தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL இனால், அதன் முன்னணி செயற்திட்டமான Entrepreneurship Studio 2021-2022 இன் முதல் தொகுதி அங்கத்தவர்களுக்கான ‘Demo Day’ ஐ முன்னெடுத்திருந்தது. ஆரம்ப நிலை நிறுவனங்களுக்கு தமது சிந்தனைகளை கட்டியெழுப்பவும், வளர்த்துக் கொள்ளவும் அவசியமான கடுமையான வழிகாட்டல்கள் மற்றும் பயிற்சிகளை வழங்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது.
Entrepreneurship Studio 2021-2022 முதல் தொகுதி அங்கத்தவர்களுக்காக 20 தொழில் முயற்சியாளர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். நிபுணர்களுக்கு இவர்களுக்கு பல்வேறு கட்டங்களில் வளர்ச்சி மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசனைகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியிருந்தனர். 14 வார காலம் பயிற்சிகளுக்கு முகங்கொடுத்திருந்ததுடன், “Demo Day”இனால் அவர்களின் பயணம் மற்றும் தயாரிப்புகள் போன்றன நடுவர்களுக்கு சமர்ப்பிக்கும் வகையில் அமைந்திருந்தன. 12 வெற்றியாளர்களுக்கு தமது வியாபாரங்களை கட்டியெழுப்பிக் கொள்வதற்கு, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆரம்பநிலை பொதி வழங்கப்படும்.
தேசத்தின் தொழில்நுட்ப முன்னோடி எனும் வகையில் SLT-MOBITEL இனால், டிஜிட்டல் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், உள்நாட்டு ஆரம்பநிலை கட்டமைப்பில் கவனம் செலுத்தும் அமைப்பாக Entrepreneurship Studio ஐ நிறுவியிருந்தது. பிரதான துறைகளைச் சேர்ந்த தொழில்நுட்ப ஆரம்பநிலை நிறுவனங்களை மற்றும் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பு என்பது புத்தாக்கமான தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பு சேவைகளை மேற்கொள்வதற்கு உதவும் வகையில் அமைந்திருந்தது.
மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் 200 க்கும் அதிகமான விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. தெரிவு செய்யப்பட்ட 20 தொழில் முயற்சியாளர்கள் பரிபூரண கருத்தரங்கு தொடர்கள், பயிற்சிப்பட்டறை்கள் மற்றும் முகாம்களில் பங்கேற்று வழிகாட்டல்களையும் பயிற்சிகளையும் பெற்றிருந்தனர். இவை அனைத்தும் இந்த இளம் தொழில் முயற்சியாளர்களை தமது சிந்தனைகளை செயற்படுத்துவதற்கு உதவும் வகையில் அமைந்திருந்தன.
இந்த அமர்வுகளின் போது, பங்குபற்றுநர்களுக்கு சந்தைப்படுத்தல், உட்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பம், தந்திரோபாயம், சட்டம், உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் காணப்படும் வாய்ப்புகள் போன்ற பரந்தளவு தலைப்புகளில் பெறுமதி வாய்ந்த தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன. SLT-MOBITEL இன் நிபுணத்துவம் மற்றும் வெளியக பங்களிப்பு போன்றனவும் இவர்களுக்கு கிடைத்திருந்தன.
‘Entrepreneurship Studio’ நிகழ்ச்சித் திட்டம், SLT Group இன் முன்னணி ஆய்வு மற்றும் அபிவிருத்தித் திட்டமான ‘The Embryo’ இனால் முன்னெடுக்கப்படுகின்றது. நாட்டின் வளர்ந்து செல்லும் தொழில்நுட்ப கட்டமைப்பின் மையமாக இது அமைந்திருப்பதுடன், உள்நாட்டு திறமைசாலிகளுக்கு பெறுமதி வாய்ந்த வெளிப்பாட்டை வழங்கி, பன்நாளிகை புத்தாக்கத்தை வழிநடத்தி, நவீன டிஜிட்டல் தீர்வுகளை கட்டியெழுப்ப உதவியாக அமைந்துள்ளது.
முதலாவது Entrepreneurship Studio நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்திருந்ததைத் தொடர்ந்து, SLT-MOBITEL இனால் அடுத்த ஆண்டிலும் மற்றுமொரு நிகழ்வை ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளது. ஆர்வமுள்ள ஆரம்ப நிலை நிறுவனங்கள் இந்த நிகழ்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.