ZTE ஸ்மார்ட்போன்கள், மிகவும் நியாயமான விலையில் சிறந்த மதிப்பை வழங்குகின்றன

Share with your friend

1985 ஆம் ஆண்டு முதல் உலகளாவிய தொலைதொடர்பாடல் வலையமைப்புகளுக்கு பக்கபலம் அளிக்கும் உலகளாவிய பாரிய தொலைதொடர்பாடல் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற ZTE Blade தயாரிப்பு வரிசை ஸ்மார்ட்போன்கள் சாத்தியமான அளவுக்கு குறைவான விலையில், மிகச் சிறந்த செயல்திறனை எதிர்பார்க்கும் இலங்கை நுகர்வோருக்கு சிறந்த மதிப்பை வழங்குகின்றன. ZTE ஆனது இலங்கையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டிருப்பதுடன், முன்னணி தொலைதொடர்பாடல் நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு அவற்றின் தொலைதொடர்பாடல் வலையமைப்பைப் பேணிப் பராமரிக்கவும் இயக்கவும் உதவி வரும் அதே வேளையில், இந்நிறுவனம் ஒப்பீட்டளவில் ஸ்மார்ட்போன் துறையில் புதிதாக காலடியெடுத்து வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக, ZTE ஆனது நுகர்வோருக்கு குறைந்த விலையில் சிறந்த செயல்திறனை வழங்குவதுடன், பிரபலமான வர்த்தகநாமங்களை விட தனது சாதனங்களை மிகவும் நியாயமான விலையில் வழங்குகிறது.

ZTE இன் உயர்-நடுத்தர வகுப்பு வரிசையில் முன்னணியில் திகழும், ZTE Blade V30 ஆனது கறுப்பு மற்றும் நீலம் ஆகிய இரண்டு நிறங்களிலும் கிடைப்பதுடன், இந்த நேர்த்தியான பாணியிலான சாதனம் நாம் செலுத்தும் விலையை விட அதிக விலைப் பெறுமதி கொண்டதாக தென்படுகின்றது. இருப்பினும், ரூபா 69,999/- என்ற விலையை மட்டுமே கொண்டுள்ள இந்த கண்ணைக்கவரும் அழகான சாதனம் பயனர்களுக்கு நடுத்தர வகுப்பு தொலைபேசி சாதனங்கள் வழங்கும் அனைத்து சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் மிகவும் கட்டுபடியான விலையில் வழங்குகிறது. தொலைபேசி சாதனத்தின் பின்புறத்தில் கட்டமைக்கப்பட்டுள்ள பல்துறை ஆற்றல் மற்றும் திறன் கொண்ட 4 கேமரா அமைப்பு, தலைசிறந்த புகைப்படம் மற்றும் வீடியோ திறன்களுக்கு வழிகோலியுள்ளதுடன், இதில் 64 MP பிரதான கேமராவும், 8 MP அதிவிசால லென்ஸ் வில்லை மற்றும் 5 MP மெக்ரோ லென்ஸ் வில்லை, 2 MP ஆழமான உணர்திறன் கொண்ட கேமரா ஆகியவற்றின் பக்கபலத்தைக் கொண்டுள்ளது. சாதனத்தின் முன்புறம் 16 MP கேமராவைக் கொண்டுள்ளதுடன், இது எத்தருணத்தையும் நேர்த்தியாக வசப்படுத்த உதவுகிறது.

இத்தொலைபேசி சாதனம் மிகவும் தாராளமான 128 GB சேமிப்பகத்தையும், 4 GB RAM மற்றும் சக்திவாய்ந்த octa-core செயலியையும் கொண்டுள்ளதுடன், இது மிகவும் திறமையான மற்றும் சக்திவாய்ந்த தொலைபேசி சாதனத்திற்கு இடமளிக்கின்றது. ZTE Blade V30 இன் 5,000 mAh பேட்டரி, நீங்கள் நாள் முழுவதும் நீடித்து நிலைக்கும் பேட்டரியை அனுபவிக்க முடியும். அதே நேரத்தில் சாதனங்களின் சக்திவாய்ந்த GPU மற்றும் 6.67-அங்குல 1080p IPS முகத்திரை மூலம் எங்கிருந்தும் சில மொபைல் கேமிங்கிற்காக அதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இன்னும் கூடுதலான அளவில் கட்டுபடியாகும் விலையில் ஆற்றல் மற்றும் திறன் கொண்ட கேமராக்களைத் தேடும் நுகர்வோருக்கு, ZTE Blade V30 Vita ஏவைய ஆனது 128GB சேமிப்பகம் மற்றும் 4GB RAM உடன் மிகச் சரியான தெரிவாகும். வெறும் ரூபா 53,999/- என்ற விலையில், வாடிக்கையாளர்கள் 48MP பிரதான கேமரா, 5MP மெக்ரோ கேமரா மற்றும் 2MP ஆழமான உணர்திறன் கேமரா ஆகியவற்றைக் கொண்ட மிகவும் திறமையான மூன்று பின்புற கேமரா கட்டமைப்பை அனுபவிக்க முடியும். நீலம், சாம்பல் மற்றும் பச்சை நிறங்களில் கிடைக்கும், ZTE Blade V30 Vita ஒரு சிறந்த, நேர்த்தியான மற்றும் நவீன பாணியிலான தெரிவாகும். மேலும், மிகப்பெரிய 5,000 mAh பேட்டரி நாள் முழுவதும் அதனை முழுமையாகப் பயன்படுத்த இடமளிக்கின்றது.

www.singersl.com அல்லது நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு சிங்கர் காட்சியறை மற்றும் முகவர்களிடமும் வாடிக்கையாளர்கள் ZTE Blade ஸ்மார்ட்போன்களின் ஒட்டுமொத்த வரிசையையும் கண்டறிந்து, தெரிவு செய்யலாம்.

ZTE Corporation தொலைத்தொடர்பாடல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்தில் உலகளாவில் முன்னணியில் உள்ளதுடன், இது 1985 இல் ஸ்தாபிக்கப்பட்டது. ஹொங்கொங் மற்றும் ஷென்சென் பங்குச் சந்தைகளில் இது நிரற்படுத்தப்பட்டுள்ளது. ஒப்பீட்டளவில் நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்கள் துறையில் புதிதாக காலடியெடுத்து வைத்தாலும், ZTE ஆனது இலங்கையில் 20 வருட கால வரலாற்றைக் கொண்டுள்ளதுடன், முன்னணி தொலைதொடர்பாடல் சேவை நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களுக்கு தொலைதொடர்பாடல் வலையமைப்புகள் மற்றும் சேவைகளை பராமரிப்பதற்கும் விரிவுபடுத்துவதற்கும் தேவையான உபகரணங்களை வழங்கி வந்துள்ளது. இந்நிறுவனம் 160 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள தொலைதொடர்பாடல் சேவை வழங்குநர்கள், நிறுவனங்கள் மற்றும் நுகர்வோருக்கு சிறந்த இணைப்பு மற்றும் நம்பிக்கையை செயல்படுத்த உதவுவதுடன், அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றது. 


Share with your friend