SLT-MOBITEL கல்விக்கான தனது அர்ப்பணிப்பை தொடரும் வகையில் EDEX Expo 2025 இன் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக கைகோர்த்துள்ளது

Share with your friend

EDEX Expo 2025 இன் தங்க அனுசரணையாளராக SLT-MOBITEL’இன் Nebula Institute of Technology கைகோர்ப்பு

இலங்கையின் தேசிய தகவல் தொடர்பாடல் தொழினுட்ப தீர்வுக் வழங்குனரான SLT-MOBITEL, கல்விச் சிறப்புக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், EDEX Expo 2025இன் உத்தியோகபூர்வ தொலைத்தொடர்பாடல் பங்காளராக கைகோர்த்துள்ளது. இலங்கையின் மாபெரும் கல்வி கணக்காட்சி மற்றும் தொழிற்சந்தையான இந்நிகழ்வின் பங்காண்மையை தொடர்ச்சியாக பத்து வருடங்களுக்கு மேலாக நீடித்துள்ளது.

EDEX Expo 2025 அண்மையில் தனது ஆரம்ப நிகழ்வை கொழும்பு BMICH இல் 2025 ஜனவரி 17 முதல் 19 வரை முன்னெடுத்தது. இரண்டாம் நிகழ்வு கண்டி சிட்டி சென்ரரில் 2025 ஜனவரி 25 முதல் 26 வரை நடைபெற்றது.

கொழும்பு BMICH மற்றும் கண்டி சிட்டி சென்ரரில் நடைபெற்ற இரு EDEX Expo 2025 நிகழ்வுகளுக்கும் இலவச Wi-Fi இணைப்பு வசதியை SLT-MOBITEL வழங்கியிருந்தது. அதனூடாக, விஜயம் செய்வோருக்கு ஒப்பற்ற டிஜிட்டல் அணுகலை உறுதி செய்திருந்ததுடன், கண்காட்சியாளர்களுக்கும் பங்காளர்களுக்கும் தமது கல்வித் தீர்வுகளை வினைத்திறனான முறையில் வெளிப்படுத்த வாய்ப்பளித்திருந்தது.

ஒப்பற்ற டிஜிட்டல் இணைப்புத்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட கல்வி வாய்ப்புகள் போன்றவற்றினூடாக, இலங்கையின் இளைஞர்களுக்கு வலுவூட்டும் SLT MOBITEL இன் நோக்கத்தை இந்த கைகோர்ப்பு மீளுறுதி செய்திருந்தது.

SLT MOBITEL இன் கல்விப் பிரிவான SLT-MOBITEL’s Nebula Institute of Technology, தொடர்ச்சியான இரண்டாவது ஆண்டாகவும் நிகழ்வின் தங்க அனுசரணையாளராக கைகோர்த்திருந்தது. நிகழ்வில் தனது நவீன தொழில்நுட்பக் கற்கைகள் பற்றிய விளக்கங்களை காட்சிப்படுத்தியிருந்தது.

EDEX Expo உடன் கைகோர்த்திருந்ததனூடாக, மாணவர்களுக்கு சர்வதேச வாய்ப்புகளை கண்டறிவதற்கான சூழலை ஏற்படுத்தியிருந்ததுடன், தமது தொழில்நிலையை மேம்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பளித்திருந்தது. இலங்கையின் அடுத்த தலைமுறை தொழினுட்ப நிபுணர்கள் மத்தியில் நிறுவனத்தின் விரிவாக்கமடைந்து செல்லும் ஆற்றலுக்கு SLT-MOBITEL வழங்கும் பங்களிப்பு வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

2004 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது முதல் தற்போது 21 ஆம் நூற்றாண்டு பூர்த்தியை கொண்டாடும் EDEX Expo, இலங்கையின் முன்னணி கல்வி கண்காட்சியாக தன்னை தரமுயர்த்தியுள்ளதுடன், இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச மட்டத்தில் போட்டிகரமாக திகழ்வதற்கு வலுவூட்டியிருந்தது. சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ள EDEX Expo தொடர்ந்தும் மாணவர்களை 200 க்கும் அதிகமான புகழ்பெற்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச கல்வி நிலையங்களுடன் இணைத்த வண்ணமுள்ளது.

ஆயிரக் கணக்கான மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நிபுணர்கள் கொழும்பிலும், கண்டியிலும் நடைபெற்ற EDEX Expo 2025 நிகழ்வுகளில் கலந்து கொண்டனர். நிகழ்வில் முன்னெடுக்கப்பட்ட தொழில் சந்தையினூடாக, விருந்தினர்களுக்கு தொழில் வழங்குனர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி, காணப்படும் தொழில் வாய்ப்புகள் பற்றி அறிந்து கொள்ளவும் வாய்ப்பளித்திருந்தது.


Share with your friend