இரண்டு வருடகால இடைவெளியின் பின்னர் SLIIT பொறியியல்பீட மாணவர் சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட SLIIT’s Got Talent 2022’ நிகழ்வு 2022 ஒக்டோபர் 02ஆம் திகதி நடைபெற்றது. இதில் திகைப்பூட்டும் நிகழ்ச்சிகள் மூலம் மாணவர்கள் தங்கள் கலைத்திறன் மற்றும் வியக்க வைக்கும் திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
திறைமைகளை வெளிப்படுத்துவதற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி எட்டாவது வருடமாகவும் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ‘Let’s Make it Happen’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்றது. SLIIT இன் அனைத்துப் பீடங்களிலிருந்தும் மாணவர்கள் இதில் பங்கேற்று தாம் சிறந்த நடனக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தனர். SLIIT இன் சொந்த இசைக்குழுவான Elements இதனை மறக்க முடியாத நிகழ்வாக உறதிப்படுத்தியது. பெரியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வை 1,600ற்கும் அதிகமானவர்கள் ரசித்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வில் வேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் ரத்நாயக்க, பிரதி உபவேந்தர் பேராசிரியர் நிமல் ராஜபக்ஷ, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி சமன் திலகசிறி மற்றும் பல சிரேஷ்ட பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
பாட்டுப் பாடும் பிரிவில் 250 விண்ணப்பங்களும், இசைக் குழுப் பிரிவில் 14 குழுக்களிடமிருந்தும் ஏற்பாட்டாளர்களுக்கு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. தெரிவுகளின் பின்னர் 12 பாடகர்கள் மற்றும் ஆறு நடனக் குழுக்களுக்கிடையில் இறுதிப் போட்டி நடைபெற்றது.
பாட்டுப் பாடும் பிரிவில் சிறந்த திறமையை வெளிக்காட்டிய மதாரோ பெரேரா முதலாவது இடத்தையும், விகான் உதவெல இரண்டாவது இடத்தையும், துஷான் விஜேகோன் மூன்றாவது இடத்தையும் பெற்றுக் கொண்டதுடன், பிரபலான பாடகர் பிரிவில் கசுன் வேரகொட முதலாவது இடத்தைப் பிடித்துக் கொண்டார். நடனப் பிரிவில் Six Counts முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், இரண்டாவது இடத்தை Mathra குழுவும், மூன்றாவது இடத்தை Dazzlers பெற்றுக் கொண்டதுடன், மிகவும் பிரபல்யமான குழுவாக Six Counts தெரிவுசெய்யப்பட்டது.
பொறியியல் பீட மாணவர்களின் திறமைகைளை வெளிக்கொணர்வது மற்றும் மேம்படுத்தும் நோக்கில் SLIIT’s Got talent இன் அங்குரார்ப்பண நிகழ்வு 2013ஆம் ஆண்டு SLIIT இன் கேட்போர் கூடத்தில் மிகவும் எழிமையாக நடைபெற்றது. வருடா வருடம் இந்நிகழ்வு மேம்பட்டு ஒவ்வொரு வருடமும் உள்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மத்தியிலும், SLIIT இலும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரதான நிகழ்வாக மாறியுள்ளது. பாரிய ரசிகர்கள் கலந்துகொள்வதால் தாமரைத் தடாகம் மற்றும் பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபம் போன்ற பாரிய மண்டபங்களில் இது நடத்தப்படுகிறது.
தனக்கெனத் தனியானதொரு இடத்தைப் பிடித்துள்ள நிலையில் SLIIT’s Got Talent நிகழ்வு கடைசியாக 2019ஆம் ஆண்டு நடைபெற்றதுடன், தொற்றுநோய் மற்றும் பொருளாதார சவால்கள் காரணமாக 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் இந்நிகழ்வு நடைபெறவில்லை. இந்த ஆண்டு SLIIT’s Got Talent இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்பட்டாலும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. பொறியியல் பீடத்தின் மாணவர் சமூகத்தின் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 120ற்கும் அதிகமான மாணவர்கள் இந்தச் சிறப்பான நிகழ்வில் குழுவாகச் செயற்பட்டதுடன், பொறியியல் ஊடகக் கழகம் மற்றும் ஏனைய தன்னார்வ மாணவர்கள் இதற்கு உதவியிருந்தனர். SLIIT இன் நிதி உதவி உட்பட பெருந்தொகையான அனுசரணையாளர்கள் நிகழ்வின் வெற்றிக்கு பங்களித்தனர்.
திறமைகள் மற்றும் சிறந்த அனுபவப் பின்னணியைக் கொண்டு தனித்துவமான கலவையை பிரதிநிதித்துவப்படுத்தும் தனிநபர்களை உள்ளடக்கிய நிபுணர் குழுக்கள் போட்டியின் நடுவர்களாக இருந்தனர். பாடல்களுக்கான போட்டியின் வெற்றியாளர்களை பாலிந்த உடவெல ஆராச்சி, லஹிரு டி கொஸ்தா மற்றும் தனுர மதுகீத் ஆகியோர் தெரிவுசெய்ததுடன், நடனத்திற்காக வெற்றியாளர்களை பாஸ்கர் பிரகாஷ், சஞ்சனா மாவெல மற்றும் சாரா அபேவர்தன ஆகியோர் அடங்கிய குழு தெரிவுசெய்திருந்தது.
“மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறந்த தளமாக இருக்கும் ‘SLIIT Got Talent’ கல்விப் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு மாணவர்களை ஊக்குவிப்பதையிட்டு நாம் மிகவும் பெருமையடைகிறோம். இத்தகைய நிகழ்வுகள் தோழமை உணர்வை உருவாக்கி, அவர்களின் இளங்கலைக் கல்வியை வடிவமைக்க உதவுவதுடன், மறக்க முடியாத நினைவுகளையும், அனுபவங்களையும் வழங்குகிறது. SLIIT Got Talent கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்கள் தொழில் வல்லுநர்களாக வெற்றி பெறுவதற்கு வழிவகுக்கிறது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றி கூறுவதுடன், எதிர்காலத்திலும் SLIIT’s Got talent போன்ற மாணவர் நிகழ்வுகளுக்கு ஆதரவளிப்பதை எதிர்பார்க்கின்றோம்” என பொறியியல்பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் சமன் திலகசிறி தெரிவித்தார்.
பொறியியல் பீட மாணவர் சமூகத்தின் தலைவர் அப்துல் மலிக் இந்நிகழ்வு பற்றிக் குறிப்பிடுகையில், “SLIIT’s Got Talent 2022′ போட்டியானது பல ஆண்டுகளாக எமது மாணவர் சமூகத்தினரிடையே உள்ள அற்புதமான திறமைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. இது பல ஆண்டுகளாக வருடாந்த நிகழ்வாக வளர்ச்சி கண்டு தற்பொழுது முதன்மையான நிகழ்வாக அங்கீகாரம் பெற்றுள்ளது. நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையில் மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட மிகப்பெரிய நிகழ்வாகவும் இது அமைந்துள்ளது. சவாலான சூழல் இருந்தபோதிலும் இந்த ஆண்டு நிகழ்விற்கு ஆதரவளித்து, எங்கள் மாணவர்களுக்கு மறக்க முடியாத வாய்ப்பை வழங்குவதற்கு பங்களித்த எங்கள் குழு, குழுவினர், அனுசரைணையாளர்கள் மற்றும் SLIIT இல் உள்ள அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.