YKK மற்றும் ரியல் மெட்ரிட் அமைப்பு இலங்கையில் குழந்தைகளுக்கான கால்பந்து பயிற்சி முகாமை மீண்டும் ஆரம்பித்து பின்தங்கிய குழந்தைகளுக்கு ஆதரவளிக்கிறது

Share with your friend

விளையாட்டு மூலம் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஆதரித்தல்: YKK நீடித்த நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு தனது நீண்டகால CSR உறுதிப்பாட்டை தொடர்கிறது

உலகளாவிய பொருள் இணைப்பு உற்பத்தியாளரின் பிராந்திய தலைமையகமான YKK HOLDING ASIA PTE. LTD. (YHA) ஆனது YKK Lanka (Pvt) Ltd உடன் இணைந்து, YKK ASAO குழந்தைகள் கால்பந்து பயிற்சி முகாமின் (YKK AKFC) மூன்றாம் பாகத்தை மீண்டும் ஆரம்பிப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. ரியல் மெட்ரிட் அமைப்புடன் (RMF) இணைந்து நடத்தப்படும் இந்த பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முயற்சி, பின்தங்கிய குழந்தைகளின் உடல் மற்றும் உள வளர்ச்சியை ஆதரிக்க கால்பந்தை ஒரு தளமாக பயன்படுத்துவதுடன் அவர்களுக்கு அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களையும் மறக்க முடியாத அனுபவங்களையும் வழங்குகிறது.

இந்நிகழ்ச்சி ஒகஸ்ட் 27, 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கொழும்பு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், இலங்கை கால்பந்து சம்மேளனம் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெற உள்ளது.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, YKK AKFC திட்டம் ஆசியாவில் உள்ள பங்களாதேஷ், காம்போடியா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியன்மார், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தாய்லாந்து மற்றும் வியட்நாம் உள்ளிட்ட 12 இற்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள குழந்தைகளை சென்றடைந்துள்ளது. கால்பந்து மூலம் மகிழ்ச்சியையும் மறக்க முடியாத கற்றல் அனுபவங்களையும் கொண்டு வருவதில் கவனம் செலுத்தும் இத்திட்டம் இதுவரை 7,500 இற்கும் மேற்பட்ட பின்தங்கிய குழந்தைகளுக்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாண்டில், இப்பயிற்சி முகாம் அனாதை இல்லங்களில் இருந்து மற்றும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த சுமார் 300 குழந்தைகளையும் 30 இற்கும் மேற்பட்ட இலங்கை கால்பந்து பயிற்சியாளர்களுக்கும் வாய்ப்பு வழங்குகிறது. உள்நாட்டு பயிற்சியாளர்களுக்கு இவ்வமர்வுகள் நேரடி அனுபவத்தை வழங்கும் விதமாக RMF குழுவுடன் இணைந்து பயிற்சி முகாமில் ஒத்துழைப்பதன் ஊடாக RMF தொழில்முறை வல்லுநர்களால் நடத்தப்படும் பிரத்யேக பயிற்சி அமர்வுகளில் பங்கேற்று அங்கு அவர்கள் உலகத் தரம் வாய்ந்த பயிற்சி முறைகள் மற்றும் நுட்பங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஜெர்சி, குறுகிய பேன்ட், காலுறைகள், பூட்ஸ், பதக்கம் மற்றும் பங்கேற்பு சான்றிதழ் ஆகியவை அடங்கிய ஒரு முழுமையான கால்பந்து கிட் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக பிரத்யேக நினைவு பரிசுகளும் வழங்கப்படும். YKK இன் சமூக மேம்பாட்டிற்கான தொடர்ச்சியான உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, பயிற்சி முகாமில் பயன்படுத்தப்படும் அனைத்து கால்பந்து பந்துகளும் பயிற்சி உபகரணங்களும் உள்நாட்டு பாடசாலைகள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்.

“இத்திட்டம் கால்பந்து மட்டுமல்லாது வாய்ப்புகளை உருவாக்குவதும், தொடர்புகளை உருவாக்குவதும் ஆகும்” என YHA இன் தலைவர் திரு. கசுடோ டைமன் குறிப்பிட்டார். “இது குறிப்பாக விளையாட்டுக்கான அணுகல் குறைவாக உள்ள குழந்தைகளுக்கு விளையாடவும், கற்றுக்கொள்ளவும், வளரவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது. விளையாட்டு மூலம், அவர்கள் குழுப்பணி, நம்பிக்கை மற்றும் உறுதியை வளர்த்துக் கொள்கிறார்கள். இவை மைதானத்திற்கு அப்பால் அவர்களுக்கு பயனளிக்கும் திறன்களாகும். அதே நேரத்தில், இப்பயிற்சி முகாம் மக்களை ஒன்றிணைத்து, சமூக பிணைப்புகளை வலுப்படுத்தி, ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது.”

குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதோடு, இப்பயிற்சி முகாம் உள்நாட்டு இலங்கை பயிற்சியாளர்களுக்கு பெறுமதியான தொழில்முறை மேம்பாட்டு வாய்ப்பையும் வழங்கும். RMF இன் நிரூபிக்கப்பட்ட பயிற்சி முறையைக் கற்று, பயன்படுத்துவதன் மூலம், இலங்கையில் அடுத்த தலைமுறை கால்பந்து வீரர்களை வளர்க்கவும், ஊக்குவிக்கவும் அவர்கள் மிகவும் தயாராக இருக்கிறார்கள்.

70 இற்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் 46,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கும் YKK குழுமத்தின் உறுப்பினராக, YHA மற்றும் YKK Lanka ஆகியவை பிராந்தியம் முழுவதும் நீடித்த நிலையான மற்றும் அர்த்தமுள்ள சமூக ஈடுபாட்டின் மூலம் நேர்மறையான சமூக தாக்கத்தை உருவாக்குவதற்கு உறுதியளித்துள்ளன.


Share with your friend