மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையிலிருந்து மன அமைதியைப் பெற கடற்கரையும் கடலும் பலருக்கு சிறந்த இடங்களாக விளங்குகின்றன. கடலில் நீந்துவது முதல் கடல் உயிரினங்களை ஆராய்வது அல்லது ஈரமான மணலில் நடப்பது வரை இது ஒரு சிறந்த புத்துணர்ச்சியாக இருக்கும். இருப்பினும், மனிதனுடைய நடவடிக்கைகள் காரணமாக கடற்கரையும் கடலும் மாசுபடும்போது இந்த இன்பத்தை அனுபவிப்பது சிக்கலாகவுள்ளது.
2020ஆம் ஆண்டில் கடல் மாசுபாட்டு அறிக்கையில் (Marine Pollution Bulletin) சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில், இலங்கையின் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு மீன்பிடித் தொழில், தவறாக நிர்வகிக்கப்பட்ட துறைமுக நடவடிக்கைகள் மற்றும் சுற்றுலா ஆகியவை முக்கிய பங்களிப்பு செய்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்த தவறுகளை மாற்றியமைப்பதன் மூலம் முறைசாரா பிளாஸ்டிக் கழிவு நிர்வாகத்தை குறைக்கவும் நிவர்த்தி செய்யவும் இலங்கையில் தனிநபர்களும் அமைப்புகளும் செயல்படுகின்றன.
கழிவு குறைவான அருகம்பை (WLAB) என்பது அருகம்பையை ஒரு பசுமையான மற்றும் நிலையான சுற்றுலா தலமாக மாற்றுவதில் கவனம் செலுத்திய அமைப்புகளில் ஒன்றாகும். 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட WLABஇன் நிறுவனரும் பணிப்பாளருமான ஹென்ட்ரிக் கன்சோக் ஒரு அரிசி மற்றும் கறி வகைகளை தயாரிக்கும் வியாபாரத்தையும் மற்றும் மரம், காகிதம், பிளாஸ்டிக், கண்ணாடி மற்றும் அட்டை போன்ற கழிவுப் பொருட்களிலிருந்து பைகள் மற்றும் பேஷன் பொருட்கள் போன்ற படைப்புக்களை தயாரிக்கும் வியாபாரத்தை நடத்திக் கொண்டு சென்றவர் ஆவார். இந்த நேரத்தில் அருகம்பையில் உள்ள வர்த்தகர்களும் சுற்றுலாப் பயணிகளும் அவரிடம் பிளாஸ்டிக் பாட்டில்களிலிருந்து படைப்புக்களை உருவாக்க வேண்டும் என்று அவருக்கு பரிந்துரைத்தனர்.
மீள்சுழற்சிக்கு பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிப்பதன் முக்கியத்துவத்தை ஹென்றி மற்றும் அவரது குழுவினர் உணர்ந்தனர். WLAB பின்னர் முறையாக அகற்றப்படாத பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேலை செய்தது. பிளாஸ்டிக் கழிவு பிரச்சினைக்கு சுற்றுலா முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகும். அருகம்பையில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அதிகரிப்பு சுற்றுலா பயணிகளுக்கான தண்ணீர் போத்தலுக்கான தேவை அதிகரித்து வருவதற்கு காரணமாக இது இருக்கலாம்.“ என ஹென்ரிக் கூறினார்.
கொவிட்-19 தொற்றுநோய் ஏற்படுவதற்கு முன்னர் ஒரு நாளைக்கு 5,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருகம்பைக்கு வருகை தந்ததாக அவர் மேலும் கூறினார். அங்கு, ஹென்றி குழு சுமார் 5,000-15,000 கழிவாக வீசப்படுகின்ற PET பிளாஸ்டிக் போத்தல்களை வீதியின் இருபுறமும் நீர்கால்வாய்களிலும் இருந்து சேகரித்தது. கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, அருகம்பை பகுதியில் கொட்டப்பட்ட PET பிளாஸ்டிக் போத்தல் கழிவுகளின் அளவு வெகுவாகக் குறைக்கப்பட்டதற்கு காரணம், நாடு முழுவதும் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகளால் சுற்றுலாத் துறையில் கடுமையான பின்னடைவு ஏற்பட்டதே ஆகும்.
அருகம்பை பகுதி முழுவதும் பிளாஸ்டிக் சேகரிக்க ஒவ்வொரு நாளும் ஒரு WLAB டிரக் பயன்படுத்தப்படுகிறது. சேகரிக்கப்பட்ட கழிவுகள் மீண்டும் அமுக்க வசதிகள் கொண்டு நெரித்து பின்னர் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான ஈகோ ஸ்பிண்டில்ஸுக்கு அனுப்பப்படுகின்றன. ஹென்ரிக், மற்றும் பிற சேகரிப்பாளர்கள், ஈகோ ஸ்பிண்டில்ஸுக்கு பிளாஸ்டிக் கழிவுகளை நன்கொடையாக வழங்கி வருகின்றது.
