அனைத்து இலங்கையர்களுக்கும் எந்தவொரு வலையமைப்புக்கும் தொலைபேசியில் உரையாட மற்றும் தகவல் அனுப்புவதற்கான சுதந்திரத்தை வழங்கும் வகையில், SLT-MOBITEL இனால் புத்தம் புதிய ‘UNLIMTED CALL BOOSTER’ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
‘UNLIMITED CALL BOOSTER’ உடன் இலங்கையர்களுக்கு தற்போது எந்தவொரு வலையமைப்புக்கும் அன்லிமிடெட் அழைப்புகளையும், SMS களையும் அனுப்ப முடியும். அதனூடாக, அவர்களுக்கு தமது அன்புக்குரியவர்களுக்கும், குடும்பத்தாருக்கும் விரும்பியளவு கதைக்கவும், தகவல்களை அனுப்பவும் முடியும். கூட்டாண்மை மற்றும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாளர் வாடிக்கையாளர்களுக்கு சிறு சந்திப்புகள், மற்றும் கொன்ஃபிரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளவும் 24/7 நேரமும் இணைப்பில் இருப்பதற்கும் இந்தப் பக்கேஜ் பெருமளவு பயனுள்ளதாக அமைந்திருக்கும்.
ஒரு மாத காலப்பகுதிக்கு ‘UNLIMITED CALL BOOSTER’ செல்லுபடியாகும் என்பதுடன், சகல வரிகளும் அடங்கலாக ரூ. 636/- எனும் விலைக்கு வழங்கப்படுகின்றது. முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு இந்தப் பக்கேஜைப் பெற்றுக் கொள்ளலாம். செயற்படுத்திக் கொள்வதற்கு, முற்கொடுப்பனவு இணைப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ரூ. 636 ஐ ரீலோட் செய்து, #147# டயல் செய்யலாம். பிற்கொடுப்பனவு இணைப்புகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 1717 உடன் தொடர்பை ஏற்படுத்தி தகவல்களைப் பெற்று பக்கேஜை செயற்படுத்திக் கொள்ளலாம்.
‘UNLIMITED CALL BOOSTER’, பக்கேஜினூடாக, இலங்கையர்களின் அதிகரித்துச் செல்லும் மற்றும் மாற்றமடைந்து வரும் பாவனை போக்குகளுக்கமைய, SLT-MOBITEL’இன் புதிய பெறுமதி அம்சங்கள் அறிமுகம் செய்வதற்கான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. www.sltmobitel.lk எனும் இணையத்தளத்தை பார்வையிட்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.