடன் இணைந்து கற்றல், கலந்துரையாடல்களுக்கான வசதிகள், இணைந்த வசதிகள், ஆய்வு சேவை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் தனிப்பட்ட ரீதியிலான கற்றல் போன்ற பல்வேறு தேவைகளுக்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
SLIIT இன் சிரேஷ்ட நூலகர் புஷ்பமல பெரேரா தெரிவிக்கையில் “ SLIIT இன் LLC வசதி தற்போதுள்ள சுயாதீனமாகக் கற்பவர்களுக்கு உரியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பௌதீக மற்றும் டிஜிட்டல் திறனுக்கான அணுகலை வழங்குவதற்கு அப்பால், திறன் வளர்ச்சி, ஆக்கத்திறன் மற்றும் ஆய்வு போன்றவற்றுக்கும் நாம் வசதிகளை வழங்கி ஒத்துழைக்கின்றோம்” என்றார்.
இந்த வசதியில் தனித்துவமான பகுதி ‘Makerspace’ ஆகும். இது மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான பகுதியாகும் என்பதுடன், இங்கு மாணவர்களுக்கு படைப்பாற்றல் மிக்க மன ரீதியான விளையாட்டுக்கள், வர்ணம் தீட்டுவதற்கான வசதி, ஸ்க்ரபிள் அல்லது சதுரங்கம், கணித ரீதியான விளையாட்டுக்கள் போன்றவற்றுக்கான அணுகல் காணப்படுகிறது. இதன் மூலம் மாணவர்கள் மன இறுக்கத்தைக் குறைத்து சக மாணவர்களுடன் இணைந்து ரோபோக்களை உருவாக்குதல் மற்றும் Lego மூலம் உருப்படிகளைத் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட முடியும்.
இதற்கு மேலதிகமாக, உலகளாவிய ரீதியில் காணப்படும் டிஜிட்டல் நூலகங்கள், ஆய்விதழ்கள், மின்னியல் புத்தகங்கள், டிஜிட்டல் அமைப்பிலான பொழுதுபோக்கிற்கான வாசிப்புக்கள், பாடங்களுடன் சம்பந்தப்பட்ட இதழ்கள், ஆய்வுக்கான வழிகாட்டல்கள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றுக்கு இணையற்ற அணுகலை வழங்கும்.
“தனிப்பயனாக்கப்பட்ட உதவிகளுடன், மின்னியல் கற்றல் கருவிகள் மற்றும் உலகளாவிய தகவல்களுக்கான அணுகலை வழங்குவதுடன், தொழில்துறையின் தேவைக்கு ஏற்ற வகையில் துறைசம்பந்தப்பட்ட கற்றல்களுக்கு வசதி மாணவர்களை LLC வலுப்படுத்தும்” எனப் பெரேரா குறிப்பிட்டார்.
இந்த வசதியான ஆய்வுக்கான பொதுமக்களின் பிரதிநிதித்துவ மன்றம், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கலந்துரையாடல் அலகுகளை உள்ளடக்கியிருப்பதுடன், ஆளமான ஆய்வு மற்றும் ஒன்றிணைந்த கற்றல், அறிவுசார் ஆர்வம் மற்றும் கல்விக்கான ஆர்வம் ஆகியவற்றை வெளிப்படுத்துவதற்காக இது விசேடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியானது விரிவான திரைகள், ப்ளக் பொயின்ட்ஸ் மற்றும் வைட்போர்ட் போன்றவற்றையும் உள்ளடக்கியுள்ளது. கல்விசார் பணியாளர்கள் தமது கூட்டங்களை நடத்துவதற்கும் விசேட கலந்துரையாடல்களை நடத்துவதற்கும் cozy மாநாட்டு அறை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். Wiley, Pearson உள்ளிட்ட பெயர்பூர்த்த வெளியீட்டாளர்களால் வெளியிடப்பட்ட மின்னியல் புத்தகங்கள் மற்றும் IEEE, Emerald, ProQuest மற்றும் Elsevier போன்ற அறிவார்ந்த தரவுத்தளங்களுக்கான அணுகல்களையும் இது வழங்குகிறது. the American Society of Mechanical Engineering இன் தரவுத் தளம் மற்றும் American Society of Civil Engineering ஆகியவற்றின் தரவுத்தளத்துக்கான அணுகலையும் LLC வழங்குகிறது.
