SLT-MOBITEL மாத்தறையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த SEA-ME-WE 6 Submarine Cable பதிப்பை பூர்த்தி செய்துள்ளது

Share with your friend

SLT-MOBITEL மாத்தறையில் SEA-ME-WE 6 (Southeast Asia-Middle East-Western Europe 6) submarine cable ஐ வெற்றிகரமாக பதித்துள்ளதாக அறிவித்துள்ளது. 2024 டிசம்பர் 29 ஆம் திகதி இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதனூடாக, இலங்கையின் தொலைத்தொடர்பாடல் உட்கட்டமைப்பில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சாதனையை பதிந்துள்ளது. இந்த கேபிள் கட்டமைப்பு 2026 ஆம் ஆண்டு நடுப்பகுதியிலிருந்து வணிக ரீதியில் இயங்க ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் Subcom LLC, உடனான கைகோர்ப்பினூடாக மாத்தறையில் SEA-ME-WE 6 கேபிள் பதிக்கப்பட்டுள்ளதுடன், ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி ஏற்படுத்தியிருந்த சட்டபூர்வ உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டன. அதனூடாக, சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்துவதாக இது அமைந்துள்ளது.

SLT-MOBITEL அதிகாரிகளான பிரதம செயற்பாட்டு அதிகாரி பிரபாத் அம்பேகொட, செயற்திட்டங்கள் பொது முகாமையாளர் நாலக சிறிவர்தன, போக்குவரத்து வலையமைப்புகள் பொது முகாமையாளர் புத்தி மானகே, வலையமைப்பு உட்கட்டமைப்பு செயற்திட்டங்கள் பிரதி பொது முகாமையாளர் ரொஹான் ஆஷ்டன் மற்றும் SLT செயற்பாட்டு அணியினர் இந்த செயற்பாடுகளை மேற்பார்வை செய்திருந்தனர்.

21,700 கிலோ மீற்றர்கள் நீளமான SEA-ME-WE 6 submarine cable சிங்கப்பூரை பிரானசுடன் இணைக்கின்றது. இதில் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் பிரதான இணைப்பு பகுதிகள் காணப்படுகின்றன. உயர் fibre optic தொழினுட்பத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதனூடாக 130 Tbps அதிவேக, குறைந்த இழுதிறன் இணைப்பு வழங்கப்படும். இதன் பங்காளராக வலையமைப்புடன் SLT இன் இணைப்பினூடாக, இலங்கையின் சர்வதேச டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா போன்ற பிராந்தியங்களில் நிலவும் அதிகரித்து செல்லும் இணைப்புத்திறன் கேள்வியை நிவர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. மேலும், இலங்கையின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவது மற்றும் சர்வதேச இணைப்பு ஆற்றல்களுடன் ஒன்றிணைப்பது போன்ற SLT-MOBITEL இன் நோக்கத்தை மேலும் ஒரு படி உயர்த்துவதாக SEA-ME-WE 6 ஸ்தாபிப்பு அமைந்துள்ளது.

குறிப்பாக, இந்தத் திட்டத்தின் போது சூழல் நிலைபேறாண்மை முக்கியத்துவம் பெற்றிருந்தது. அரச திணைக்களங்கள் மற்றும் உள்ளக அதிகார தரப்பினருடன் இணைந்து SLT-MOBITEL செயலாற்றி, சூழலுக்கு பாதுகாப்பான முறையில் இந்த பணியை முன்னெடுத்திருந்தது. கடல் வழி கவனமான முறையில் தெரிவு செய்யப்பட்டிருந்ததுடன், அதற்காக பரந்த சூழல் மதிப்பாய்வுகள் மற்றும் கடல்சார் பாதுகாப்பு கொள்கைகளை கடுமையான வகையில் பின்பற்றியிருந்தமை போன்றவற்றை மேற்கொண்டிருந்தது. மாத்தறை பகுதியில் submarine cable ஐ இணைக்கும் போது சூழல்சார் தாக்கத்தை தணிப்பதற்கு ஏற்கனவே காணப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவனம் பயன்படுத்தியிருந்தது.

SLT-MOBITEL இன் ஏற்கனவே காணப்படும் சர்வதேச இணைப்பு உட்கட்டமைப்புகளான SEA-ME-WE 4 மற்றும் 5, Bharat-Lanka மற்றும் Dhiraagu cables ஆகியவற்றுக்கு மேலதிகமானதாக இந்த புதிய நிறுவுகை அமைந்துள்ளது. SEA-ME-WE 3 ஐ சேவையிலிருந்து நிறுத்தியுள்ளது. நிறுவனம் தொடர்ந்தும் submarine cable கட்டமைப்புகளில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதுடன், அதனூடாக தடங்கலில்லாத, உயர் தரம் வாய்ந்த இணைப்பு சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கின்றது.

மேம்படுத்தப்பட்ட வலையமைப்புடன் SLT-MOBITEL’இன் ஒன்றிணைவானது, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதார ஆற்றல்களை மேம்படுத்த உதவுவதுடன், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியா போன்ற நாடுகளுக்கிடையே ஒப்பற்ற தொடர்பாடல்களை ஏற்படுத்த உதவியாக அமைந்துள்ளது. சர்வதேச தொலைத்தொடர்பாடல்களில் இலங்கையை முக்கிய மையமாக திகழச் செய்வதுடன், அதிகரித்து செல்லும் வாடிக்கையாளர் கேள்விகளை நிவர்த்தி செய்யும் வகையில் மூலோபாய விருத்தியை மேற்கொள்வதிலும் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது.


Share with your friend