SLT-MOBITEL இனால் மெருகேற்றப்பட்ட Kimaki Adventure Game அறிமுகம்

Share with your friend

புதிய gameplay தெரிவுகளையும் அதிகளவு பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளையும் வழங்குகின்றது

D:\Nilanthi\1. PUBLIC RELATIONS SECTION\2022\Media\1. PR\media releases\24. Kimaki\IMG_0891.JPG
ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, வெற்றியாளருக்கு அன்பளிப்பை வழங்குவதுடன், அருகில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க காணப்படுகின்றார்.

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, அண்மையில் மொபைல் அடிப்படையிலான adventure game ஆன Kimaki ஐ அறிமுகம் செய்திருந்தது. புதிய உள்ளம்சங்களைக் கொண்டமைந்த இந்த game இனூடாக விளையாடுவோருக்கு அதிகளவு விறுவிறுப்பும், இலவச டேட்டா மற்றும் இதர வியத்தகு பரிசுகளையும் வெற்றியீட்டுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றது. இந்த game அறிமுக நிகழ்வு ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, இலங்கையின் முன்னணி டிஜிட்டல் முகவர் நிறுவனமான Arimac Lanka (Pvt) Ltd.இன் நிறைவேற்று அதிகாரிகள் மற்றும்  SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. 

2020 ஆம் ஆண்டில் Adventures of Kimaki முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. தனது குடும்பத்தாரையும் நண்பர்களையும் தேடியறியும் முயற்சியில் அபார சக்தி நிறைந்த கோலின் உதவியுடன் இந்த game வடிவமைக்கப்பட்டிருந்தது. சகல விளையாட்டாளர்களுக்கும் விளையாடக்கூடிய வகையில் https://slt.lk/esports/kimakiஎன்பதில் பதிவேற்றப்பட்டுள்ளது. SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு விறுவிறுப்பான டேட்டா அன்பளிப்புகளை வழங்குகின்றது. புதிய மெருகேற்றத்தில் புதிய நிலைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், கேமர்களுக்கு பெருமளவு பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குவதுடன், புத்துணர்வை வழங்குவதாகவும் அமைந்துள்ளது.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி பிரபாத் தஹநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “2020 செப்டெம்பர் மாதத்தில் விளையாடுவதற்கு இலவசமான hyper-casual adventure game ஆக Kimaki ஐ எமது பங்காளர்களான Arimac Lanka (Pvt) Ltd. உடன் இணைந்து அறிமுகம் செய்திருந்தோம். விளையாட்டுடன், பரிசுகளை வெல்லும் வாய்ப்பையும் வழங்குகின்றது. Kimaki – இரண்டாம் கட்டத்தில் ஆண் மற்றும் பெண் இரு கதாபாத்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன், அதிகளவு பரிசுகளை வெல்லும் வாய்ப்புகளும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. அதிகளவு டிஜிட்டல் அம்சங்கள் மற்றும் புத்தாக்கமான சிந்தனைகளுடன் அதிகளவு ஈடுபாடு நிறைந்த Kimaki ஐ எம்மால் அறிமுகம் செய்ய முடிந்துள்ளது. சகல கேமர்களிடமிருந்தும் இந்த முயற்சிக்கு பெருமளவு வரவேற்பு கிடைக்கும் என நான் நம்புகின்றேன்.” என்றார்.

2021 ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாத காலப்பகுதியில் இடம்பெற்ற Kimaki Champion Run போட்டியில், வெற்றியீட்டியவர்களுக்கு கவர்ச்சிகரமான அன்பளிப்புப் பொதிகளை இந்த அறிமுக நிகழ்வில் SLT-MOBITEL வழங்கியிருந்தது.  போட்டியின் பின்னர் GB வைப்புகளும் வழங்கப்பட்டிருந்தன.

மெருகேற்றப்பட்டுள்ள இந்த Kimaki இல் சாகசங்கள், சவால்கள், game play மற்றும் leader boards போன்றன உள்ளடக்கப்பட்டுள்ளன. இவை புதிய ஆண் மற்றும் பெண் கதாபாத்திரங்களுடன் அதிகளவு விறுவிறுப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளன. புதிய Kimaki assets களும் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இவற்றில் பொருட்கள், ஒலி அமைப்புகள் மற்றும் தேசப்படங்கள் போன்றன அடங்குகின்றன. இவற்றினூடாக பாவனையாளர்களுக்கு சிறந்த கேமிங் அனுபவம் சேர்க்கப்படுகின்றது. 

அதிகளவு ரசிகர்களை ஈடுபடுத்தி பெருமளவு விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில், SLT-MOBITEL இனால் SLT-MOBITEL Home கணக்குகளுக்கு இலவச டேட்டா வெற்றியீட்டுவதற்கு, வேகமான தன்னியக்க GB வைப்புகள் வழங்குவது மற்றும் SLT-MOBITEL இடமிருந்து அதிகளவு டேட்டா அன்பளிப்புகளை வெல்வதற்கான கூப்பன் குறியீடுகள் போன்றனவும் வழங்கப்படுகின்றன.

வலையமைப்பில் இணைந்திராத கேமர்களுக்கும் வியக்கத்தக்க டேட்டா சாராத அன்பளிப்புகள் வழங்கப்படும். SLT-MOBITEL மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் விரைவில் இந்த கேமை தமது மொபைல் இணைப்பினூடாக விளையாடி மகிழ்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படும். PEO TV ஊடான பதிவு செய்வதும் விரைவில் அறிமுகம் செய்யப்படும்.

SLT-MOBITEL இன் மகிழ்வூட்டும் அம்சங்களின் உள்ளிணைப்பாக அறிமுகம் செய்யப்பட்டு, Arimac உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ள Kimaki, SLT-MOBITEL மற்றும் SLT-MOBITEL சாராத வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு வெகுமதியளிப்பதாக அமைந்திருப்பதுடன், Google Play அல்லது App Store இல் இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய வகையில் அமைந்துள்ளது. இந்த கேம் தொடர்பான மேலதிக தகவல்களை  https://slt.lk/esports/kimakiஎனும் இணையத்தளத்தில் பார்வையிட முடியும். 


Share with your friend