TAGS விருதுகள் 2024 இல் தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் தொழினுட்ப பிரிவில் பெருமைக்குரிய தங்க விருதை SLT-MOBITEL சுவீகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிகழ்வு டிசம்பர் 12 ஆம் திகதி, கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வை இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவகம் (CA Sri Lanka) ஏற்பாடு செய்திருந்தது. நிதியியல் மற்றும் நிதிசாரா அறிக்கையிடல் போன்றவற்றில் சிறப்புக்கான கௌரவிப்பை SLT-MOBITEL பெற்றுக் கொண்டது.
TAGS விருதுகளினூடாக, நிறுவனங்களினுள் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூரல், ஆளுகை மற்றும் நிலைபேறாண்மை போன்றன ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டின் விருதுகளின் தொனிப்பொருள் ‘The Digital Edge – Enriching Corporate Reporting Excellence,’ என்பதாக அமைந்திருந்தது. கூட்டாண்மை அறிக்கையிடலில் AI மற்றும் டிஜிட்டல் புத்தாக்கம் ஆகியவற்றின் மாற்றியமைப்பு பங்களிப்பை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது.
கூட்டாண்மை ஆளுகையில் உயர் நியமங்களை பேணுவது மற்றும் தொலைத்தொடர்பாடல் துறையில் புத்தாக்கத்துக்கான அர்ப்பணிப்பு போன்றவற்றில் உயர் நியமங்களுக்கான அர்ப்பணிப்பை SLT-MOBITEL இன் சாதனை வெளிப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் வருடாந்த நிதி அறிக்கையினூடாக இலங்கையின் மேம்படுத்தப்பட்ட இணைப்புத்திறன் மற்றும் டிஜிட்டல் மாற்றியமைப்பில் தனது செயற்பாடுகளை பொருந்தச் செய்வதில் எய்தியுள்ள சாதனைகள் வெளிப்படுத்தப்பட்டிருந்தன.
தொழிற்துறையினுள் இந்த கௌரவிப்பை பெற்றுக் கொள்வதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், விருதுகள் வழங்கும் நிகழ்வில் பல்வேறு துறைகளின் புகழ்பெற்ற நபர்கள் பலர் பங்கேற்றிருந்தனர்.