இலங்கையில் CAMON 17 ஸ்மார்ட்போனை வெளியிட்டது TECNO

Share with your friend

  • SPARK 7, SPARK 7 PRO, CAMON 17 PRO, POVA 2 ஆகிய பல்வேறு மட்டங்களில் அமைந்த கையடக்கத் தொலைபேசியும் அறிமுகம்
  • TECNO உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் நேரடியாக சுமார் 1.5k பேர் பார்வை; அதே நேரத்தில் Chanux Bro யூடியூப் சேனல் வழியாக 3.5k பேர் பார்வை

உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றான TECNO, இலங்கையில் அதன் சமீபத்திய அதிக செயல்திறன் கொண்ட CAMON 17 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இது ஸ்டுடியோ-தரத்திலான புகைப்படங்களை எடுக்க உகந்ததாக அமைந்துள்ளது. TECNO CAMON 17 ஆனது, வர்த்தக முத்திரை கொண்ட TECNO AI Vision Optimization Solution (TAIVOS) தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது. இது பயனர்களுக்கு எல்லையற்ற வகையிலான காட்சி அனுபவத்தை வழங்குகிறது. குறிப்பாக குறைந்த ஒளி சூழலில். TAIVOS மூலம், புகைப்படத்தில் வெளிச்சூழல் மூலமான பாதிப்புகளை சிறப்பாக வடிகட்டலாம் என்பதுடன், அதனை தெளிவை மேலும் மேம்படுத்தலாம். இதனால் இரவு வேளையிலான புகைப்படங்களின் தரத்தையும் மேம்படுத்தலாம். CAMON 17 இன்று சந்தையிலுள்ள ‘தெளிவான செல்பி கெமரா’ என பரவலாகக் கருதப்படுகிறது. தொலைபேசியின் ஊக்குவிப்பு நடவடிக்கையில், திரைப்படத்துறையின் சூப்பர் ஹீரோ கிறிஸ் எவன்ஸ் (Chris Evans) நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த ஜூலை 16ஆம் திகதி இடம்பெற்றதுடன், TECNOவின் உத்தியோகபூர்வ சமூக ஊடக வலைத்தள பக்கங்கள் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகை மற்றும் மொடல் ரோஷல் ரோஜர்ஸ், சினிமா கதைஆசிரியர் Cjay, Tech Guru ChanuxBro உள்ளிட்ட உள்ளூர் பிரபலங்கள் பங்குபற்றியிருந்தனர். CAMON 17 தவிர, SPARK 7, SPARK 7 PRO, CAMON 17 PRO, POVA 2 ஆகிய நான்கு புதிய மொடல்கள் இந்த நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்டன.

நிகழ்வின் தொகுப்பாளராக இருந்த ChanuxBro அதனை பயன்படுத்தியவர் எனும் வகையில் ஒரு விரிவான மதிப்பாய்வின் மூலம் தனது அனுபவத்தை பார்வையாளர்களுடன் பகிர்ந்தார். சுருக்கமாக கூறுவதாயின், ஒப்பீட்டளவில் புதிதாக சந்தைக்கு நுழைந்த ஒன்றாக இருந்தாலும், TECNO சாதனங்களின் ஸ்டைல் மற்றும் செயல்திறனின் அடிப்படையில், இன்றைய சந்தையில் காணப்படும் வேறு எந்த ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளுடன் சரிக்கு சமமாக நிற்க கூடியது என்று அவர் குறிப்பிட்டார்.

நடிகையும் மொடல் அழகியுமான ரோஷல், CAMON 17 குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார். உத்தியோகபூர்வ வெளியீட்டுக்கு முன்னதாக இதைப் பயன்படுத்திய பின்னர், கெமராவின் தரம் மற்றும் சாதனத்தின் ஏனைய நுட்பங்கள் தன்னை ஆச்சரியப்படுத்தியதாகக் குறிப்பிட்டார். அவரது மதிப்பாய்வைத் தொடர்ந்து, சுருக்கமான விளக்கக்காட்சி ஒன்றின் மூலம் CJ, CAMON 17 இன் கெமராவின் அற்புதமான செயல்திறனைப் பற்றி குறிப்பிட்டார். இதன்போது சாதனம் மூலம் ரோஷலை எடுத்த புகைப்படத்தை பார்வையாளர்களுக்குக் காண்பித்தார்.

