TFO தனது வெலிசறை காட்சியறையை கோலாகலமாக திறந்துள்ளது!

Share with your friend

TFO என அறியப்படும் The Factory Outlet, வெலிசறை காட்சியறையை கோலாகலமாக திறந்துள்ளது. 2025 மார்ச் 1 ஆம் திகதி திறக்கப்பட்ட இந்த காட்சியறையினூடாக, பிரதேசத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு நவநாகரீக ஆடைத் தெரிவுகளை மலிவான விலையில் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இலங்கையின் முன்னணி சொப்பிங் பகுதிகளில் ஒன்றாக அமைந்துள்ள TFO, வெலிசறையில் தனது புதிய காட்சியறையை திறந்து வைத்துள்ளதனூடாக, பாரிய மைல்கல்லை எய்தியுள்ளது. இந்த ஆரம்ப நிகழ்வு பெருமளவு இசை மற்றும் நவநாகரீக அம்சங்களுடன் அமைந்திருந்தது.

இந்த மாபெரும் திறப்பு விழாவில், TFO தனது புதிய ஆடைத் தெரிவுகளை பிரத்தியேகமான ஃபஷன் ஷோ நிகழ்ச்சியினூடாக வெளிப்படுத்தியிருந்தது. சகல பிரிவுகளிலும் புத்தம் புதிய மற்றும் பொலிவான தோற்றத்தை வழங்கும் வகையிலான தெரிவுகளை கொண்டுள்ளதுடன், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போன்ற அனைவருக்குமான பரந்த ஆடைத் தெரிவுகள் மற்றும் அனைவருக்குமான ஆபரணத் தெரிவுகளையும் இந்த ரமழான் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் ஷொப்பிங் செய்யும் வகையில் தன்னகத்தே கொண்டுள்ளது. ஃபஷன் ஷோ நிகழ்வில் அழகிய நவநாகரீக ஆடைகள், சிறந்த வர்ணங்கள் மற்றும் பிரத்தியேகமான தெரிவுகள் போன்றன மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இலங்கையின் விடுமுறை காலப்பகுதிக்கு மிகவும் பொருத்தமான வகையில் அமைந்துள்ளன.

வெலிசறை பகுதியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டுள்ள TFO பண்டிகைக் காலத்துக்கு அவசியமான புதிய ஆடைத் தெரிவுகளை கொண்டிருப்பதுடன், தமது குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்காக ஆடைகளை கொள்வனவு செய்ய வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்கவர் ஃபஷன் ஷோ நிகழ்வைத் தொடர்ந்து, இலங்கையின் புகழ்பெற்ற கலைஞரான சனாவின் இசை நிகழ்வும் முன்னெடுப்பட்டது. விருந்தினர்களும் பார்வையாளர்களும் சனாவின் இசையில் தம் மெய்மறந்து ஆழ்ந்திருந்ததுடன், அனைவருக்கும் மனம்மறவாத அனுபவத்தை வழங்குவதாக இந்நிகழ்வை அமைந்திருக்கச் செய்தது.

வெலிசறை பகுதியில் அண்மையில் விரிவாக்கம் செய்யப்பட்ட TFO, அனைத்து இலங்கையர்களுக்கும் நவநாகரீக மற்றும் குறைந்த விலையில் கொள்வனவு செய்யக்கூடிய ஆடைகள் விற்பனையகம் எனும் தனது கீர்த்தி நாமத்தை மேலும் உறுதி செய்துள்ளதுடன், ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஒப்பற்ற விலையில் சிறந்த ஷொப்பிங் அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளது.

மாபெரும் திறப்பு விழாவினூடாக, விருந்தினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு புதிய விற்பனையகத்தில், விசேட விலைக்கழிவுகளை அனுபவிக்கவும், இனிமையான இசையை ரசித்தபடி, நவநாகரீக தெரிவுகளை கொள்வனவு செய்யும் அனுபவத்தை வழங்குகிறது.

புதிய அறிமுகங்கள், விலைக்கழிவுகள் மற்றும் விசேட சலுகைகள் போன்றன தொடர்பில் அறிந்து கொள்ள Instagram மற்றும் Facebook ஆகியவற்றில் @tfostore ஐ follow பண்ணவும்.


Share with your friend