Yara Technologies நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி

Share with your friend

Yara Technologies (Pvt) Ltd, யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் “Talkative Parents” (“பேசக்கூடிய பெற்றோர்”) என்ற தளத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

Cross Channel Communication (மொபைல் App, குறுந் தகவல் சேவை மற்றும் மின்னஞ்சல் அடிப்படையிலான தகவல்தொடர்புகளை செயல்படுத்துதல்) மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் Online பாடசாலைக் கட்டணத்தை செலுத்துதல் ஆகிய இரண்டையும் சேர்த்து பாடசாலையில் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டை மேலும் துரிதப்படுத்த இந்த தளம் உதவும்.

பாடசாலைகளின் சார்பாக SJC மற்றும் CGC மற்றும் SJC87 பழைய மாணவர்களால் இந்த நிகழ்ச்சிக்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது, இது SJC பழைய மாணவர்களின் முன்முயற்சியினால் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Talkative Parentsஇன் ஒரு முக்கிய மதிப்பு முன்மொழிவு, படிநிலை அடிப்படையிலான கட்டமைப்பின் மூலம் தகவல்தொடர்பு முற்றிலும் பாடசாலையால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த தளம் ஒரு பன்முக அமைப்பாக பின்வரும் விதங்களில் செயல்படுத்துகிறது:

  • வரையறையற்ற டிஜிட்டல் அறிவித்தல்கள், முக்கிய நிகழ்வுகள் மற்றும் Mobile App மூலம் Student Reports (மாணவர் அறிக்கை அட்டை), பணிகள், கால அட்டவணை மற்றும் Newsletters போன்ற இணைப்புகள்
  • ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள்/ பெற்றோரின் துணைக்குழுக்களுக்கு (அதாவது பாடசாலை, தரம், வகுப்பு அடிப்படையில் அல்லது தனிநபருக்கு) தகவல்களை அனுப்புதல்
  • அங்கீகரிக்கப்பட்டவர்களுடன் நேரடியாக இணைக்க பெற்றோரை அனுமதிக்கும் இருவழி தனிப்பட்ட தகவல் பரிமாற்ற அம்சம்
  • மொபைல் ஃபோனுடன் ஒத்திசைக்கக்கூடிய பாடசாலை தொடர்பான நிகழ்வுகளைக் காட்டும் காலெண்டர்
  • பல மொழிகளில் குறுந் தகவல்களை மறிமாறுதல்
  • செலான் வங்கி PLC உடன் இணைந்து இணைய கட்டண நுழைவாயில் (Internet Payment Gateway -IPG) மூலம் Online பாடசாலை கட்டணத்தை செலுத்துதல்
  • IPG மூலம் பாடசாலைக் கட்டணத்தைச் செலுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் பெற்றோருக்கு எளிதான கட்டணத் திட்டங்கள் (Easy Payment Plans -EPPs)

“கல்வி என்பது பாடசாலை, பெற்றோர்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கூட்டிணைவாகும். எமது பராமரிப்பில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதே எங்கள் குறிக்கோள். பெற்றோர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரிடையே தகவல் தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் எளிதாக்கவும் நாங்கள் விரும்புவதால், பேசக்கூடிய பெற்றோர் (Talkative Parents) என்ற தளத்தை நடைமுறைப்படுத்த Yara Technologies உடனான எங்கள் கூட்டு எங்கள் கல்லூரி வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.” என CGCயின் அதிபர் திருமதி டி. துசீதரன் தெரிவித்தார்.

“புனித ஜோன்ஸ் கல்லூரியின் சார்பாக, Yara Technologiesஸின் இந்த Novel EdTech தளத்தை நான் வரவேற்கிறேன், இது ஒரு முன்னோடி முயற்சியாகும், இது பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே பயனுள்ள தகவல்தொடர்புக்கான இடத்தை வழங்கும். இது ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம், இது மாணவர்களின் கல்வித் திறனையும் முழு நல்வாழ்வையும் நிச்சயமாக மேம்படுத்தும்.” என  SJCஇன் அதிபர் திரு V S B துசீதரன் தெரிவித்தார்.

இவர்களது கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த Yara Technologies இன் செயற்பாட்டு பணிப்பாளர் தியாஷா சில்வா, “இலங்கையில் உள்ள இந்த இரண்டு முன்னணி தனியார் பாடசாலைகளுடனும் இணைந்து செயற்படுவதற்கு கிடைத்த வாய்ப்பில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். முன்னோக்கிச் சிந்திப்பவர்கள் என்ற நற்பெயரைக் கருத்தில் கொண்டு எங்கள் கூட்டாண்மை மிகவும் ஒருங்கிணைந்ததாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என தெரிவித்தார்.

Yara Technologiesக்கு சொந்தமான TP EdTech தளத்தின் ஊடாக Cross Channel Communication, Online Schoo பாடசாலைக் கட்டணம் செலுத்துதல், e-Learning மற்றும் AI Driven Data Analytics ஆகியவற்றைக் மேற்கொள்கிறது. Yara “Google for Education Integrated Solutions Initiative” மற்றும் “Microsoft for Startups Founders Hub” ஆகியவற்றில் அங்கத்துவம் வகிக்கிறது. மேலும் விவரங்களுக்கு http://www.yaratechnologies.com/ ஐப் பார்வையிடவும்.


Share with your friend