SLIIT பொறியியல் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ROBOFEST 2024 வருடாந்த ரொபோட்டிக் இறுதிப் போட்டி கடந்த ஒக்டோபர் 01ஆம் திகதி SLIIT இன் மாலபே வளாகத்தில் இனிதே நிறைவுபெற்றது. பல வாரங்களாக இடம்பெற்ற கடுமையான போட்டிகளின் மத்தியில் ரொபேட்டிக்ஸ் துறையில் தேசத்தின் சிறந்த இளம் திறமையாளர்களை வெளிக்கொணரும் நிகழ்வாக இது அமைந்தது. இந்தப் போட்டியில் 150ற்கும் அதிகமான பாடசாலைக் குழுக்கள் பதிவுசெய்திருந்ததுடன், 175ற்கும் அதிகமான பல்கலைக்கழக்கக் குழுக்களும் பதிவுசெய்திருந்ததுடன், இதில் 12 பல்லைக்கழகக் குழுக்களும், 22 பாடசாலைக் குழுக்களும் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன.
SLIIT RoboFest 2024 போட்டியானது ரொபோட்டிக் தொடர்பில் காணப்படும் வரையறைகளைத் தாண்டி, நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் சிறந்த ஆர்வத்தை ஈர்த்திருப்பதுடன், ரொபோட்டிஸ் தொடர்பான அதிநவீன திட்டங்களைக் காட்சிப்படுத்தியது. உலக ரொபோட்டிக்ஸ் துறைக்கான பாதைக்கு கடந்த காலங்களில் SLIIT RoboFest போட்டியானது இளையோரின் எண்ணங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதை போட்டியின் மீது காட்டிய ஆர்வத்தின் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.
SLIIT RoboFest 2024 போட்டிமூலம் ரொபோட்டிக்ஸ் துறையில் இலங்கை இளையோர் மத்தியில் முக்கியத்துவம் உள்ளது என்பதை போட்டி மீண்டும் புலப்பட்டுள்ளது. பாடசாலை மற்றும் பல்கலைக்கழக அணிகளின் சார்பில் பங்குபற்றியவர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றால் என்பன அடுத்த தலைமுறை ரொபோட்டிக்ஸ் பொறியியலாளர்களை உருவாக்குவதற்கான ஊக்கமளிப்பாகவும், பங்களிப்பாகவும் அமையும்.
SLIIT பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் அயந்த கோமஸ் குறிப்பிடுகையில், “ SLIIT RoboFest 2024 போட்டியில் பங்குபற்றியவர்களினால் தரம்மிக்க புதிய கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டமை தொடர்பில் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்தப் போட்டியானது எதிர்கால தொழில்நுட்பத் தலைவர்களுக்கு அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், இலங்கையில் ரொபோட்டிக்ஸ் கல்வியைத் தொடர்ந்தும் முன்னேற்றிச் செல்வதற்கு SLIIT உறுதிபூண்டுள்ளது” என்றார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிச் சுற்றுப் போட்டியில் பாடசாலைப் பிரிவில் பதுளை மத்திய கல்லூரியின் Mavericks அணி சம்பியன்ஸ் பட்டத்தை வென்றதுடன், பல்கலைக்கழகப் பிரிவில் SLIIT இன் Phantom அணி சம்பயின்ஸ் பட்டத்தைப் பெற்றுக் கொண்டது. Dialog Axiata நிறுவனத்தின் குழும பகுப்பாய்வுப் பிரதானியும் AI அதிகாரியுமான கலாநிதி.ரொமேஷ் ரணவன இந்நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். SLIIT மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விருந்தினர்கள் பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
SLIIT இன் இயந்திரவியல் பொறியியல் திணைக்களத்தின் தலைவர் பேராசிரியர் மிகரா லியனகே குறிப்பிடுகையில், “விறுவிறுப்பான SLIIT RoboFest 2024 போட்டியை நாம் முடிவுக்குக் கொண்டுவந்தாலும், இது ரொபோட்டிக்ஸ் துறையில் இளம் திறமையாளர்களை உருவாக்குவதில் தொடர்ந்தும் முக்கிய பங்காற்றும். இந்தப் போட்டி நிகழ்வு பிரபலமடைந்து வருவதால், இயந்திர பொறியியல் கல்வியில் மாணவர்களிடையே புதுமை மற்றும் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஒரு தளமாக மாறியிருப்பது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம்” என்றார்.
SLIIT இன் இறுதிப் போட்டிக்கு முன்னதாக தொழில்துறை நிபுணர்கள் மற்றும் இன் பீடத்தின் உறுப்பினர்களின் தலைமையில்நாடளாவிய ரீதியில் 30 ற்கும் அதிகமான பாடசாலைகளில் தொடர் செயலமர்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் செயலமர்வுகள் நுணுக்கமான தகவல்கள், தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் மற்றும் மாணவர்கள், கல்விசார் பணியாளர்கள், தொழில்துறை நிபுணர்கள் மத்தியில் திறன்களைப் பகிர்வதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்திருந்தன.
இரண்டு பிரிவுகளிலும் வெற்றிபெற்றவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசில்கள், சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டன. TV 1 மற்றும் சிரச ரீவி ஆகியவற்றின் உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை, பிளட்டினம் அனுசரணையாளர்களான GFC Waste Management (Pvt) Ltd, கோல்ட் அனுசரணையாளர்களான EWIS மற்றும் SLAM Power Solutions Pvt Ltd, சில்வர் அனுசரணையாளர்களான Ceylex Engineering, தொழில்நுட்ப பங்காளராக MEU Labs, ப்ரோன்ஸ் அனுசரணையாளர்களான Voltas, AIA Sri Lanka மற்றும் SLIR, தளத்திற்கான அனுசரணையாளரான Cubemak Labs மற்றும் ACCELR ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் SLIIT RoboFest 2024 ஐ வெற்றிகரமாகப் பூர்த்திசெய்ய முடிந்துள்ளது.
பெறியியல் பீடத்தின் உதவிப் பேராசிரியர் கலாநிதி.ஹன்சனி வீரதுங்க தெரிவிக்கையில், “ SLIIT RoboFest 2024 புதுமைக்கான புதிய ஆர்வத்தைத் தூண்டி, அடுத்த தலைமுறை ரொபோட்டிக்ஸ் பொறியாளர்களை ஊக்குவிக்கின்றது” என்றார். SLIIT RoboFest 2024 முடிவடைந்த நிலையில், இது இலங்கை இளைஞர்களிடையே புதுமையின் மரபு மற்றும் ரொபோட்டிக்ஸ் மீதான புதுப்பிக்கப்பட்ட உற்சாகத்தை உருவாக்கி, இத்துறையில் துறையில் எதிர்கால முன்னேற்றங்களுக்கு வழி வகுத்துள்ளது.