SLT-MOBITEL’இன் கல்விப் பிரிவான, SLT Training Centre இன் பட்டமளிப்பு விழா முன்னெடுப்பு

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL இன் கல்விப் பிரிவான SLT Training Centre (SLTTC), அண்மையில் தனது நான்காவது வருடாந்த பட்டமளிப்பு வைபவத்தை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் முன்னெடுத்திருந்தது. ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் BEng (Hons) பட்டப்படிப்பு மற்றும் ஐக்கிய இராஜ்ஜியத்தின் Pearson இனால் வழங்கப்படும் BTEC HND Electrical and Electronic Engineering மற்றும் Pearson BTEC HND Computing ஆகிய பட்டப்படிப்புகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த SLTTC பட்டதாரிகள் கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

கல்வி மற்றும் திறன் விருத்தி ஆகியவற்றில் கல்வியகம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் மாணவர்கள் உலகத் தரம் வாய்ந்த தகைமைகளை பூர்த்தி செய்திருந்தமையால் இந்த பட்டமளிப்பு வைபவம் SLTTC க்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்திருந்தது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல், பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞான பாடசாலையின் பீடாதிபதி பேராசிரியர் டேனியல் மெக்கிளவுஸ்கி கலந்து கொண்டார். அத்துடன் ஸ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க, Hertfordshire பல்கலைக்கழக பிரதிநிதிகள், Pearson BTEC இன் பிரதிநிதிகள், SLT-MOBITEL இன் சிரேஷ்ட அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்ட ஐக்கிய இராஜ்ஜியத்தின் Hertfordshire பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல், பொறியியல் மற்றும் கணனி விஞ்ஞான பாடசாலையின் பீடாதிபதி பேராசிரியர் டேனியல் மெக்கிளவுஸ்கி கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நாள் மிகவும் முக்கியமானதாகும். உங்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளை கௌரவிக்கும் நாளாகும். நீங்கள் கற்றுகொண்டவை வெறும் அறிவுடன் தொடர்புடைய விடயங்களல்ல. SLTTC இலிருந்து வெளியேறி வாழ்க்கையின் அடுத்த கட்ட பயணத்தை ஆரம்பிக்கையில் உங்களை புத்தாக்கமானவர்களாக, ஆக்கபூர்வமானவர்களாக, உலகை மாற்றியமைக்கக்கூடியவர்களாக மாற்றக்கூடியவர்களாக வலுவூட்டுவதாக அமைந்திருக்கும். புதிய சவால்களுக்கு முகங்கொடுத்து, அவற்றை உறுதியாகவும், உத்வேகத்துடனும் எதிர்கொள்ளுமாறு நான் அனைவரையும் ஊக்குவிக்கின்றேன். அனைவருக்கும் வாய்ப்புகள் இருப்பதுடன், எமது ஆற்றல்களில் நம்பிக்கையும் உள்ளது. உங்களின் தாங்குதிறன், திறமை, சாதனைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நாம் பாராட்டுகின்றோம்.” என்றார்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “SLT Training Centre இன் பட்டமளிப்பு விழாவில் எமது பட்டதாரிகளின் சாதனைகளை கொண்டாடுவதையிட்டு SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் பெருமை கொள்கின்றோம். இன்று, இந்த மாணவர்கள் நிபுணத்துவ உலகில் காலடி பதிக்கும் நிலையில், சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டத்தைக் கொண்டுள்ளனர். இவர்களால் எமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக்கூடியதாக இருக்கும். முக்கியமான கால கட்டத்தில் இவர்களின் நிபுணத்துவம் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு நாட்டுக்கு இவ்வாறான நிபுணர்களின் தேவை அதிகம் காணப்படுகின்றது. சகல பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்களுக்கு நாம் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவிப்பதுடன், எதிர்கால சகல செயற்பாடுகளிலும் வெற்றி கிட்டட்டும் எனவும் வாழ்த்துகின்றோம்.” என்றார். 

மொத்தமாக 28 மாணவர்கள் Hertfordshire பல்கலைக்கழகத்திலிருந்து BEng (Hons) பட்டத்தைப் பெற்றுக் கொண்டனர். சிறந்த மாணவருக்கான விருது, நிபுனி சந்தலிகா வீரசிங்கவுக்கு வழங்கப்பட்டது. இவர் BEng Honours Electrical and Electronic Engineering பட்டத்தை 1ஆம் வகுப்பில் சிறப்புத் தேர்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.

Pearson BTEC இன் Electrical and Electronics தகைமையை 22 மாணவர்கள் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த கல்விச் செயற்பாட்டுக்கான தங்கப் பதக்கத்தை பினுர தேஷான் குணதுங்க பெற்றுக் கொண்டார். மேலும் 37 மாணவர்கள் Pearson BTEC HND in Computing certification இல் பெற்றுக் கொண்டதுடன், சிறந்த கல்விச் செயற்பாட்டுக்கான தங்கப் பதக்கத்தை சிவ குமார் கவிந்தியா தில்ஷானி ரணவீர பெற்றுக் கொண்டார். 

மாணவர்களுக்கு அவசியமான திறன்கள் மற்றும் அறிவை வழங்கி தமது தொழில் வாழ்வில் முன்னேற்றமடைவதற்கும், சமூகத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும் SLT Training Centre இனால் பரந்தளவு கற்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில், Pearson BTEC International Level 3 foundation மற்றும் Pearson BTEC HND in Digital Technologies ஆகியனவும் அடங்கியுள்ளன. Certificate in Applied Information Technology (CAIT), Certificate in Telecommunication Technician (NVQ 3 or 4), Optical Fibre Courses, Network Security Courses, CCNA Courses, RPL கற்கைகள் ஆகியவற்றில் மாணவர்கள் இணைந்து தொழில்நுட்பத் துறையில் தொழில் வாய்ப்புகளையும், பயிற்சிகளையும் பெற்றுக் கொள்ளுமாறு மாணவர்கள் அழைக்கப்படுகின்றனர்.

SLT Training Centre கற்கைள் தொடர்பான மேலதிக தகவல்களை 0112956633 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக அல்லது www.slt.lk/training எனும் இணையத்தளத்திலிருந்து பெற்றக் கொள்ளலாம்.

C:\Users\011376\AppData\Local\Microsoft\Windows\INetCache\Content.Word\ttc ff.jpg

Share with your friend