Choreo iPaaS திறன்கள் மற்றும் Platformer Console ஆகியவை பரவலாகப் பயன்படுத்தப்படும் Kubernetes இயங்குதளத்தில் மேகக்கணினிசார்ந்த பயன்பாடுகள், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகளை விரைவாக வழங்க உதவுகின்றன.
உலகளாவில் நிறுவனங்கள் தங்களது டிஜிட்டல் வளர்ச்சிப் பயணத்திற்கான முயற்சிகளை விரைவுபடுத்தியுள்ளதுடன், ஆரம்பத்தில் திட்டமிட்ட காலத்தை விடவும் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே அவற்றை ஆரம்பித்தும் வருகின்றன. ஆனால், செயற்திட்டங்களை அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கவும், டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்கவும் தேவையான ஆழமான தொழில்நுட்ப நிபுணத்துவம் இல்லாததால் பெரும்பாலும், இந்த முயற்சிகள் தடைப்படுகின்றன. மேகக்கணினி சார்ந்த பொறியியலுக்காக சேவை அடிப்படையிலான புதிய ஒருங்கிணைப்பு தளமான Choreo ஐ அறிமுகப்படுத்தியுள்ளதோடு, Kubernetes களுக்கான நிறுவன தர மேகக்கணினி சார்ந்த பயன்பாடுகள் தளத்தின் புத்தாக்குனரான Platformer ஐ உள்வாங்குவதன் மூலம் இந்த சவாலுக்கு தீர்வு காண தான் தயாராக உள்ளதாக WSO2 இன்று அறிவித்துள்ளது.
முதன்முறையாக குறை-குறியீடு (low-code) மற்றும் முழு-குறியீடு (pro-code) ஆகியவற்றை ஒரே நேரத்தில் பொறியியல் கட்டமைப்பதற்கு உருவாக்குனர்களுக்கு இடமளித்து, WSO2 இன் தொழிற்துறை முன்னணி தொழில்நுட்பத்துடன் வெளிப்படை பீற்றாவில் (beta) Choreo iPaaS தற்போது கட்டமைப்புச் செய்யப்படுகின்றது. அதனுடன் சேர்ந்து, Kubernetes இல் கட்டமைப்புச் செய்து, சோதனையை மேற்கொண்டு மற்றும் பணியில் ஈடுபடுத்தல், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களை நிர்வகித்தல், சந்தையில் அவற்றைப் பகிருதல் மற்றும் செயல்திறனை அவதானித்தல் என அனைத்தையும் வாரக் கணக்கில் காத்திராமல் ஒரு சில மணித்தியாலங்களுள் நிர்வகிக்க முடிகின்றது. இதன் விளைவாக, நிறுவனங்கள் இப்போது வணிக பயனர்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை எளிதாக்க முடிவதுடன், உற்பத்திக்குத் தயாரான வணிக பயன்பாடுகளை உருவாக்குவதில் உடனடியாக கவனம் செலுத்தலாம் மற்றும் அவர்கள் கட்டுப்படுத்தும் பாதுகாப்பான, குறை-குறியீட்டை உருவாக்கலாம்.
“நிறுவனங்கள் தங்களது தீர்வுகளை சந்தைப்படுத்துவதை விரைவுபடுத்தவும், விற்பனை ஸ்தானத்தை விரைவுபடுத்தவும், விரைவியக்கத்தை அதிகரிக்கவும் மேகக்கணி-சார்ந்த தளங்களின் அனுகூலத்தை அதிகளவில் பயன்படுத்துகின்றன. இருந்தபோதிலும் இது மிகவும் கடினமான ஒரு பணி. ஒருங்கிணைப்பு மற்றும் மேகக்கணினி சார்ந்த பொறியமைப்பு நடைமுறைகளை உள்வாங்கிக் கொள்வது மற்றும் Kubernetes அடிப்படையிலான தளங்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் உருவாக்குனர்கள் சிக்கலான தன்மையுடன் போராடுவதால் டிஜிட்டல் தயாரிப்புகளை உற்பத்தி நிலைக்குக் கொண்டு வர பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். மேகக்கணினி சார்ந்த பொறியமைப்புக்கான எமது அடுத்த தலைமுறை iPaaS ஆன Choreo உடன் மேற்குறிப்பிடட அனைத்து தடைகளையும் நாம் தாண்ட முடியும்,” என்று WSO2 இன் தலைமை தொழில்நுட்ப அதிகாரியான எரிக் நியூகமர் அவர்கள் குறிப்பிட்டார்.
பல பிராந்தியங்கள், பல மேகக்கணினி சேவை வழங்குநர்கள் மற்றும் தனிப்பட்ட மேகக்கணினி வலையமைப்புக்களுக்கு உதவ தனது Kubernetes அடிப்படையிலான பணியில் ஈடுபடுத்தும் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் Choreo வுக்கு Platformer Console துணை போகின்றது. WSO2 இன் வெளிப்படை மூலநிரல் Ballerina நிரலாக்க மொழிக்கு அப்பால் விரிவாக்குவதற்கு Choreo க்கு இடமளிக்கும். இது Kubernetes களுக்கான எந்தவொரு நிரலாக்க இயக்கத்தின் பணிச்சுமைக்கும் DevOps முகாமைத்துவத்தை மேகக்கணினி அசாத்தியங்களையும் சாத்தியமாக்குவதற்கு உதவுகிறது.
