பண்டிகைக் காலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து, SLT-MOBITEL 2024 டிசம்பர் மாதத்தில் நிலையான மற்றும் மொபைல் “பண்டிகைக்கால சலுகைகள்” திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக புதிய மற்றும் ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கு விறுவிறுப்பான சலுகைகள் வழங்கப்படுகின்றன.

இந்த பிரத்தியேகமான சலுகைகளினூடாக, பண்டிகைக் காலத்தை பிரகாசமாக எதிர்பார்க்கப்படுவதுடன், லோயல்டியை வெகுமதியளித்து கௌரவிப்பது, வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற பெறுமதியை ஏற்படுத்திக் கொடுத்து, அவர்களுக்கு தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் ஆதரவளிக்கப்படுகின்றன. அதிகளவு டேட்டா, விலைக்கழிவில் சாதனங்கள் மற்றும் புத்தாக்கமான டிஜிட்டல் தீர்வுகள் போன்றன வழங்கப்படும். SLT-MOBITEL இன் பண்டிகைக்கால சலுகைகள் 2024 டிசம்பர் மாதம் முழுவதும் மற்றும் 2025 ஜனவரி மாதத்திலும் kமுன்னெடுக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இந்த சிறந்த பண்டிகைக் கால பக்கேஜ்களுடன் பயன்பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் கோரிய மாற்றத்தை நிறைவேற்றி, அசல் நிலையை பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே காணப்படும் SLT-MOBITEL Fibre மற்றும் ADSL Home வாடிக்கையாளர்களுக்கு விசேட பண்டிகைக் கால ஹெம்பர் FREE 4G LTE இலவச பிற்கொடுப்பனவு இணைப்பாக ரூ. 1000 உடன் மாதாந்தம் 25GB போனஸ் டேட்டா 12 மாதங்களுக்கு வழங்கப்படும். Fibre அல்லது ADSL இணைப்பை கொண்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இணையத்தளத்தினூடாக கோரிக்கையை மேற்கொண்டு, இந்த சலுகையை பெறலாம். 2024 டிசம்பர் 15முதல் 31வரை இந்த சலுகை வழங்கப்படுகின்றது.
SLT-MOBITEL இனால் சகல பிற்கொடுப்பனவு ஹோம் புரோட்பான்ட் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த சலுகையாக 25GB இலவச டேட்டா வழங்கப்படுகின்றது. அனைத்தையும் ஒரே bundle இல் கொண்டு ஸ்ட்ரீம் செய்தல், செட் செய்தல் போன்றவற்றுடன் விநோத அம்சங்களுக்கு பயன்படுத்தல் போன்றவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.
டிசம்பர் மாதத்தில் தொழில்நுட்ப டீல்களை வழங்கும் வகையில் பரந்தளவு eTeleshop தெரிவுகளுக்கு சாதன பருவகால ஹெம்பர் சலுகை தெரிவு செய்து கொள்ளப்பட்ட வாடிக்கையாளர் சாதனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் மீது 50% விலைக்கழிவுடன் வழங்கப்படுகின்றது.
மேலும், ஊக்குவிப்புத் திட்டத்தின் போது, வாடிக்கையாளர்களுக்கு eTeleshop ஊடாக MI-FI ரவுட்டர்களுக்கு 20% கழிவை பெற்றுக் கொள்ளலாம். அதனூடாக பண்டிகைக் காலத்தில் தமது இணைய அனுபவத்தை இலகுவாக மேம்படுத்திக் கொள்ளும் வசதியை வழங்குகின்றது.
SLT-MOBITEL இன் பண்டிகைக்கால ஹெம்பருடன் ஒப்பற்ற டிஜிட்டல் பாதுகாப்பை அனுபவியுங்கள். Kaspersky Security மற்றும் Eazy Storage போன்றன மிகவும் பாதுகாப்பானது மற்றும் பாவனையாளர்களுக்கு நட்பானதாக அறியப்படுகின்றது. வாடிக்கையாளர்கள் முதல்தர சைபர் பாதுகாப்பை அனுபவிக்க முடியும் என்பதுடன், சைபர் இடர்களிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் முடியும். மேலும், முற்கொடுப்பனவு மற்றும் பிற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு முதல் மாதத்துக்கு சௌகரியமான டேட்டா சேமிப்பு இலவசமாக வழங்கப்படும்.
