குருநாகல் மாவட்டத்தில் முதலாவது கிராமிய 4G கோபுரத்தை நிறுவியுள்ளது
தேசிய தகவல் தொடர்பாடல் மற்றும் மொபைல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் முதலாவது கிராமிய 4G கோபுரத்தை நிறுவியுள்ளது. இலங்கைக்கு 100% 4G LTE இணைப்புத்திறனை ஏற்படுத்துவதற்கு வலுவூட்டும் வகையில் இந்த கமட்ட சன்னிவேதனய திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
குருநாகல், ஹிருவல்பொலவில் நிறுவப்பட்டுள்ள இந்த கோபுரத்தை இலங்கை தொலைத்தொடர்பாடல்கள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. குருநாகல், ஹிருவல்பொல கிராமங்களைச் சேர்ந்த சகலருக்கும் அவசியமான இணைப்பு உட்கட்டமைப்பு வசதிகளை கொண்டிருப்பதை உறுதி செய்யும் வகையில் இது அமைந்துள்ளது. புரோட்பான்ட் அடிப்படையிலான வாடிக்கையாளர் மற்றும் நிறுவனசார் சேவைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு SLT-MOBITEL தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், TRCSL இன் கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் சகல இலங்கையர்களுக்கும் சிறந்த இணைப்புத்திறனை ஏற்படுத்திக் கொடுக்கும் இலக்குக்கு பங்களிப்பு வழங்குகின்றது.
தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநர் எனும் வகையில் SLT-MOBITEL இனால் புத்தாக்கமான டிஜிட்டல் மாற்றியமைப்பு படிமுறைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், NB-IOT, 5G, AI மற்றும் Big Data ஆகிய புது யுக தொழில்நுட்பங்களை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான பணிகளையும் மேற்கொள்கின்றது.
வலையமைப்பு சிறப்பை வெளிப்படுத்தி SLT-MOBITEL மொபைல் தொடர்ச்சியாக சர்வதேச இணைய வேக பரிசோதனை அமைப்பான Ookla வினால், 2019, 2020 மற்றும் 2021 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் இலங்கையின் வேகமான மொபைல் வலையமைப்பாக தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பணிகளில் மத்திய பணியாக இதுவரையில் SLT-MOBITEL இனால் இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு, 800 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், 5G உடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களான பரிசோதனை, பரீட்சிப்பு மற்றும் பொது மக்களுக்கான விளக்கமளிப்புகள் போன்றவற்றுக்காக ரூ. 1.5 பில்லியனை பயன்படுத்தியுள்ளது.
கமட்ட சன்னிவேதனய திட்டத்தின் கீழ், குருநாகலில் SLT-MOBITEL இன் முதலாவது கிராமிய 4G LTE கோபுரத்தை TRCSL பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க அங்குரார்ப்பணம் செய்கின்றார்.