WSO2 ஸ்தாபகரும், மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான கலாநிதி சஞ்ஜிவ வீரவரண அவர்கள் கூறுகையில், “மேகக்கணினி சார்ந்த பயன்பாடுகளை உருவாக்கி, பணியில் ஈடுபடுத்துவதில் Kubernetes ஆனது ஒரு நடைமுறை தரமாகும்,” என்று குறிப்பிட்டார். “எமது Choreo iPaaS க்கு Platformer மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தைச் சேர்ப்பிப்பதற்குப் புறம்பாக, மேகக்கணினி சார்ந்த பொறியமைப்புக்கு Kubernetes சார்ந்த ஆதரிப்பிற்கான எமது அர்ப்பணிப்பினையும் நாம் நீட்டித்துள்ளோம். மேகக்கணினி பல்லியப்படுத்தலுக்காக Kubernetes ஐ முழுமையாகப் பயன்படுத்த நாங்கள் இப்போது சிறந்த ஸ்தானத்தில் உள்ளதுடன், மேலும் எமது வாடிக்கையாளர்கள் தங்கள் மேகக்கணினி சார்ந்த பயன்பாடுகள் மற்றும் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்களை உருவாக்குவது, இணைப்பது மற்றும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த இடமளிக்கின்றோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.
இந்த உள்வாங்கல் செயற்பாட்டுடன், Platformer இன் இணை ஸ்தாபகரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான காஞ்சன விக்கிரமசிங்க அவர்கள் WSO2 உடன் அதன் துணைத் தலைமை அதிகாரியாகவும் Choreo Data Plane தயாரிப்பு முகாமையாளராகவும் இணைந்துள்ளார்.
“WSO2 இன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் முகாமைத்துவம், ஒருங்கிணைப்பு மற்றும் CIAM இற்கான மென்பொருள் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களின் டிஜிட்டல் சேவைகளுக்கு வலுவூட்டுகிறது, மேலும் Choreo வுடன், Kubernetes இன் வலுவூட்டலுடன் புதிய மட்டத்திலான புத்தாக்கம் மற்றும் விரைவியக்கம் ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது, ” என்று WSO2 இன் துணைத் தலைமை அதிகாரியும், Choreo Data Plane இன் தயாரிப்பு முகாமையாளருமான காஞ்சன விக்கிரமசிங்க அவர்கள் குறிப்பிட்டார். “WSO2 இல் இணைந்து கொள்வதில், கூடுதல் உருவாக்குனர்; ஒத்துழைப்பை வளர்ப்பது, வெளியீட்டு சுழற்சிகளை விரைவுபடுத்துவது மற்றும் அவற்றின் மேகக்கணினி சார்ந்த பயன்பாடுகளின் செலவுகளைக் குறைப்பது ஆகியவற்றுடன், டிஜிட்டல் வணிகங்களை வளர்ச்சியை முன்னெடுப்பதில் மேகக்கணினி சார்ந்த பொறியமைப்பு நிறுவனங்களை வலுவூட்டுவதற்கான எங்கள் பகிரப்பட்ட நோக்கத்தைத் தொடர எங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
WSO2 நிறுவனம் தொடர்பான விபரங்கள்
2005 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட WSO2 நிறுவனங்கள் டிஜிட்டல் அனுபவங்களை உருவாக்குவது மற்றும் வளர்ச்சி காணச் செய்வது ஆகியவற்றை முழுமையாக எளிதாக்குகிறது. எங்கள் மேகக்கணினி சார்ந்த, API முதன்மை அணுகுமுறை உருவாக்குனர்கள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு வேகத்தில் புத்தாக்கத்திற்கும், சந்தைப்படுத்துவதில் நேரத்தை விரைவுபடுத்தவும் உதவுகிறது. எங்கள் பரந்த, ஒருங்கிணைந்த தளம் மற்றும் பயன்பாடுகள் நிரலாக்க இடைமுகங்கள், நிறுவன ஒருங்கிணைப்பு மற்றும் அடையாளம் மற்றும் அணுகல் முகாமைத்துவம் ஆகியவற்றில் எங்கள் நிபுணத்துவத்திற்காக வாடிக்கையாளர்கள் எங்களை நாடுகிறார்கள். ஒவ்வொரு வெற்றிகரமான டிஜிட்டல் வளர்ச்சி மாற்ற முயற்சியின் அத்திவாரமாக நாம் உள்ளோம். WSO2, உலகளாவியரீதியில் 800 க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை பணியிலமர்த்தியுள்ளதுடன் அவுஸ்திரேலியா, பிரேசில், டுபாய், ஜேர்மனி, இலங்கை, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா,ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இன்று, நூற்றுக்கணக்கான முன்னணி வர்த்தகநாமங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான உலகளாவிய செயற்திட்டங்கள் என்பன WSO2 ஒருங்கிணைப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 18 டிரில்லியன் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. மேலும் விபரங்களுக்கு https://wso2.com ஐப் பார்வையிடவும். எம்முடன் தொடர்புகளைப் பேண LinkedIn மற்றும் Twitter.