தேசிய தகவல் மற்றும் தொலைத் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களுக்கு வலுவூட்டும் வகையிலமைந்த பிரத்தியேகமான டிசம்பர் மாத பொனான்ஸா திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஹோம் புரோட்பான்ட் வாடிக்கையாளர்களுக்காக ஊக்குவிப்புச் சலுகைகளை உள்ளடக்கிய விறுவிறுப்பான தெரிவுகளை SLT-MOBITEL அறிமுகம் செய்துள்ளது. அதனூடாக அவர்களுக்கு பரிபூரண தொலைத்தொடர்பாடல் மற்றும் களிப்பூட்டும் கட்டமைப்பை அணுகுவதற்கான வாய்ப்பு வழங்கப்படும். டேட்டா பிளான்கள் முதல் PEO TV சலுகைகள் வரை புதிய வாடிக்கையாளர்களுக்கு தமது பிரத்தியேகமான தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடிய வகையிலமைந்த தெரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் பெனான்ஸாவில் பல பெறுமதி சேர் சேவைகள் அடங்கியுள்ளன. இவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு சௌகரியம் வழங்கப்படுவதுடன், தமது வாழ்க்கை முறைகளை மேம்படுத்திக் கொள்வதற்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்திருக்கும்.
புதிய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த வலையமைப்பு அனுபவத்தை வழங்கும் SLT-MOBITEL, விறுவிறுப்பான Fibre, ADSL மற்றும் LTE புரோட்பான்ட் டேட்டா திட்டங்களை சமூக வலைத்தளங்கள் பாவனை, வீட்டிலிருந்து பணியாற்றல் மற்றும் கேமிங் தேவைகளுக்காக வழங்குகின்றது. Youtube பாவனையாளர்களுக்கு 25GB-10GB, Messenger பாவனையாளர்களுக்கு 10GB, Google Meet 100-30GB, Gaming bundle 50GB போன்றன வாடிக்கையாளர்களின் பக்கேஜ்களுக்கமைய வழங்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு உயர் தரமான களிப்பான அனுபவத்தை உறுதி செய்து, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த புதிய வாடிக்கையாளர்களுக்கு SLT-MOBITEL இனால் PEO TV மற்றும் PEOTV GO களும் வழங்கப்படுகின்றன. 4G LTE வாடிக்கையாளர்களுக்கு விலைக்கழிவுடனான சலுகையாக ரூ. 5500 வழங்கப்படுகின்றது. இதில் PEOTVGO நேரடியாக இணையத்தினூடாக OTT Box வாயிலாக வழங்கப்படுகின்றது. SLT-MOBITEL வாடிக்கையாளர்களுக்கு PEOTVGO Mobile App உடன் இலவச டேட்டா கிடைப்பதால் மேலும் அனுகூலம் கிடைக்கின்றது. PEO Titanium, PEO Platinum, PEO Entertainment பக்கேஜ்கள் அடங்கலாக புதிய PEOTV இணைப்புகளைப் பெறும் முதல் 100 வாடிக்கையாளர்களுக்கு HBO வர்த்தக நாமத்திலமைந்த பைகள் வழங்கப்படும்.
தேசத்தின் முன்னோடியான தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குநர் எனும் வகையில் SLT-MOBITEL, வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு பெருமளவு பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்வுகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களை அர்த்தமுள்ள வகையில் மகிழ்ச்சிக்குட்படுத்தும் வகையிலமைந்த தொழில்நுட்பசார் சேவைகளும் அடங்கியுள்ளன.