மொபைல் வாடிக்கையாளர்களுக்காக பருவ காலத்தை பிரகாசமாக்கும் வகையில், SLT-MOBITEL இனால், பிரத்தியேகமான சாதன சலுகைகளும் வழங்கப்படுவதுடன், 4G Mobile WiFi Router ரூ. 9,900 (அசல் விலை ரூ. 13,950) க்கு வாங்கலாம். ரூ. 1,290 பிற்கொடுப்பனவு 30GB டேட்டா பிளானை கொள்வனவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் மாத வாடகை விலக்கழிக்கப்படும். 4G WiFi Dongle இன் விசேட விலை ரூ. 7,900 ஆக அமைந்திருப்பதுடன் (ஆரம்பத்தில் விலை ரூ. 10,440) பிற்கொடுப்பனவு மற்றும் முற்கொடுப்பனவு வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான வகையில் அமைந்திருந்தது. மேலும். 4G Dongle ரூ. 5,000 (முன்னைய விலை ரூ. 8,370) வழங்கப்படுவதுடன், ரூ. 499 முற்கொடுப்பனவு டேட்டா பிளானுடன் 10ொடுப்பனவு டேட்டா பிளானுடன் 10GB போனஸ் டேட்டாவும் வழங்கப்படும்.
Missed call Salpila இல் பங்கேற்று பண்டிகைக் கால பொனான்ஸாவில் வாடிக்கையாளர்களுக்கு TVS NTORQ 125cc ஸ்கூட்டர்களை வெல்லும் வாய்ப்பை பெறலாம். அதற்காக 696 ஐ டயல் செய்து 1 ஐ அழுத்த வேண்டும். மேலும் வாடிக்கையாளர்களுக்கு http://Mycricq.comஇல் பதிவு செய்து MyCricQ quiz game இல் பங்கேற்று ரூ. 50,000 பெறுமதியான அன்பளிப்பு வவுச்சர்களை வெல்லலாம்.
SLT-MOBITEL மொபைல் பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் மேலதிக அனுகூலங்களில் $3 Daily Data மீது 10% விலைக்கழிவு மற்றும் $5 Unlimited Data Roaming ப்ளான்கள், நான்vகாவது வாடகையுடன் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படுகின்றன. இந்தச் சலுகை 2024 டிசம்பர் 10 முதல் 31 வரை வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் 777 ஐ டயல் செய்து தமக்கு பிடித்த கிறிஸ்மஸ் கீதத்தை mTunes ஊடாக செயற்படுத்தி, இலவச ரீலோட்களை வெல்ல முடியும். மேலும் REG என டைப் செய்து 6363 எனும் இலக்கத்துக்கு SMS செய்து Janashakthi Critical Illness காப்பீடு செய்து, ரூ. 250,000 வரை பெறுமதி வாய்ந்த பணப் பரிசுகளை செல்லலாம். வாடிக்கையாளர்கள் SLT-MOBITEL Mobistation app ஐ டவுன்லோட் செய்ய முடியும் என்பதுடன், டேட்டா பக்கேஜ்கள் மற்றும் பிரத்தியேகமான வெகுமதிகளை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம்.
பெறுமதி சேர்க்கப்பட்ட பண்டிகை வெகுமதிகளை SLT-MOBITEL வழங்குவதுடன், மொபைல் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான சேமிப்புகளை eChannelling ePremium அங்கத்துவத்தினூடாக அனுபவிக்கலாம். வெளிநாடுகளிலுள்ள குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைப்பில் இருக்கவும், IDD அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த சலுகையில் ஒவ்வொரு 4ஆவது நிமிடமும் இலவசமாக வழங்கப்படும். இந்தச் சலுகை 2024 டிசம்பர் 15 முதல் 30ஆம் திகதி வரை வழங்கப்படும்.
மேலதிக தகவல்கள் மற்றும் விபரங்களுக்கு வாடிக்கையாளர்கள் https://slt.lk/en/promotions எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது அருகாமையிலுள்ள SLT-MOBITEL விற்பனை நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.