இலங்கையின் ஆடை உற்பத்தித் துறையில் ஈடுபட்டுள்ள பிரதான நிறுவனங்களில் ஒன்றும், Charles Komar & Sons இன் துணை நிறுவனமுமான Star Garments குரூப், Togo இன் Adétikopé Industrial Platform (PIA) இல் தனது ஆடைத் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. இந்த நிகழ்வில், Togo இன் அதிபர் ஃபோரே நியாசிங்பே பங்கேற்று, நிறுவனத்துக்கும், மேற்கு ஆபிரிக்க ஆடைகள் உற்பத்தித் துறைக்கும் முக்கியமான மைல்கல்லை பதிவு செய்திருந்தார்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிமுகத்தினூடாக, இலங்கைக்கு அப்பால் Star Garments இன் முதலாவது உற்பத்தித் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளதுடன், நிறுவனத்தின் சர்வதேச வளர்ச்சி மற்றும் மேற்கு ஆபிரிக்காவை ஆடைகள் உற்பத்திக்காக புதிய மையமாக திகழச் செய்வதில் Togo ஐ மூலோபாய பகுதியாக திகழச் செய்வதாக அமைந்துள்ளது. Star இன் ஒன்றிணைக்கப்பட்ட சர்வதேச உற்பத்தி வலையமைப்பு விஸ்தரிப்பை மேற்கொள்ளும் நிலையில், நிறுவனத்தின் சேவை நிலையமாக இலங்கை தொடர்ந்தும் அமைந்திருக்கும்.
3.7 ஹெக்டெயர் பரப்பில் அமைந்துள்ள இந்தத் தொழிற்சாலையினூடாக 2,000 நேரடி தொழில் வாய்ப்புகள் Togo நாட்டவர்களுக்கு ஏற்படுத்தப்படும். அதில் 60சதவீதமான நிலைகள் பெண்களுக்கு வழங்கப்படும். பெருமளவு தொழில் வாய்ப்புகள் உருவாக்கம் என்பது, உடனடி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கு அப்பாற்பட்டதாக அமைந்திருப்பதுடன், 2030 ஆம் ஆண்டளவில் 4,520 நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புகளை உருவாக்கி, உள்நாட்டு பொருளாதார கட்டமைப்பை மாற்றயமைப்பதாக அமைந்திருக்கும்.
Charles Komar & Sons இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சார்ளி கோமர் கருத்துத் தெரிவிக்கையில், “இது ஒரு தொழிற்சாலை என்பதற்கு அப்பாலானது. நீண்ட கால அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதுடன் – Togo இன் மக்களுக்கான தொழில், பயிற்சி மற்றும் சர்வதேச உற்பத்தி நியமங்களை சிறப்பாக மேம்படுவது போன்றவற்றுக்கான Komar இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. Togo இன் தெரிவு எழுமாற்றானதாக அமைந்திருக்கவில்லை. இது வளர்ந்து வரும் தேசமாக நாம் இனங்கண்டிருந்தோம். அரசாங்கம் பொருளாதார உறுதிப்பாடு, உட்கட்டமைப்பு விருத்தி மற்றும் முதலீட்டாளர்களை கவர்வதில் கவனம் செலுத்துகிறது.” என்றார்.

நிறுவனத்தின் பரந்த பயிற்சித் திட்டங்களினூடாக Togo நாட்டு பணியாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த உற்பத்தித் திறன்கள் வழங்கப்பட்டு, திறன் படைத்த ஊழியர் படையணியை ஏற்படுத்தி, நாட்டின் தொழிற்துறை திறனை கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்தும். இந்தச் செயற்பாடுகள் Togo இன் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒன்றித்ததாக அமைந்திருப்பதுடன், உள்நாட்டு திறமையாளர்களுக்கு நிலைபேறான வழிமுறைகளை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கும்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் மனுவெல்லா சன்டோஸ் இந்த அங்குரார்ப்பண நிகழ்வை வாழ்த்தி தெரிவிக்கையில், “40 வருடங்களுக்கு மேலான ஆடைத் தொழிற்துறை அனுபவத்தைக் கொண்ட Star Garments, இலங்கைக்கு அப்பால் முதலாவது அமைவிடமாக Togo ஐ தெரிவு செய்துள்ளமை, எமது நாட்டுக்கு முக்கியமான சமிக்ஞையாக அமைந்துள்ளதுடன், எமது தொழிற்துறை நோக்கத்துக்கான உறுதியான வரவேற்பாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
முழு செயல்பாட்டு திறனில், இந்த வசதி தினமும் ஐம்பதாயிரம் ஆடைகளை உற்பத்தி செய்ய முடியும், சர்வதேச சந்தைகளுக்கு சேவை செய்யும் இரவு ஆடைகள், லவுஞ்ச் ஆடைகள் மற்றும் அடுக்கு ஆடைகளில் நிபுணத்துவம் பெற்றது. ஏற்றுமதி சார்ந்த உற்பத்தியில் இந்த வசதி கவனம் செலுத்துவது Togo இற்கு குறிப்பிடத்தக்க அந்நிய செலாவணி வருவாயை ஈட்டும் அதே வேளையில், உலக ஆடைகள் சந்தையில் நாட்டை ஒரு போட்டியாளராக நிலைநிறுத்தும்.
இலங்கையில் அதன் அனைத்து செயல்முறைகளிலும் கார்பன் நடுநிலை என சான்றிதழ் பெற்ற ஒரே ஆடை நிறுவனக் குழுவாக Star Garments நிலைப்பாட்டை உண்மையாக்கும் வகையில், Togo வசதியும் கடுமையான சுற்றுச்சூழல் தரநிலைகளின் கீழ் செயல்படும் மற்றும் மேற்கு ஆபிரிக்கா முழுவதும் நிலையான உற்பத்தி நடைமுறைகளுக்கு ஒரு மாதிரியாக செயல்படுவதற்கான LEED சான்றிதழைப் பின்பற்றும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இலங்கையில் நடைபெற்ற NCE ஏற்றுமதி விருதுகள் 2024 இல் Star Garments குழுமத்திற்கு மிகப்-பெரிய உற்பத்தியாளர்கள் பிரிவின் கீழ் ஆடை மற்றும் ஆடைத் துறைக்கான தங்க விருது வழங்கப்பட்டது.