Ray Chaw – TECNO Sri Lanka நாட்டின் பணிப்பாளர்

TECNO Sri Lanka நாட்டின் பணிப்பாளரான Ray Chaw இந்நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் தொலைதொடர்பு வரம்பின் ஒரு பகுதியாக இருப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கை சந்தையானது, எமது நேர்த்தியான, செயல்பாடுமிக்க, விலைக்கேற்ற தயாரிப்புகளை ஆதரவாக அரவணைக்கும் என்று TECNO மிகவும் நம்பிக்கையுடன் உள்ளது. 2006ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட TECNO ஆனது, 2020 இன் இறுதிக் காலாண்டின் தரவுகளின் அடிப்படையில், தற்போது உலகின் முதல் 10 ஸ்மார்ட்போன் தரக்குறியீடுகளில் ஒன்றாக, சந்தை நுண்ணறிவு, ஆலோசனை சேவைகளின் உலகளாவிய முன்னணி சேவை வழங்குநரான IDC யினால் மதிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஒரு ஆசிரியரான நதிஷானி விஜேசூரிய, SPARK 7 PRO தொடர்பில் தனது பரிந்துரையை முன்வைத்தார். கொவிட் தொற்றுக்கு மத்தியில், தற்போதுள்ள ‘புதிய இயல்பு’ நிலையின் கீழ், இலத்திரனியல் கற்றல் நோக்கங்களுக்கு இது ஏற்றது என்று அவர் பரிந்துரைத்தார். மலிவு விலை, சிக்கலற்ற UI மற்றும் இணையற்ற மின்கல ஆயுள் ஆகியன SPARK 7 PRO ஆனது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட்போனின் உரிய தெரிவாக இருக்கின்றதென அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிகழ்வில் கேள்விகள் கேட்கப்பட்டு அதில் அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளிலிருந்து 4 தொலைபேசிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை, TECNO Sri Lanka FB பக்கத்தின் ஊடாக சுமார் 1.5k பேர் ஒரே நேரத்தில் பார்வையிட்டதோடு, Chanux Bro வின் YouTube சேனலில் 3.5k பேரும் நேரடியாக பார்வையிட்டதன் மூலம், இந்நிகழ்வு மகத்தான வெற்றியைப் பெற்றது.

CAMON 17 இன் 90Hz super-high refreshing விகிதமானது, பயனர் அனுபவத்தை மேம்படுத்த உதவுவதுடன், இது தொலைபேசியை கேமிங்கிற்கு ஏற்றதாக மாற்றுகிறது. CAMON 17 ஆனது, 8 Core CPU மூலம் இயக்கப்படுவதுடன், இதன் உச்ச செயல்திறனுக்காக 5000 mAh மின்கலம் இணைக்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டு முதல் மன்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் உத்தியோகபூர்வ டெப்லெட் மற்றும் கையடக்கத் தொலைபேசி பங்காளராக TECNO செயற்பட்டு வருகின்றது. அத்துடன் ‘Largest Flipbook’ (‘மிகப்பெரிய புரட்டும் புத்தகம்’) தயாரித்தமைக்கான கின்னஸ் உலக சாதனையையும் அது படைத்துள்ளது. 2018 இல் ஆபிரிக்க கண்டத்திற்கு TECNO விரிவாக்கம் அடைவதைக் குறிக்கும் வகையில் குறித்த சாதனை படைக்கப்பட்டது. இப்புத்தகம் ஒரு டென்னிஸ் கோர்ட்டின் அளவுடையது என்பதுடன், CAMON 17 PRO மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அது உள்ளடக்கியிருந்தது.

AI- மேம்படுத்தப்பட்ட கையடக்கத் தொலைபேசி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகிய பிரிவுகளில் TECNO குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. வன்பொருள் மற்றும் மென்பொருளை ஒருங்கிணைக்கும் நுண்ணறிவுடனான தொகுதியை உருவாக்குவதை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு மற்றும் அபிவிருத்தி (R&D) தொடர்பிலான அதன் வரவு செலவு ஒதுக்கீடு, கடந்த வருடத்திலும் 30% அதிகரித்துள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தயாரிப்புகளை, TECNO Sri Lanka வின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் முற்பதிவு செய்ய முடியும்: https://www.tecno-mobile.com/lk/


Share with your friend