“WLAB என்பது பிளாஸ்டிக் கழிவுப் பிரச்சினையில் ஈடுபட்டுள்ள ஒரு நிறுவனம். கழிவு நிர்வகிப்பு குறித்து சுற்றுலாப் பயணிகளுக்கு நாங்கள் கல்வி கற்பிக்க விரும்புகிறோம். பிளாஸ்டிக் கழிவுகளை முறையாக அகற்றுவதன் முக்கியத்துவத்தை அவர்களும் புரிந்துகொள்வார்கள். விழிப்புணர்வு மூலம் மக்களின் நடத்தையை மாற்றக்கூடிய ஒரு வர்த்தகத்தில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.” என ஹென்ட்ரிக் கூறினார்.
கொண்டு செல்வதற்கு முன்னர் அதனை அமுக்க வசதிகள் கொண்டு நெரிப்பதன் மூலம் பாட்டில்களை எவ்வாறு சுருக்கலாம் என்பதை சுற்றுலாப் பயணிகள் காண்பிக்கின்றனர். அதுபோலவே சர்ஃபோர்ட் வெக்ஸ் உபகரணங்கள் மற்றும் Key Tags உருவாக்க WLAB வசதிகொண்ட இயந்திரங்களைப் பயன்படுத்த சுற்றுப் பயணிகள் அழைக்கப்படுகிறார்கள். இவை துண்டாக்கப்பட்ட மற்றும் உருக்கிய பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளிலிருந்து தயாரிக்கப்படுகின்றன, அவை கழிவாக வீசப்பட்ட பிளாஸ்டிக்குகளுக்கு மதிப்பு சேர்க்கின்றன.
அவர்களின் நடவடிக்கைகளுக்கான நோக்கம் சுற்றுலாப் பயணிகளுக்கு அறிவுறுத்துவதுடன் நின்றுவிடாது. சுற்றுலாப் பயணிகள் தங்கள் போத்தல்களுக்கு முறையாக வடிகட்டிய தண்ணீரை நிரப்பிக் கொள்வதற்கான வசதிகளையும் WLABஇனால் வழங்கப்படுகிறது. ஒரு பாட்டிலை மீண்டும் நிரப்பினால் மற்றொரு லிட்டர் பாட்டில் உற்பத்தி செய்வதற்கான செலவில், 7 லிட்டர் தண்ணீர், 200 கிராம் எண்ணெய் மற்றும் பிற தேவையான வளங்களை குறைக்க முடியும் என்று இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அருகம்பே பகுதியில் மதிப்பை உருவாக்குவதற்கான WLABஇன் பணியை உணர்ந்து, ஈகோ ஸ்பிண்டில்ஸ் பெரிய பைகளை தயாரிப்பதற்கு WLAB மீள்சுழற்சி செய்யப்பட்ட பாலியஸ்டர் நூலையும் வழங்குகிறது. “நாங்கள் இன்னும் எங்கள் தயாரிப்புகளை மேம்படுத்துவதற்கான செயல்பாட்டில் இருந்தாலும், பரிச்சார்த்தமாக பாலியஸ்டர் நூலை எங்களுக்கு வழங்கிய ஈகோ ஸ்பிண்டில்ஸுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இது விடுதி மற்றும் கிராமப்புற தொழில்துறை திறன்களுக்கான வேலைகளை உருவாக்குவதற்கும் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கும் வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.” என ஹென்ட்ரிக் தெரிவித்துள்ளார். வீசப்படும் கழிவு பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்தி, ஈகோ ஸ்பிண்டில்ஸ் மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. சர்வதேச ஜவுளி உற்பத்தியாளர்களுக்கான பாலியஸ்டர் நூல் உற்பத்தி மற்றும் உலகின் மிகப்பெரிய தூரிகை உற்பத்தியாளர்களுக்கான மோனோஃபிலமென்ட்கள் ஆகியவை இதில் அடங்கும்.
Pristine Ocean மற்றும் Empower.eco உடன் இணைந்து, பிளாஸ்டிக்கிற்கான நிதி முறையை நிறுவுவதன் மூலம் பிளாஸ்டிக் மாசுபாட்டை நவீன முறையில் எதிர்ப்பதில் WLAB கவனம் செலுத்துகிறது. முற்றாக இல்லாத நிறுவனமாக மாற விரும்பும் பிளாஸ்டிக் தடம் கொண்ட உலகில் உள்ள எந்த நிறுவனமும் சுற்றுச்சூழலுக்கு எத்தனை கிலோ பிளாஸ்டிக் தவிர்க்கிறார்கள் என்பதை அளவிட முடியும். இந்த நிறுவனங்கள் சுற்றுச்சூழலில் இருந்து வெளியாகும் அதே அளவு பிளாஸ்டிக்கை நம்மைப் போன்ற நிறுவனங்கள் மூலம் வாங்கலாம். அருகம்பை கடற்கரையை சுத்தம் செய்வது போன்ற வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த பணம் எங்களுக்கு உதவும்.” என ஹென்ட்ரிக் மேலும் கூறினார்.