மேல்மாடியில் அமைக்கப்பட்டுள்ள கற்றலுக்கான இடம் கற்றலை நேரடியாக அதன் வடிவமைப்பில் ஒருங்கிணைப்பது Learning Commons இன் மற்றுமொரு விசேட தன்மையாகும். சீமெந்துப் பாளங்களைக் கொண்ட இதன் கட்டமைப்பு பாளங்களைக் கொண்டு கட்டடமொன்றை உருவாக்வுது, நெருப்பைத் தடுப்பதற்கான வழிகள், வாயு சீரக்கிகளுக்கான இணைப்புக்கள், மின்சார இணைப்புக்கள் போன்றவற்றை உருவாக்குவதில் காணப்படும் சிக்கல் தன்மையை மாணவர்கள் நேரடியாகக் காணும் வகையில் அமைந்துள்ளது. அனுபவத்தின் ஊடாகக் கற்றுக்கொள்ளும் பாடம் கோட்பாட்டு ரீதியில் கற்றவற்றை நிஜ உலகில் பிரயோகிக்கும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களைக் குறைக்கும் வகையில் அமையும்.
ஆய்வுக்கான தகவல்களின் காப்பகத்தின் உள்ளடக்கமானது புதிய Library Learning Commons இன் குறிப்பிடத்தக்கதொரு வளமாகும். இது பல்கலைக்கழக கல்விசார் சமூகத்தினால் பிரசுரிக்கப்படும் அனைத்து ஆய்வுப் பதிப்புக்களுக்குமான களஞ்சியமாகச் செயற்படும். இந்தக் காப்பகமானது ஆய்வுத் தகவல்களைச் சேகரித்து மற்றும் பிரசுரிப்பதுடன், இணையத்தளத்தை மையாகக் கொண்ட கட்டமைப்பின் ஊடாக அனைத்து மாணவர்கள் மற்றும் ஆய்வுகளை மேற்கொள்பவர்களும் இதற்கான அணுகலைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வளமானது கல்விசார் ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளுக்கு முக்கியமாக அமைவதுடன், ஆய்வுகளை மேற்கொள்பவர்களுக்கு இது பல்வேறு வழிகளில் உதவிசெய்யும்.
ஆய்வுக்கான வசதிகள், திறன் அபிவிருத்தி அமர்வுகள், உசாத்துணைகள் மற்றும் ஆய்வறிக்கை தயாரிப்புக்கான வழிகாட்டல் என்பவற்றையும் LLC வழங்குகிறது. இந்த வசதி 7 நாட்களும் 24 மணித்தியாலங்களும் டிஜிட்டல் அணுகல், ஆய்வுக்கான ஒத்துழைப்பு என்பவற்றை வழங்கும். இதன் ஊடாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட செய்தித்தாள்கள், கடந்தகால வினாத்தாள்களை மாணவர்கள் அணுக முடியும் என்பதுடன், நிகழ்நிலையில் அவற்றுக்கான முன்பதிவகளை மேற்கொள்ளவும், புதுப்பித்தல்களை மேற்கொள்வதற்கும் இடமளிக்கிறது.
நவீன மற்றும் உயர் தொழில்நுட்ப கற்றல் மையாக மாறுவத என்ற நோக்கத்தில் வசதியானது எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக் கொண்ட சேவைகளை LLC கூட்டிணைக்கவுள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு சேவையின் ஊடாக மாணவர்கள் தமக்கான வசதிகளை மேலும் வினைத்திறனாகவும், சௌகரியமான முறையிலும் மேற்கொள்ள முடியும்.
ஒரு முழுமையான கல்வியை வழங்குவதில் SLIIT அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதற்கு LLC இல் காணப்படும் புத்தாக்கமான அம்சங்கள் மற்றும் பாரம்பரியமான வகுப்பறை கற்றல்முறைக்கு அப்பாலான பரந்துபட்ட கற்றல் சூழல் என்பன சான்றாக அமைகின்றன.