மாசற்ற இயற்கைச் சூழல் மற்றும் பிரத்தியேகமான உயிரியல்பரம்பல் போன்றவற்றுக்கான UNESCO உலக மரபுரிமை தலங்களில் ஒன்றான ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் மெருகேற்றப்பட்ட அடையாளமிடலை SLT-MOBITEL வெற்றிகரமாக நிறுவியுள்ளது. விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை மேலும் உறுதி செய்துள்ளதுடன், சூழல்-சார் சுற்றுலா மற்றும் பாதுகாப்பு செயற்பாடுகளை இந்த பாதுகாக்கப்பட்ட பகுதியில் ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியுள்ளது.

SLT-MOBITEL இன் ESG செயற்திட்டமாக, ஹோட்டன் சமவெளி பகுதியில் சூழல்சார் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை மேம்படுத்த நிறுவனம் எதிர்பார்ப்பதுடன், வருடாந்தம் இந்தப் பகுதிக்கு விஜயம் செய்யும் 200,000 க்கும் அதிகமான விருந்தினர்களுக்கு தெளிவான வழிகாட்டல்களை பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றது. முன்னர் காணப்பட்ட கூட்டாண்மை வர்த்தக நாம பொறிக்கப்பட்ட அடையாளத்துக்கு பதிலாக புதிய அடையாளம் அமைந்திருப்பதுடன், சூழல்சார் வழிகாட்டல் மற்றும் பொறுப்பு வாய்ந்த சுற்றுலாத்துறை ஆகியவற்றில் SLT-MOBITEL காண்பிக்கும் அர்ப்பணிப்பை பிரதிபலித்துள்ளது.
SLT-MOBITEL அணியினால் ஹோட்டன் சமவெளிப் பகுதியைச் சேர்ந்த வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரியிடம் திட்டம் பூர்த்தி செய்யப்பட்டமைக்கான ஆதார ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதனூடாக திட்டம் உத்தியோகபூர்வமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை அடையாளமிடப்பட்டுள்ளதுடன், சூழல்பாதுகாப்பு செயற்பாடுகளில் முக்கியத்துவம் வாய்ந்த கைகோர்ப்பாகவும் அமைந்துள்ளது.
1988 ஆம் ஆண்டு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட ஹோட்டன் சமவெளி, வனஜீவராசிகளின் புகலிடமாகவும், ஆபத்தை எதிர்நோக்கியுள்ள ஜீவிகளின் காப்பிடமாகவும் அமைந்துள்ளது. சமூகத்துடன் தொடர்புகளை பேணும் SLT-MOBITEL இன் தொடர்ச்சியான முயற்சிகளின் அங்கமாக இது அமைந்திருப்பதுடன், பெறுமதி வாய்ந்த சூழல் கட்டமைப்புகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது.
இந்த முக்கியத்துவம் வாய்ந்த UNESCO இனால் அறிவிக்கப்பட்ட உலக மரபுரிமை தலங்களில் ஒன்றுடன் கைகோர்த்துள்ள ஒரே கூட்டாண்மை நிறுவனம் என்பதில் SLT-MOBITEL பெருமை கொள்வதுடன், இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது.