SLT-MOBITEL’இன் mCash மற்றும் லங்கா சதொச இணைந்து கட்டணப்பட்டியல் திரட்டல் சேவைகளை அறிமுகம் செய்துள்ளன

Share with your friend

வாடிக்கையாளர் சௌகரியத்தில் புதிய யுகம் ஆரம்பம்

SLT-MOBITEL இன் முன்னணி மொபைல் பணக் கட்டமைப்பான mCash, லங்கா சதொச உடன் மூலோபாய பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதனூடாக, நாடு முழுவதிலும் காணப்படும் லங்கா சதொச பரந்த வலையமைப்பினூடாக, கட்டணப் பட்டியல் திரட்டல் சேகைளை வழங்க முன்வந்துள்ளது. இதனூடாக வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்திய விற்பனை அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இடமிருந்து – மொபைல் நிதிச் சேவைகள் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி மனுஷ ஜயசூரிய, மொபைல் நிதிச் சேவைகள் உதவி முகாமையாளர் தில்ஷான் பெரேரா, மொபைல் நிதிச் சேவைகள் முகாமையாளர் வினோ மனோஹர், தயாரிப்பு சந்தைப்படுத்தல், என்டர்பிரைஸ் வியாபாரம் சிரேஷ்ட பொது முகாமையாளர் இசுரு திசாநாயக்க, மொபிடெல் பிரதம செயற்பாட்டு அதிகாரி சுதர்ஷன கீகனகே, சதொச பிரதம நிறைவேற்று அதிகாரி சம்பத் ஸ்ரீ செனெவத்த, உள்ளக கணக்காய்வு பிரதி பொது முகாமையாளர் டி.எல். மாலகே, நிதி பிரதி பொது முகாமையாளர் விராஜ் ஷமேந்திர பொயிஸ், தகவல் தொழில்நுட்ப பிரதி பொது முகாமையாளர் தினேஷ் சி.ஏ.சத்ருகல்சிங்க, செயற்பாடுகள் பிரதி பொது முகாமையாளர் ஜே. லியனகமகே, கொள்முதல் பிரதி பொது முகாமையாளர் பி.ஜி.ஆர். சஹஜீவனி, மனித வளங்கள் மற்றும் நிர்வாக பிரதி பொது முகாமையாளர் தம்மிக குணவர்தன, தகவல் தொழில்நுட்ப பதில் முகாமையாளர் சாஜா சாஜஹான்.

இந்தப் பங்காண்மையினூடாக SLT-MOBITEL இன் mCash இனால் வலுவூட்டப்படும் நவீன நிதிசார் தொழில்நுட்ப உட்கட்டமைப்பினூடாக, நாடு முழுவதிலும் காணப்படும் 448 க்கு அதிகமான லங்கா சதொச விற்பனை நிலையங்களில் ஒப்பற்ற கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்படும். இந்த பெறுமதி சேர் திட்டத்தினூடாக, சதொச வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான முறையில் கட்டணப் பட்டியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகள், காப்புறுதி கட்டுப்பணங்கள், நிதியியல் மற்றும் லீசிங் கொடுப்பனவுகள் போன்றவற்றுடன் தமது வழமையான ஷொப்பிங் செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூலோபாய பங்காண்மையினூடாக, இலங்கையின் பரந்தளவு டிஜிட்டல் பொருளாதார செயற்பாடுகளுக்கு அனுகூலமளிக்கும் பல அனுகூலங்கள் வழங்கப்படுகின்றது. அதனூடாக நகர்புற மற்றும் கிராமிய பகுதிகளில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட சேவைகளை அணுகும் திறன் பெருமளவு மேம்படுத்தப்படுகின்றது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஷொப்பிங் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவுகளை ஒரே பகுதியில் இணைத்து மேற்கொள்ளும் சௌகரியத்தை வழங்குவதுடன், பரந்தளவு சமூகங்களினுள் டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களை பின்பற்றுவதை துரிதப்படுத்தும் வசதியையும் வழங்குகின்றது.

ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பின்பற்றுவதற்கான வழிமுறைகளை mCash வழங்கி வருவதுடன், இலங்கை முழுவதையும் சேர்ந்த தனிநபர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு வலுவூட்டும் தீர்வுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது. பணத்திரட்டல் முகாமைத்துவம், கட்டணப்பட்டியல் வகைப்படுத்தல் சேவைகள், முகவர் வங்கியியல், QR கொடுப்பனவுகள், கொடுப்பனவு கேட்வே சேவைகள் மற்றும் பல புத்தாக்கங்களை மேற்கொள்கின்றது. நாட்டினுள் டிஜிட்டல் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் mCash தன்னை அர்ப்பணித்துள்ளது.


Share with your friend