TAGS விருதுகள் 2023 இல் eChannelling பிரகாசிப்பு

Share with your friend

சேவைத் துறைக்கான கௌரவிப்பை தனதாக்கியது

இலங்கையின் மாபெரும் வைத்திய முற்பதிவு வலையமைப்பும், SLT-MOBITEL இன் துணை நிறுவனமுமான eChannelling PLC அண்மையில் நடைபெற்ற TAGS விருதுகள் 2023 நிகழ்வில் சேவை பிரிவில் வெண்கல விருதை தனதாக்கியது. 

பெருமைக்குரிய TAGS (வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை) விருதுகள் நிகழ்வை, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகம் (CA ஸ்ரீ லங்கா) ஏற்பாடு செய்திருந்ததுடன், முன்னர் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு நிதி அறிக்கை விருது என அறியப்பட்டது. 58 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ள இந்த விருது வழங்கும் வைபவம், நம்பிக்கை, பிரத்தியேகத்தன்மை மற்றும் முன்னேற்றம், நிலைபேறாண்மை மற்றும் நேர்த்தியான மாற்றம் ஆகியவற்றில் திரண்ட பொறுப்புணர்வு போன்றவற்றின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. கூட்டாண்மை அறிக்கையிடலில் சிறப்பாக செயலாற்றியிருந்த நிறுவனங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்துள்ளதுடன், வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை ஆகிய பிரிவுகளுக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

‘Pathways to Digital Lifestyles’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான நிதி அறிக்கைக்காக eChannelling விருதைப் பெற்றுக் கொண்டது. தொடர்பாடலில் ஆளுகை மற்றும் நிலைபேறாண்மையை வெளிப்படுத்துவதாக இந்த அறிக்கை அமைந்திருந்தது. சர்வதேச அறிக்கையிடல் செயற்பாட்டு நியமங்களை பின்பற்றியிருந்தமைக்காக இந்த வருடாந்த அறிக்கை அறியப்பட்டிருந்ததுடன், டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு மற்றும் வாழ்க்கைமுறை சேவைகள் செயற்படுத்துநர் போன்றவற்றில் நிறுவனத்தின் நிலையை வெளிப்படுத்துவது போன்றவற்றை உணர்த்துவதாக அமைந்திருந்தது. பொருளாதார சவால்களினால் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்த போதிலும், தேசத்துக்காக சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பேணுவதற்கான eChannelling இன் அர்ப்பணிப்பு மற்றும் மீண்டெழுந்திறன் ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இந்த அறிக்கை அமைந்திருந்தது. 

மேலும், CA ஸ்ரீ லங்காவினால் நிர்ணயிக்கப்பட்ட நியமங்களை பூர்த்தி செய்திருந்தமையும், இந்த கௌரவிப்பை eChannelling பெற்றுக் கொள்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. பொறுப்புக்கூரல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தியிருந்ததுடன், கூட்டாண்மை ஆளுகை கொள்கைகளை வெளிப்படுத்தி, துல்லியத்தன்மை மற்றும் தங்கியிருக்கும் திறன் ஆகியவற்றை அறிக்கையிடல் மற்றும் நிலைபேறான அறிக்கையிடலை முன்னுரிமைப்படுத்தல் போன்றவற்றையும் பின்பற்றுகின்றது. பங்காளர்களுடன் வினைத்திறனான தொடர்புகளை பேணியிருந்தமைக்காகவும், உறுதியான நிதிசார் வினைத்திறனை கொண்டிருந்தமைக்காகவும் பாராட்டுதல்களை eChannelling பெற்றுக் கொண்டது. துல்லியமான மதிப்பாய்வு செயன்முறைகளுடன், சில அடுக்கு மதிப்பீடுகளினூடாக, இந்த விருதின் மதிப்பு மேலும் உயர்த்தப்பட்டிருந்தது. 

2020 ஆம் ஆண்டில் வெள்ளி விருதை தனதாக்கியிருந்த eChannelling, 2018, 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தனது நிதி அறிக்கைக்கு வெண்கல விருதையும் சுவீகரித்திருந்தமை விசேட அம்சமாகும்.

வாழ்க்கையை மாற்றியமைப்பதில் இரு தசாப்த காலப்பகுதியை eChannelling PLC கொண்டாடும் நிலையில், சிறந்த எதிர்காலத்துக்கான அடித்தளத்தையும் கொண்டுள்ளது. டிஜிட்டல் சுகாதார பராமரிப்பு மற்றும் வாழ்க்கை முறைகளில் குறிப்பிடத்தக்களவு மூலோபாய மாற்றங்களை ஏற்படுத்தி, உயர் சேவை வழங்கல்கள் மற்றும் நவீன தீர்வுகள் போன்றவற்றினூடாக, தேசத்தின் டிஜிட்டல் கட்டமைப்பை மாற்றியமைப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது. 

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL இனால் eChannelling இன் புரட்சிகரமான செயற்பாடுகளுக்கு வலுவூட்டப்படுவதுடன், தேசத்தின் சுகாதார பராமரிப்பு செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கி, மேம்படுத்துவதில் இந்த தொழில்நுட்பக் கட்டமைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது.

இடமிருந்து: சமன்குமாரி அமரசிங்க – சிரேஷ்ட தகவல் கட்டமைப்பு முகாமையாளர், eChannelling PLC, இசுரு திசாநாயக்க – சிரேஷ்ட பொது முகாமையாளர் – eChannelling PLC மற்றும் சந்துன் ரந்தெனி – நிதியியல் முகாமையாளர், eChannelling PLC ஆகியோர் காணப்படுகின்றனர். 


Share with your friend