HarithaHari பூஜ்ஜிய அன்ரிபயொட்டிக் கோழித் தெரிவுகளுக்காக புகழ்பெற்ற இலங்கையின் முன்னணி நிலைபேறான கோழி இறைச்சி உற்பத்தியாளரான New Anthoney’s Group, இலங்கை சந்தைப்படுத்தல் கல்வியகத்துடன் (SLIM) இணைந்து அண்மையில் முன்னெடுத்திருந்த ஆறு மாத சான்றளிப்புத் திட்டமான “விற்பனைக்கான சான்றளிப்பு” கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களை கொண்டாடும் வகையில், அண்மையில் றோயல் கொழும்பு கொல்ஃப் கழகத்தின் விசேட நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் அணியைச் சேர்ந்த மொத்தமாக 35 பேர் இந்த பயிற்சி நெறியில் பங்கேற்று, தாம் பெற்றுக் கொண்ட நேர்த்தியான அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். அதனூடாக, தனிநபர் விருத்தி மற்றும் உறுதியான அணிச் செயற்பாடு போன்றவற்றில் இந்த திட்டத்தின் வெற்றிகரமான தாக்கம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
வாடிக்கையாளரை மையப்படுத்திய வழிமுறையை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த கற்கைநெறி, அவர்களின் தனிநபர் தன்மை, நிறுவனசார் கலாசார வலிமைப்படுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட விற்பனை நுட்பங்களை அவர்களுக்கு பெற்றுக் கொடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் ஈடுபாட்டு மூலோபாயங்கள் போன்றவற்றை அவர்களுக்கு வழங்கியிருந்தது. உயர் வினைத்திறனான மனநிலையை கட்டியெழுப்புவது மற்றும் தனிநபர் இலக்குகளை நிறுவனத்தின் பரந்த நோக்குகளுடன் இணைத்து, நிலைபேறான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக இந்தத் திட்டம் அமைந்திருந்தது.
SLIM’இன் “விற்பனைக்கான சான்றளிப்பு” கற்கைத்திட்டம், ஆறு மாதங்களை உள்ளடக்கியதாகவும், 12 மொடியுல்களை கொண்டதாகவும் அமைந்துள்ளது. விற்பனை நிபுணர்களுக்கான சீர்ப்படுத்தல் மற்றும் ஆளுமை மேம்பாடு முதல் டிஜிட்டல் prospecting மற்றும் நிதி அடிப்படைகள் வரை அனைத்தையும் உள்ளடக்கியிருந்தது. கோட்பாட்டு கற்றல் மற்றும் நேரடி பயிற்சி ஆகியன இணைந்து இந்த கற்கைநெறி முன்னெடுக்கப்பட்டது.
இந்தத் திட்டத்துக்கு New Anthoney’s Group இன் தவிசாளர் மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் எமில் ஸ்டான்லி மற்றும் நீல சுரவீர ஆகியோரின் முழு ஆதரவும் கிடைத்திருந்தது. அதனூடாக, தனிநபர் மற்றும் நிபுணத்துவ வளர்ச்சிக்கு தொடர்ச்சியான கல்வி என்பது பிரதான செயற்பாட்டு காரணிகளாக அமைந்துள்ளதுடன், நிறுவனத்தின் திறமைசாலிகள் மத்தியில், வலுவூட்டப்பட்ட மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கலாசாரத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
இந்த வைபவத்தில் SLIM இன் உயர் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். அதில் சபை அங்கத்தவர் மந்திக ரணசிங்க, பிரதம நிறைவேற்று அதிகாரி சமில் விக்ரமசிங்க, மற்றும் முன்னாள் தலைவர் மற்றும் SLIM இன் கல்வி மறுசீரமைப்பு குழுவின் தலைவர் கலாநிதி. பிரதீப் எட்வர்ட் ஆகியோர் அடங்கியிருந்தனர். அத்துடன், SLIM இன் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் மிஹிரினி பொன்சேகாவும் நிறுவகத்தின் சிரேஷ்ட பயிற்சியாளர்களும் அடங்கியிருந்தனர்.
New Anthoney’s Group இன் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் பயிற்சியின் போது பங்குபற்றுனர்களுக்கு தொடர்ச்சியாக வழங்கியிருந்த பரிபூரண ஆதரவுக்கும் தனது நல்வாழ்த்துகளை கலாநிதி. பிரதீப் எட்வர்ட் தெரிவித்திருந்தார். தனது ஊழியர்களில் தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொள்வதனூடாக இலங்கையர்களுக்கு பாதுகாப்பான, நிலைபேறான, அன்ரிபயொடிக் இல்லாத கோழி இறைச்சி தெரிவுகளை பெற்றுக் கொடுப்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்கும் ஏதுவாக அமைந்திருக்கும் என்பதில் New Anthoney’s Group நம்பிக்கை கொண்டுள்ளது.
Anthoney’s அதன் பதப்படுத்திய உணவு வர்த்தக நாமங்களில் கிறிஸ்பியான Crizzpy தெரிவுகள் முதல், Frenchys மற்றும் Crustys போன்ற சுவைத் தெரிவுகளுக்கு பெருமளவு வரவேற்பு கிடைத்துள்ளன. போஷாக்கான, அன்ரிபயொட்டிக் இல்லாத மற்றும் சுவை நிறைந்த இறைச்சி தெரிவுகளுக்காக புகழ்பெற்றுள்ளது.
இலங்கையின் மாபெரும் மற்றும் நம்பிக்கையை வென்ற கோழி இறைச்சி உற்பத்தியாளர்களில் ஒன்றாக New Anthoney’s Group திகழ்வதுடன், நாட்டின் முதலாவது பசுமை சான்றிதழ் பெற்ற கோழி இறைச்சி வர்த்தக நாமம் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் HarithaHari கோழி இறைச்சிகளில் அன்ரிபயொடிக் இன்மைக்காக புகழ்பெற்றுள்ளது. FSSC 22000, ISO 22000:2018, HACCP, GMP, ஹலால் மற்றும் ISO 14064- 1 சான்றிதழ்களுடன், New Anthoney’s இனால் உலகத் தரம் வாய்ந்த உணவு பாதுகாப்பு, விலங்கு நலன்பேணல் மற்றும் சூழல் பொறுப்புச் செயற்பாடுகள் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. நிறுவனத்தின் HarithaHari தெரிவுகள் அதன் நிலைபேறான பண்ணைச் செய்கை மற்றும் ஆரோக்கியமான உணவுத் தெரிவுகள் போன்றவற்றை பெற்றுக் கொடுப்பதற்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளதுடன், உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு சேவைகளை வழங்குகிறது.