இலங்கையில் புதிதாக நிறுவப்பட்ட வணிகமான Duzzcall, வணிகங்களுக்கான தொலைபேசித் தொடர்பாடல்களில் புரட்சியை ஏற்படுத்த உள்ளது

Share with your friend

ஒரு நவீனத்துவமான டெலிபோனி முறைமைத் துவக்க முயற்சியான Duzzcall, வணிகங்களுக்குத் தமது பாரம்பரிய அலுவலகத் தொலைபேசி இணைப்புக் கட்டணங்களைத் தரவு அழைப்புகளாகப் பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம், நாட்டிலுள்ள உள்ளூர் மற்றும் சர்வதேச தகவல்தொடர்புகளில் புரட்சியை ஏற்படுத்துகின்றது.

Duzzcall என்பது காப்புரிமை பெற்ற அதிநவீன செயலி ஆகும், இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தங்கள் அழைப்புகள் PABX அமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் போதே தங்கள் வாடிக்கையாளர்களுடன் WhatsApp போன்ற டேட்டா அழைப்புக்களை மேற்கொள்ள உதவுகிறது. ஒரு பிளக்-அண்ட்-பிளே சாதனத்தின் மூலம், Duzzcall இணைய இணைப்புடன் கூடிய எந்த நிலையான-லைன் அழைப்பு அமைப்பையும் பாரம்பரிய லேண்ட்லைன்களைத் தவிர்த்து தரவு-இயக்கப்பட்ட அழைப்புச் சேவையாக மாற்றுகிறது. அதாவது Duzzcall மூலம் மேற்கொள்ளப்படும் அழைப்புகளுக்கு உங்கள் டேட்டா பயன்பாடு மட்டுமே செலவாகும்.

Duzzcall நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தீபக் ராம்நானி கருத்துத் தெரிவிக்கையில்: பல ஆண்டுகளாக, நாம் நிமிடத்திற்கு அதிக கட்டணம் வசூலிக்கும் பாரம்பரிய குரல் அழைப்புகளுக்குச் செலவழிக்காமல், WhatsApp மற்றும் Viber போன்ற செயலிகள் மூலம் உலகம் முழுவதும் உள்ள எமது அன்பானவர்களுடன் டேட்டாவில் தொடர்பு கொள்ள நாங்கள் பழகிவிட்டோம்.  இப்போது வரை இந்த விருப்பத்தேர்வு நிறுவனங்களுக்கும் வணிகங்களுக்கும் கிடைக்கவில்லை. 

“Duzzcall மூலம் இப்போது முதன் முறையாக இலங்கையிலும், விரைவில் சர்வதேச அளவிலும், வணிகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை டேட்டா அழைப்புக்கள் மூலம் அழைக்கலாம், அத்துடன் அவர்களின் சாதாரண அலுவலக தொலைபேசி அமைப்பில் அவர்கள் பயன்படுத்தும் அனைத்து அழைப்புச் செயற்பாடுகளையும் குறைவின்றி மேற்கொள்ளும் அதே வேளையில், அவர்களின் தொலைபேசி கட்டணங்களை பெருமளவில் குறைக்க முடியும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உங்கள் வாடிக்கையாளர்கள் Duzzcall ஒருங்கிணைப்புடன் உங்கள் வணிக மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்திருந்தால், அழைப்புகள் டேட்டா அழைப்புகளாகக் கட்டணம் விதிக்கப்படும், இதனால் அவை நிலையான அழைப்புகளை விட மிகவும் மலிவானதாக இருக்கும்.”

Duzzcall இன் இயக்குநர் திரு. சஜீவன் சச்சிதானந்தன் கூறியதாவது: “Duzzcall மூலம் அனைத்து அளவிலான நிறுவனங்களும் அனைத்துத் தொழில்துறைகளிலும் உள்ள நிறுவனங்களும்  பயனடையலாம். இதில் வங்கிகள், காப்புறுதி நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள், பயண முகவர் நிறுவனங்கள் மற்றும் ஹோட்டல்கள் ஆகியன உள்ளடங்கும்.”

Duzzcall இன் எளிய மற்றும் மலிவு விலைக் கட்டமைப்பில், ஒரு-முறை நிறுவல் கட்டணம் மற்றும் விளக்கமான ஈ-பில்களுடன் கூடிய ஒரு லைனுக்கான மாதாந்தச் சந்தாக் கட்டணம் ஆகியவை அடங்கும்.

Duzzcall மொபைல் செயலியானது Apple Store, Google Play Store மற்றும் Windows Store ஆகியவற்றிலிருந்து பதிவிறக்கம் செய்யக் கிடைக்கிறது. www.duzzcall.com இல் Duzzcall ஐப் பார்வையிடவும்.


Share with your friend